Tuesday, July 9, 2024

சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்



'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்

புத்தளம் மரிக்கார்

'காணாமல் போனவர்கள்' கடந்து...
'என்னை தீயில் எறிந்தவளை' தொடர்ந்து...
'தேவதை போகும் தெரு'வில் நடந்து...
சுமார் 17...! 
புத்தகம் என்னும் சிந்தனைப் பூங்காக்களை கட்டிமுடித்து...
அஷ்ரப் சிஹாபிதீன் எனும் ஆளுமையின்...
18 ஆவது படைப்பாக... அதேவேளை அவரது 4 காவது கவிதைத் தொகுப்பாக...
காலத்தின் கரங்களுக்கு வந்திருக்கிறது...
இந்தக் கவிதைப்  புத்தகம்... 
'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்...'
ஒரு சக படைப்பாளனாய்இ முதற்கண்...
எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும்... பிரார்த்தனைகளையும்...!
நூலாசிரியருக்கு இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்...!




சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்...!
அழகிய அட்டைப்படம்...
12ஓ18 சென்ரி மீட்டரில் ஓர் உலகம்... 
எப்போதும் எங்கும் எடுத்துச் செல்ல...
வசதியான நீள அகலம்...
'யாத்ரா'வின் வெளியீட்டில்இ ழுஉவழடிநச 2023 இல்... 
நிகழ்ந்திருக்கிறது...
இந்த இலக்கிய பிரசவம்...!

000

51 தலைப்புகள்...
58 கவிதைகள்...
102 பக்கங்கள்...!
இந்த வெளியீட்டின் சாராம்சம்...!

000

புத்தகத்தை திறந்து உள் நுழைகிறேன்....
அங்கே...
ஒரு அழகான வாசலை தெரிவு செய்திருக்கிறார் ஆசிரியர்...
சுஆ நவ்ஷாத் இன் அழகிய அணிந்துரை...
இதயத்தில் ஏறி அமர்ந்துகொள்கிறது....
இந்த கவிதைத் தொகுப்பைஇ கட்டியணைத்து முத்தமிடும்...
உணர்வுதந்து எம்மை உள்ளே அனுப்பி வைக்கிறது...
தமிழ்வாள் சுழற்றிய... 
தன் இலக்கியத்தால் மருதம் மனக்கச் செய்த...
ஓர் எழுத்து விஞ்ஞானியான... 
அஷ்ரப் சிஹாப்தீனின்... கண்டுபிடிப்புகளை காண விழைகிறோம் என்ற...
நம்பிக்கை தந்து... நகரச் செய்கிறது...! அந்த வாசல்...

000

முன்னுரை கடந்து...
கவிதைகளுக்குள் நுழைகிறேன்....!
இரண்டு கவிதைகளை கடக்கும்போதே...
இந்தப் புத்தகம்... கனதியானது என மனது சொல்கிறது....!
இன்னும் நகர... 
விசாலமான தோர் பார்வைப் பரப்பில் நான் பயணிப்பது விளங்குகிறது...!!
பசித்தவர்களைப் பார்க்கிறேன்...
வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களை வாசிக்கிறேன்...
கேள்வி கேட்டதால்...
தெருவில் செத்துக் கிடக்கும் ஒரு அப்பாவியை அவதானிக்கிறேன்... 
கொடுக்கு முளைத்த கரப்பான் பூச்சியொன்று...
புயள உலடiனெநச ஐ தரமறுக்கும் காட்சிகளை காண்கிறேன்...
தனலில் எரியும்... 
தன் தாயின் ஜனாசாவைக் கேட்டுக் கதறும்....
அந்த உழஎனை கால சிறுவனின் தலை தடவி நகர்கின்றேன்.... 
விலைவாசியை எதிர்த்து....
சந்தையில் சில புழுக்களை சந்திக்கிறேன்....
இன்னும் நகர்ந்து...
இலக்கியத்தை...
இருதயத்தின் ஈர உணர்வுகளைஇ பகிடி வதையின் மடமை வெளிகளை....
காஷ்மீரின் கண்நீத்துளிகளை கண்கலங்கப் பார்க்கிறேன்...

000

இந்தப் புத்தகம்... சில பக்கங்கள் அல்ல...
பல்வேறு சமூக வீதிகளில்...பல மைல் தூரம்...! 
என் இதயத்தை அழைத்துச் செல்லும் விசாலம் என்பதை புரிந்துகொள்கிறேன்...!

