இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களது குரல் எல்லோருக்கும் பரிச்சயமானது. இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணி புரிந்தவர். ஜாமிஆ நளீமிய்யாவின் பழைய மாணவர். இலக்கியத் தளத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் இவர் கவிதைகளுக்கான ‘யாத்ரா’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். இதுவரையில் இவரது ஐந்து புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 2008ல் கவிதைக்கான தேசிய அரச சாஹித்ய விருது பெற்றவர்.அண்மையில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இவர் இயங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.
சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹ{த்தீன்
* பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...
சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன். எழுத்தாளர் லெ.முருகப+பதி இலங்கைக்கு வந்த நேரம் மல்லிகையில் ஒரு சந்திப்பு நடந்திருக்கின்றது. அந்த சந்திப்பில் டொமினிக் ஜீவா அவர்கள் தமிழ் எழுத்தாளர்களை அதாவது தமிழில் எழுதும் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் அனைத்து எழுத்தாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்காக இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டுமென சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தின் அடிப்படையிலேயே திரு.முருகபூபதி இம்முயற்சியில் இறங்கினார். இதனை முன்னெடுத்துச் செல்ல 2010ல் சர்வதேச எழுத்தாளர் ஒன்றியம் என்ற அமைப்பு எழுத்தாளரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.தி.ஞானசேகரன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அவ்வளவுதான். வேறு எந்தப் பின்னணியும் இந்த மாநாட்டுக்கு கிடையாது.
* உங்களை இம்மாநாட்டின் செயலாளராக ஏன் தெரிவு செய்தார்கள்?
ஏற்கனவே 2002ல் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்திய செயலாளர் என்ற வகையில் எனது பங்களிப்பைப் பெறுவதற்கு ஒன்றியத்தின் தலைவர் தி. ஞானசேகரன் விரும்பினார். அவர் ஒரு மென்மையான மனிதர். முதலில் என்னைச் செயற்குழுவுக்குள் உள்வாங்கினார்கள். மாநாட்டுக் காரியங்கள் மிக மெதுவாகவே இடம் பெற்றன. எனவே வேகமாக நான் இயங்குவேன் என்ற நம்பிக்கையில் என்னை மாநாட்டுக்கான செயலாளராக மாற்றினார்கள். ஆனால் இந்த மாநாட்டின் வெற்றியில் பலரது பங்களிப்பு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் யாருடையவும் வெற்றியாக இது அமையவில்லை. திரு. முருகபூபதி, திரு. ஞானசேகரன் ஆகியோரிடமிருந்து பிரச்சினைகளை அணுகும் முறை, அதைத் தீர்ப்பதற்கான வழி வகைகள், மாற்று வழிகளை அறிதல்; போன்ற பல விடயங்களை நான் கற்றுக் கொண்டேன்.
* மாநாட்டின் பேராளர்களாக அதிகமான முஸ்லிம்கள் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது. அதுபற்றி...
அது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பேராளர்களில் கிட்டத்தட்ட 45 வீதமானவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள். மாநாட்டுக் குழுவுக்கே அது மகிழ்ச்சியையளித்தது. உண்மையில் முஸ்லிம்கள்; வேறு தமிழர்கள் வேறு என்கின்ற வகையில்; அங்கு எதுவுமே பார்க்கப்படவில்லை. தமிழ் எழுத்துத் துறையிலும் இலக்கிய ஆர்வத்திலும் முஸ்லிம்கள் பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது துலாம்பரமாக எடுத்துக் காட்டியுள்ளது.
* தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் முன்னேற்றுவதில் முஸ்லிம்களது பங்களிப்பு பற்றி...
இந்த மாநாட்டைப் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். முஸ்லிம்கள் எப்போதும் அதற்குப் பங்களிப்புச் செய்கிறார்கள். அத்தோடு முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழைப் பேசத் தயங்கவில்லை. பிரச்சினையான காலகட்டத்தில் தமிழர்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தபோது முஸ்லிம்கள் தைரியமாகத் தமிழைப் பேசினார்கள் என்பதை மாநாட்டில் பல தமிழ்ச் சகோதரர்கள் வெளிப்படையாகவே தெரிவித்தார்கள்.
* மாநாட்டில் எந்தெந்த வகைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு அமைந்திருந்தது?
