Sunday, November 4, 2012

பூடகப் பேச்சும் புரிதலும்



பூடகம் என்பது நமக்கெல்லோருக்கும் பரிச்சயமான ஒரு சொல்.

ஒரு விடயத்தை இன்னொரு வார்த்தையால் சொல்வதை இச்சொல் குறிக்கிறது.

ஒரு விடயத்தை நேரடியாகச் சொல்வதால் ஏற்படும் தாக்கம் பூடகமாக வேறு வார்த்தைகளைப் பயன்படுத்திச் சொல்வதால் ஏற்படுவதில்லை. பூடகமாகச் சொல்வது என்பது ஏறக்குறைய விடயத்தை உணர்த்துவது என்றும் அர்த்தப்படும்.

சுற்றி வளைத்துப் பேசுவது என்று சொல்லப்படுவதும் இந்தப் பூடகப் பேச்சின் ஓரங்கம்தான்.

சிலர் திட்டமிட்டே இவ்வாறு பூடபமாகப் பேசுவதுண்டு. காலதேச வர்த்தமானங்களை அனுசரித்து இவ்வகைப் பேச்சு அமைகிறது.

இயல்பாகவே சில விடயங்களை நாம் வேறு வார்த்தைகள் பயன்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். அமைதியாகவிருந்து நாம் யாரோடு எப்படிப் பேசினோம் என்று சிந்துத்துப் பார்த்தால் இது புரியும்.

இன்னொரு விடயம் இவ்வாறு நாம் பேசுவது சிலவேளை குறித்த நபருக்கு ஏற்படுத்தும் புரிதல் பற்றியது. நாம் பூடகமாகச் சொல்வதைச் சரியாகச் சொல்லவில்லையென்றால் அதனால் வரும் விளைவு தப்பானதாகி விடும். சில வேளைகளில் “இவர் என்னதான் சொல்கிறா?” என்று முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

இன்னொரு வகையில் பூடகப் பேச்சு முடிவை நீங்களே தீர்மானியுங்கள் என்றவாறு அமைந்து விடும். அந்த முடிவு பல்வேறு அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் இருக்கும்.

இனி விடயத்துக்கு வருவோம்.

ஒரு பிஸ்கற் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்ணை ஒரு நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சி நிருபர் பேட்டி காண்கிறார்.

நிருபர் - “எவ்வளவு காலமாக இங்கு வேலை செய்கிறீர்கள்?”

தொழிலாளி - “படிப்பை விட்டதிலிருந்து.. அநேகமாக பதினைந்து வருடமாக என்று நினைக்கிறேன்.”



நிருபர் - “இங்கே உங்களது வேலை என்ன?”

தொழிலாளி - “பிஸ்கற் பக்கற்றுகள் கண்வேயரில் (பெல்ற்) வரும். அவற்றை எடுத்துக் பாரட்போர்ட் பெட்டிகளுக்குள் இடுவது..”

நிருபர் - “இதே லையைத்தான் தொடர்ந்து இவ்வளவு காலமும் செய்து வருகிறீர்களா?”

தொழிலாளி - “ஆமாம்!”

நிருபர் - “இந்தத் தொழிலில் உங்களுக்கு மகிழ்ச்சியா?”

தொழிலாளி - “இல்லாம...? இங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க.. நட்பானவங்க.. சிறையச் சிரிச்சுச் சந்தோஷமா இருப்போம்...!”

நிருபர் - (பதிலில் நம்பிக்கைல்லாமல்) “உண்மையாகவா? உங்களுக்குச் சலிப்பு ஏற்படுவதேயில்லையா?”

தொழிலாளி - ”இல்.........லே! சில நேரங்களில் அவர்கள் பிஸ்கற்றை மாற்றி விடுவார்கள்!”

உங்களுக்கு இந்தப் பதிலிலிருந்து தோன்றுவது என்ன?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: