Tuesday, June 26, 2012

சந்தோஷச் சனி!“ஹலோ... தல... எப்பிடி....?”


“ஆ... ஆ... நல்லலாயிருக்கோம்... பாத்தா தெரியல்லியா...?”


“சூடாக வேணாம்... தல... சும்மா ஒரு பாசத்துல சுகம் விசாரிகிகறதில்லையா... அதுதான்!”


“என்ன தீடீர்னு தல... மூக்குன்னுட்டுக்கிட்டு...?”


“சனிக்கிழமை காலையில எங்கேயிருப்பீங்க தல...?”


“நாங்க எங்க போறது... ஏதோ கிடச்சதத் தின்னுக்கிட்டு இங்கேதானே கிடக்கப்போறம்...!”


“அது இல்ல... சனிக்கிழமை காலைல வீட்டுல இருப்பீங்களா?”


“வீட்டுலதான் இருப்பேன்.... காலைல மார்க்கட் போயிட்டு வீட்டுலதான் இருப்பேன்... என்ன விசயம்....?”


“வீட்டுல டீவியெல்லாம் வேல செய்யுதுதானே...?”


“வீட்டுல இருந்தா டீவி பாக்கிறதுதானே நம்ம தொழில்... சனிக்கிழமை ஏதாச்சும் விசேசமா...?”


“வசந்தம் டீவி ... பார்ப்பீங்களா.....?”


“ஓ.. அதுக்கென்ன... படமெல்லாம் போடுவாங்க... தமிழ்ச் சனல்தானே... வேற என்னத்தைப் பார்க்கிறது?”


“சரியா... பத்துமணிக்கு ‘தூவானம்” என்டு ஒரு நிகழ்ச்சி போகுது... ”


“தெரியுமே... அப்பப்போ பாத்திருக்கேன்...”


“அதுல பாருங்க... நாம பேசுறம்....!”


“நாம எண்டா...?”


“நான் பேசுறன்.”


“ஓஹோ... அதுக்குத்தான் இப்பிடிப் பீடிகையா... ரொம்பக் காலமா ரூபவாஹினியில நீங்க பேசினத்தக் கேட்டுக்கிட்டுத்தானே இருந்தோம்... வசந்தத்துலயுமா...?”


“கோவிச்சுக்காதீங்க... தல... அது வேற... இது வேற.....”


“இது வேறன்னா... என்னா அது?”


“இந்த நிகழ்ச்சியில நம்மளப் பேட்டி எடுத்திருக்காங்க....!”


“.............................................?”


“அப்புடிப் பாக்காதீங்க... ஒரு அரை மணித்தியாலம்தான்... அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க...”


“சரி... எங்க தலை விதி......”


“அப்புடியே மத்தியானம் சாப்பிட்டுட்டு ஒரு நல்ல தூக்கம் போட்டுடுங்க...”


“ஓ.. இதெல்லாம் நீங்க சொல்லித்தான் நாங்க செய்யணுமாக்கும்! மத்தவன் என்ன என்ன செய்யணும்னுதான் ஒவ்வொருத்தனும் இப்போ உபதேசம் பண்ணுறானுங்க...”


“கோவிச்சுக்காதீங்க.. தல...!”


“சரி... ஆளை விடுங்க.... எனக்கு வேலையிருக்கு...”


“கொஞ்சம் இருங்க.... தல...!”


“சொல்லித் தொலையுமய்யா... கெதியாய்...”


“அப்புடியே ஒரு நாலரை போல கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு வந்திடுங்க....”


“ஏன்....?”


“கடுப்பாகாதீங்க... தல...!”


“எந்தநேரமும் ஓடிக்கிட்டேதான் இருக்கோம். ஒரு இடத்தில் ஆறுதலா உக்காந்து நாலு பேர் பேசுறதைக் கேட்டு அனுபவிக்கிறது நாலு பேரைச் சந்தி்ககிறது உடம்புக்கும் மனசுக்கும் நல்லது...! நாம இதைப் பற்றி யோசிக்கிறதே இல்லை....!”


“பிரசங்கத்தை நிப்பாட்டிட்டு விசயத்துக்கு வாங்க... தமிழ்ச் சங்கத்துல என்ன நடக்குது அன்னிக்கு?”


”நம்ம புத்தகம் வெளியாகுதுல்ல... ‘ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழம்....!”


“.......................”


“அது என்ன பல்லுக் கடிக்கிற சத்தமா... வாய்க்குள்ள ஆட்டா ஓடுறமாதிரிக் கேட்குது,,”


“...................................”


“என்ன அப்புடி மொறைக்கிறீங்க...... ஏன் கல்லெடுக்கிறீங்க.... ஐயோ!”

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

7 comments:

Shaifa Begum said...

ஹா...ஹா. சேர் இந்தப் படத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு.....பக்கத்துல இருக்கிறவங்களயும் கடித்து குதறிவாரோன்னு.......
புத்தக வெளியீடு ..சிறப்பாக, திருப்தியாக , ச்நதோசமாக நடந்தேற இறை பிரார்த்தனைகள்..........

நாச்சியாதீவு பர்வீன். said...

என்னா ஒரு வில்லத்தனம், இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பிங்களோ..நல்லாத்தான் யோசிக்கிறீங்க..

பி.அமல்ராஜ் said...

அப்ப சனிக்கிழம எங்கியாச்சும் ஓடித்தொலைஞ்சிட வேண்டியதுதான்.. அல்லாட்டி நமக்கும் சனிப் புடிச்சிடும்..

ASHROFF SHIHABDEEN said...

புதுசா வேற புடிக்கணுமாக்கும்!

Lareena said...

:)..

மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா.. ரசித்தேன் !

AH said...

புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் தல..