இந்த மாநாட்டுக்கான செயலாளரே அஷ்ரப் சிஹாப்தீன் என்ற ஒரு முஸ்லிம்தான். செயற்குழவில் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், திக்குவல்லை கமால், மேமன் கவி ஆகியோர் இருந்தார்கள். ஆரங்குகளுக்கான மேற்பார்வைகளுக்கு நியாஸ் ஏ சமத், மர்ஸ_ம் மௌலானா ஆகியோர் உதவினார்கள். மர்ஸ_ம் மௌலானா ஒரு கருத்தரங்கை முன்நின்று வழி நடத்தினார். இரண்டு நாள் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றில் எஸ்.எச்.எம். ஜமீல்; தலைமை வகித்தார். ஆய்வரங்குகளில் கலாநிதி நுஃமான், கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ், விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹ், எழுத்தாளர்களான அல் அஸ_மத், எஸ் முத்துமீரான், மருதூர் ஏ மஜீத், பத்திரிகையாளர் என்.எம். அமீன் ஆகியோர் இணைத் தலைமை வகித்தார்கள். ஆய்வரங்க மதிப்பீட்டாளர்களாக கவிஞர்களான இ.பதுருத்தீன் (இந்தியா), டாக்டர் தாஸிம் அகமது, சத்தார் எம். பிர்தௌஸ் ஆகியோர் பங்கெடுத்தார்கள்.
ஒரு முக்கியமான கருத்தரங்கின் மூன்று உரையாளர்களில் இருவர் முஸ்லிம்கள். ஒருவர் பெருவெளி – மிஹாத். மற்றையவர் மீள்பார்வை ஆசியரியர் சிராஜ் மஷ்ஹ_ர். இவர்கள் இருவரது உரைகளும் அரங்கில் விதந்துரைக்கப்பட்டன. இந்த அரங்கை நெறிப்படுத்தியவன் நான் என்பதால் இதை நன்கறிவேன். ஏறக்குறைய பதினொரு முஸ்லிம்கள் ஆய்வரங்குகளில் கட்டுரை சமர்ப்பித்தார்கள். லண்டனிலிருந்து வருகை தந்திருந்த சகோதரர் எஸ்எம்.பஷீர் ஓர் அரங்கில் கலந்து கொண்டு ஆற்றிய உரை பற்றி என்னிடம் சில நண்பர்கள் விதந்துரைத்தார்கள்.
அருள்வாக்கி அப்துல் காதர், அறிஞர் சித்தி லெப்பை, அல்லாமா ம.மு. உவைஸ் ஆகியோரின் பெயர்கள் அரங்குகளுக்குச் சூடப்பட்டிருந்தன. சிறப்புரையாளர்களில் ஒருவராக தோப்பில் முகம்மது மீரான் கலந்து கொண்டார். இறுதிநாள் நிகழ்ச்சியின் சிறப்பதிதிகளில் ஒருவராக கலாநிதி எம்.ஏ.எம்.ஷ_க்ரி அழைக்கப்பட்டிருந்தார். அவ்வேளை அவர் திடீர் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தமையால் கலந்து கொள்ளவில்லை.
* இவ்வளவும் எப்படிச் சாத்தியமாயிற்று?
இதே வினாவை அவ்வப்போது சந்தித்த சில முஸ்லிம் நண்பர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். என்னிடம் ஒரு மூத்த முஸ்லிம் எழுத்தாளர் ~உங்களை எப்படி அவர்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார்கள்;?| எனக் கேட்டார். இந்தக் கேள்வி பிழையானது அல்ல. கடந்த காலக் கசப்புணர்வுகளின் தாக்கம் அது. ஒரு காலகட்டத்தில் நிறைய கசப்புணர்வுகள் இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது நாம் அதனையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். இந்த மாநாட்டின் பெறுபேறுகளில் ஒன்றாகவும் அதனைக் கொள்ள முடியும். அங்கு வேற்றுக் கண்ணோடு ஒரு விடயமும் பார்க்கப்படவில்லை. பொருத்தமானவருக்குக் களம் வழங்கப்பட்டது. தலைவர் முதற்கொண்டு எமது செயற்குழு அங்கத்தவர்கள் அனைவரும் இந்த விடயத்தில் எவ்விதமான வேற்றுமையையும் காட்டவில்லை. நான் அப்படிச் சொல்வதை விட இப்படியொரு பார்வை அவர்களிடம் எந்த ஒரு கணத்திலும் இருந்ததாக என்னால் சொல்ல முடியவில்லை.
* இந்த மாநாட்டின் அடைவுகள் பற்றிச் சொல்ல முடியுமா?
இரண்டு சமூகங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இந்த மாநாடு கணிசமான பங்காற்றியுள்ளது. இரண்டு சமுதாயத்தின் எழுத்தாளர்களுக்கும் இடையிலிருந்த இடைவெளி இல்லாமல் போயுள்ளது. புதிய தலைமுறைப் படைப்பாளிகளுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. பலரது திறமைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. துமிழ் இலக்கியச் சூழலில் சங்கங்களாகவும் குழக்களாகவும் ஈகோ மன நிலையினாலும் பிரிந்து கிடக்கும் எழுத்தாளர்களை ஒன்றிணைப்பதைப் போல் சிரமமான ஒரு பணி வேறு எதுவும் கிடையாது. அந்த வகையில் ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாள நண்பர்களைக் காணவும் அவர்களோடு எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பும் பகிர்வும் நல்லுறவை வளர்க்கவும் மேலும் புதிய உத்வேகத்துடனான பல இலக்கியங்கள் பிறக்கவும் விட்டுக் கொடுப்புகள் நிகழ்வதற்கான நட்பு மேலெழுவதற்குமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மிகத் தீவிரமாகவும் வேகமாகவும் இயங்கிய கலை இலக்கிய உலகம் போரின் காரணமாக ஸ்தம்பித்தது. இந்த மாநாட்டின் பின் மீண்டும் ஒரு ஆர்வம் துளிர்விட்டிருக்கிறது. மொத்தமாகச் சொல்வதானால் இதை தமிழ் எழுத்துச் சூழலில் ஒரு புத்தெழுச்சி என்று சொல்லுவேன்.
* இந்த மாநாட்டுக்கு எதிராகப் பலமான குரல்கள் எழுப்பப்பட்டன அல்லவா?
ஆம்! அதை ஒரு சிரேஷ்ட எழுத்தாளரேதான் தொடங்கி வைத்தார் என்று அறிய முடிகிறது. பிறகு அது வௌ;வேறு பரிமாணங்களை எடுத்தது. அரசியல் பேச வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் சத்தமிட ஆரம்பித்தார்கள். பலர் இதை வைத்து அரசியல் நடத்தத் துணிந்தார்கள்.
வெளிநாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகந்து பிரஜாவுரிமை கிடைக்காதவர்கள், வெளி நாட்டில் வாழும் இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை டாலர்களையும் யூரோக்களையும் பெற்றுப் பதிப்பித்துப் பிழைப்பு நடத்துபவர்கள், தமிழ் நாட்டில் சில அரசியல்வாதிகள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆங்காங்கே சிலர் சொல்லக் கேட்டேன். எதிர்க் குரல் எழுப்பிய அநேகருக்கு முகம் கிடையாது. கள்ளப் பெயர்களில் இணையங்களில் சேறு இறைத்தார்கள். திரு. முருகபூபதியைக் குறிவைத்துக் கேவலமாகத் தாக்கினார்கள்.
சில இணையத் தளங்கள் மாநாட்டை ஆதரிப்பவர்கள் இலங்கை ஜனாதிபதியின் பிரதிநிதிகள் என்றும் எதிர்ப்பவர்கள் தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்ற அடிப்படையிலிருந்தே செய்திகளை வழங்கின. இதன் மூலம் சில இணையத் தளங்களின் உண்மையான சொரூபங்களை அடையாளம் கண்டு கொள்ள முடிந்திருக்கிறது. ஒரு கட்டத்துக்குப் பிறகு இவற்றுக்குக் கவனம் செலுத்துவதில்லை என்ற முடிவை செயற்குழு மேற்கொண்டது. எதிர்க் குரல்களுக்கு அஞ்சி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனமைக்காக பலர் வருந்துவதாகப் பின்னர் அறிய வந்தோம்.
* சில முக்கியமான இந்திய எழுத்தாளர்கள் மௌனம் காத்தார்கள் அல்லவா?
அவர்களில் சிலர் வர விரும்பியிருந்திருக்கக் கூடும். தமது நூல்களைப் புறக்கணிக்கக் குரல் கொடுப்பார்கள் என்ற பயத்தில் வராமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னிடம் வேறு கருத்து ஒன்று இருக்கிறது. ஒரு இலவச விமானப் பயணச் சீட்டுக் கொடுக்காமல் தமிழுக்காகவோ தமிழ் பேசும் மக்களுக்காகவோ இதுகாலவரை இலங்கைக்கு வந்த இலக்கிய முக்கியஸ்தர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சிந்தித்துப் பாருங்கள்! ஆப்படி வந்திருந்தால் அது அபூர்வமாகவே இருக்கும். அந்தப் பயணத்தின் பின்னணி வேறாகவே இருக்கும். எனவே முக்கியமான இந்திய எழுத்தாளர்கள் அல்லது இலக்கியப் படைப்பாளிகள் என்று கருதப்படுபவர்கள் குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
* மாநாட்டின் பிறகு உங்களுக்குக் கிடைத்த எதிர்வினைகள்?