000

ஓரு கலைவடிவம்...!
எப்போது அன்றாட மனிதர்களின் அவலங்களை அலசுகிறதோ....
ஒட்டுமொத்த சமூகத்தின் உணர்வாக எழுந்து நிற்கிறதோ....
அது... அந்த அளவிற்கு 
காலத்தால் அழியாது வாழும் எனச் சொல்வார்கள்...!
'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்...!'
அந்த வகை இலக்கியம்...!
ஒரு...
சமூகத்தின் சத்தம்...!

000

இந்த நூறு பக்க நூலுக்குள்...!
நான் சுமார் 7 நாட்கள் ஜீவித்தேன்...
சிறியதோர் ஆய்வு செய்தேன்....

000

சுமார் 4 கவிதைகள்....
இனவாதம் - மதவாதத்துடன் மோதுகிறது....
15 கவிதைகள் 
அரசியல் அவலங்கள் மீது அறைந்துவிட்டுப் போகிறது...
6 கவிதைகள்...
பயங்கரவாதம்இ வன்முறை குறித்து வாதாடுகிறது...

000

பாலியல் கொடுமை பற்றி - ஓன்றும்...
ஊடக அடக்குமுறை பற்றி - 3 உம...
ஊடகப் பயங்கரவாதம் பற்றி - 2 உம்..
பகிடி வதை தடுத்து - இன்னொன்றும்...
இங்கே சிந்தனை யுத்தம் செய்கிறது....

000

வறுமையின் வலியை உணர்த்தும்... 5 கவிதைகள்...
லஞ்சம்இ ஊழல் மீது பாயும்... 6 கவிதைகள்...
நீதி கேட்டு தீ எறியும்... 2 கவிதைகள்...
கலாச்சார சீரழிவுகளில் கத்திவீசும்... 2 ஆக்கங்கள்...
இந்த படைப்பிற்குள் அடங்கியிருக்கிறது....

000

சமத்துவம் ... அறியாமை
வாசிப்பு... தேசம்...
முதுமை... மார்க்கம்...  என...
மனதுக்கு மருத்துவம் செய்யும் 
6 கவிதைகளும்...
கவிதைகளையே பாடுபொருளாகக் கொண்ட...
2 கவிதைகளும்... 
இடம்பெற்றிருக்கின்றன....!!

000

ஒரே புத்தகத்தில் இத்தனை உணர்வலைகள்....
இந்த பல்முனைத் தாக்குதல்...
பலபோது. பகுதி நேரக் கவிஞர்களுக்கு வராது....!
இருந்து நின்று பேனா தொடும் இலக்கிய வாதிகளுக்கு இது சாத்தியப்படாது...!!
மக்களோடு மகளாக வாழும்...
மனித ஏக்கங்களோடும்... கண்ணீரோடும்... காலத்தோடும் கலந்திருக்கும்...
பிறவிக் கவிஞர்களாலேயே இந்த ஈடுபாடு சாத்தியம்...
அந்த வகையிலும்...
அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின்...
சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்...!
ஒரு முழுமையான இலக்கியம் என்பதை மனது உணர்கிறது...

000

ஒரு வாசகனாக 
இந்தப் புத்தகத்தை நான் முழுமையாக வாசித்து முடித்தபோது...
இது சுமந்திருக்கும் சில சிறப்புக் கவிதைகள்...
என்னை மிகவும் ஈர்த்தன...
ஒரு உணவின் சுவையை நாவு தீர்மானிப்பதுபோல....
ஒரு நல்ல கவிதையின் சுவையை... அது முடிகின்ற கணப்பொழுதில்... உள்ளம் சொல்லிவிடுகிறது...! 

000

ஒரு உண்மையை சொல்கிறேன்...
'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்...!' என்ற தலைப்பை நான் பார்த்ததுமே...
சுவர்கள்... - காகிதங்கள்...!
சுவர்க்கம் என்பது அதிலே வரையப்பட்டுள்ள கவிதைகள்...!!
இதனைத்தான் கவிஞர்... 
இந்தத்தலைப்பில் உருவகப்படுத்தியிருக்கிறார் என நினைத்திருந்தேன்...!!
ஆனால்இ 76 ஆம் பக்கத்தை புரட்டியபோது...
நான் தலைகீழாய் விழுந்தேன்...
அது அப்படியல்ல...!
குழந்தை உளவியலை உயிரால் பாடிய ஓர் அற்புதக் கவிதை அது....
மொத்தப் புத்தகத்தில்... நான் கண்கலங்கிய ஓர் இடம் அது....!

000

வாசிக்கிறேன் கேளுங்கள்...
'குழந்தைகள் உள்ள...
எல்லா வீடுகளின் சுவர்களும் 
அழகு பெறுகின்றன...
வண்ணக் கோடுகளைக் கொண்டு...
தாய்க்கொரு த்ஹஜ்மகாலையும்...
தந்தைக்கொரு சுவர்க்கத்தையும்...
குழந்தைகள் வரைந்து விடுகின்றன...
பொய்களும் கசடுகளும் அற்ற 
ஓர் கனவுலகத்தை அக்கீறல்களுக்குள் 
அவை அடக்கி வைத்திருக்கின்றன...
அவ்வுலகத்துக்குள்...
அவை தேவதைகளுடன் விளையாடுகின்றன...
தேநீர் அருந்துகின்றன...
பறந்து திரிகின்றன...
இறைவனுடன் உறவாடுகின்றன....'
ஒரு குழந்தை..
உங்கள் சுவர்களில் கீறுகிறது என்றால்...
அதை அனுமதியுங்கள்...!
சுவர்களிலாவது சுவர்க்கங்கள் உருவாகட்டும்..
என்ற வேண்டுகோளோடு முடிகிறது
அந்தக் கவிதை...!!

000

தலைப்பை விளங்கிக்கொண்ட தருணம் அது...!
அந்த மெல்லிய உணர்வின் வீச்சிலிருந்து விடுபட...
என் சின்ன மகனை அழைத்து முத்தமிட்ட ஓர் பொழுதது...!
உள்ளம் மட்டுமல்ல... 
ஒரு கவிதையின் சுவையை கண்களும் வெளிப்படுத்தும் என 
என்னை நான் திருத்தி எழுதிக்கொண்ட தருணம் அது...!!
என்னை அசைத்த அந்தக் கவிதைக்கு 
விஷேட வாழ்த்துக்கள்...!

000

பாடுபொருள் தேர்வு என்பது...
ஒரு கவிஞனின் கனதியை காட்டும் இன்னொரு கருவி...

000

03 ஆம் பக்கத்தில்...
'சொல்...' என்றொரு நுண் கவிதை...
எங்கு தேடி எடுத்தாரோ இப்படி ஓர் என்னைக் கரு...
ஒரு சொல்லை 
பயன்படுத்தும் பக்குவம் பற்றி.....
'சர்வாதிகாரி பயணம் போகும் வாகனத்தில்...
ஒரு வெடிகுண்டை பொருத்தும் 
நுணுக்கம் வேண்டுவது....! ' அது என்கிறார்....
சிரித்துச் சுவைக்கிறேன்...

000

இனவாதிக்கு 
இப்படியொரு கருத்தை சொல்கிறார்...
'தேசப் பற்று என்பது பெரும்பான்மை அல்ல...
மதம் மீதான நேசமும் அல்ல....
அது...
அவன் நடைபழகிய மண்ணோடும்...
அம் மண்ணிலிருந்து பெற்றருந்திய நீரோடும்...
அம் மண் வீசி...
அவன் சுவாசித்த காற்றோடும் சம்பந்தப் பட்டது...!!'
என்கிறார்...!
இந்த வசனங்களை... 
இலங்கையின் பாடப்புத்தகத்தில் சேர்க்கவேண்டும்... என
எனக்குள் கூறிக்கொள்கிறேன்...!

000

கருத்துகளால் கனதியாகும் கவிதைகள்...
கதைசொல்லும் முறையால் கனதியாகும் கவிதைகள்...
அடுக்கு மொழியால்...
உவமான... உவமேயங்களால் மனதில் நிற்கும் கவிதைகள்...
என பல்சுவைகள் பரவிக்கிடக்கிறது....
இந்த தொகுப்பில்...!

000

29 ஆம் பக்கத்தில்..
நான் புன்னகைக்கிறேன்...
என்றொரு கவிதை...
எதிர்ப்பையும் வெறுப்பையும் 
எண்ணங்களால் கடந்து செல்லும் 
மனோ நிலை கவிதை...!
'உனது வெறுப்பு ஒரு துப்பாக்கி எனில்....
அதனை பற்றியெடுத்து 
ஒரு வீணை செய்துகொள்ள விரும்புகிறேன்...'
அவை - உன் 
பார்வைகளாக வெளிப்படுகையில்...
கௌதம புத்தரும்...
மூஸாவும் ஈஸாவும்...
முஹம்மதும் எனக்கு...
இயல்பாகவே ஞாபகம் வந்துவிடுகிறார்கள்...!!' என...
ஆன்ம சக்திக்கு முன்னால்...
எந்த மிருக பலமும் நிற்க முடியாத உண்மை உணர்த்துகிறது...!!