புல நண்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் சிரேஷ்ட இலக்கியவாதிகளும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். ஆந்தப் பாராட்டு எனக்கு மட்டும் உரித்தானது அல்லவே. சுpலர் எனது மின்னஞ்சலுக்கு வைரஸ் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது முகமூடிகளுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என்றுதான். தமிழ் மொழி தமிழனுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களினதும் பிறப்புரிமை அது. நாங்கள் அதைத்தான் பேசுகின்றNhம். அதில் தான் எழுதுகின்றNhம். அதைக் கொண்டுதான் வாழ்கிறNhம். எனவே, அதில் எம்மை நெறிப்படுத்துவதற்கு யாருக்கும் யோக்கியதை இல்லை.
* இஸ்லாமிய இலக்கியத்திற்கான இடைவெளி இன்னும் நிரப்பப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. முஸ்லிம் எழுத்தாளர்கள் இணைந்து அந்த இடைவெளியை நிரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதா?
சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. இஸ்லாமிய இலக்கியம் அல்லது இலக்கியம் என்ற ரீதியில் நாம் பேசவேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. நாம் கட்டாயம் பேசி ஆகவேண்டிய பிரச்சினைகள் அதிகமாகவே உள்ளன. துரதிஷ்டவசடமாக நாம் பலராகப் பிரிந்து நிற்கிறNhம். எமது தனித்துவக் கலை அம்சமாக அடையாளப்படுத்திக் காட்ட எமது கைகளில் எதுவுமே இல்லை.
நடந்து முடிந்த சர்வதேச எழுத்தாளர் மாநாடு மற்றொரு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தைப் பல இலக்கிய நெஞ்சங்களில் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையளவில் நடத்துவதாக இருந்தாலும் ஏறக்குறைய 20 லட்சம் ரூபாய்கள் தேவைப்படும். இதை எங்கு எப்படிப் பெற்றுக் கொள்வது என்பதுதான் பிரச்சினையே.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை நான் கூற விரும்புகின்றேன். யார் யாரெல்லாம் இயக்கங்களுக்கு அப்பால், அரசியலுக்கு அப்பால் இலக்கியத்தினூடாக சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்களுக்கு எப்போதும் எனது வீடு திறந்திருக்கின்றது. நான் செயற்படத் தயாராக இருக்கிறேன். நிறைய இளைஞர்களும் படித்தவர்களும் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களது உதவியும் ஒத்துழைப்பும் எனக்குத் தேவை. எனவே, அப்படி ஆர்வமுள்ளவர்கள் எப்போதும் என்னைச் சந்திக்கலாம்.
* இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பற்றிய உங்களது அவதானத்தைச் சொல்ல முடியுமா?
உண்மையில் அனைத்தையும் என்னால் வாசிக்க முடிவதில்லை. பிறை, முஸ்லிம் முரசு, மணிவிளக்கு, மாதிரி ஒரு இஸ்லாமிய இலக்கிய சஞ்சிகையை எம்மால் நடத்த முடியாமல் இருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கின்றது.
* இறுதியாக சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஒன்றைக் குறிப்பிடுங்கள் என்றால் எதைச் சொல்வீர்கள்?
பொன்னாடைகள், பூமாலைகள் இல்லாமல் ஒரு சர்வதேச மாநாடு நடந்திருப்பது குறிப்பிடத் தக்கதுதானே!
(நன்றி: மீள்பார்வை - இதழ் 215 - பெப்ரவரி 04, 2011)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
3 comments:
கவிஞரே
இதைவிட அழகாக, ஆழமாக, அருமையாக யாரலும் சொல்ல முடியாது பாராட்டுக்கள்
கவிஞரே
இதைவிட அழகாக ஆழமாக அருமையாக வேறு யாராலும் எழுத முடியாது பாராட்டுக்கள்
கவிஞரே
இதை விட அழகாக ஆழமாக அருமையாக வேறு யாராலும் சொல்ல முடியாது வாழ்த்துகள்
Post a Comment