000

பணத்தின் பாஷை...
என்றொரு பஞ்ச் கவிதை வரும்....!
அதன் இறுதி வரிகள்...
இரத்தத்தில் இனிக்கும்...!
'யாழ்ப்பாணக் குயிலுக்கும்...
அம்பாந்தோட்டை குயிலுக்கும் ஒரே குரல்...
எல்லா ஊர் நாய்களுக்கும் 
ஒரே பாஷை...
ஆனால்...
தனித்தனி பாஷைகளால்..
தனிமைப்படுத்திக்கொண்டது...
மனித இனம் மட்டும்...!
வெவ்வேறு மொழிதெரிந்த இருவர்...
ஒருவரோடொருவர் உரையாடிக்கொள்ள முடிவதில்லை...
ஆனால்...
வெவ்வேறு மொழிபேசும் இருவரில் ஒருவர்...
மற்றவருக்கு பணத்தைப் பொத்தி வைத்தால்..
எல்லாமே புரிந்து விடுகிறது...!!'
என்று லஞ்சம்-ஊழலை தகர்த்து முடியும்...!!

000

'காட்சிகள்' என்றொரு கவிதை...
தொலைக்காட்சித் தொடர்களின் தொல்லையை சாடுகிறது...!!
கேவலங்களை உழவெநவெ ஆக்கும்..
கொள்கைகளை கொழுத்துகிறது...!!
'கொலையும் பிழையும் செய்தபடி..
வன்மத்தோடு வாழ்வதையே...
சித்தரித்துக்கொண்டிருக்கும்    
தொலைகாட்சி திரைகளுக்கு முன்னால்...
உட்காந்திருக்கிறார்கள் 
தம்மைத் தொலைத்தவர்கள்...!!' 
என்ற யதார்த்தம் பேசுகிறது...!!

000

இன்னும் சில கவிதைகள்...
என் 
மொழிபெயர்க்கும் ஆற்றலுக்கு அப்பாட்பட்டது....

000

'துளி' என்றொரு கவிதை...
அதன் பாரத்தை நீங்கள் பார்த்துத்தான் விளங்கவேண்டும்..!!
 எம் சமூகத்தின் சிறுமை பேசும்...
'எப்படிச் சொல்ல..' என்றொரு கவிதை...
அதன் வெப்பத்தை நீங்கள் உருகித்தான் உணரவேண்டும்...
'எல்லைப் பெருஞ்சுவர்' எனும்...
ஒரு நண்பனை சந்திக்க நடந்து செல்லும் கவிதை...
அதை நீங்கள் அந்த எழுத்தில் மட்டுமே சுவைக்க முடியும்...

000

'பணம் கொடுத்து பொருள் வாங்குவது கூடப்...
பிச்சை எடுப்பது போலாயிற்று...'
போன்றஇ கேட்டதும் சுடும் நினைவு வரிகளை...
'காணும் திசையெல்லாம் கலையிழந்து கிடக்கிறது தேசம்....
ஒரு தூக்கு தண்டனைக் கைதியின் முகத்தைப்போல...'
போன்ற உயிர் ததும்பும் ஒப்பீடுகளை....
சாயமழிதல்...
எறும்பு...
விசாரணைக் கமிஷன்... போன்ற...
நறுக்கெனக் குத்தும்... 
நாட்டுக்கான சிந்தனைகளை....
இந்த... 
சுவர்களில் உருவான சுவர்க்கத்தின் துளிகளை...
ஒவ்வொரு வாசகனும்...
முழுமையாக பார்க்கக் கிடைப்பது...
பாக்கியம்.. என்பேன்..!!

000

கொரோனப காலத்தில்...
உலகமே வீடுகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஒரு வேளையில்...
ஒரு நூலின் மூலம்...
சப்தமில்லாமல் இந்த சாதனையை செய்திருக்கிறார்...
கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்...!
இந்தக்கவிதைகளுக்கும்... 
அதன் இலக்குகளுக்கும்... இறைவன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்...!!
இந்த சமூகத்துக்கான படைப்பை...
வல்ல ரஹ்மான் ஒரு இபாதத் ஆக அங்கீகரிக்கட்டும்...!
----
புத்தளம் மரிக்கார் 
07-07-2024


 (07.07.2024 அன்று கொழும்பு தெமடகொட வைஎம்எம்ஏ மண்டபத்தில் நிகழ்த்தப்பட்ட உரை)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: