Tuesday, May 3, 2011

கொன்னுட்டாங்கையா....

பின் லாடனைக் கொன்னுட்டாங்கயாமே... ஏங்க அந்தாளக் கொலை செஞ்சாங்க... அந்தாளு யாரையாவது சுட்டதை யாராச்சும் கண்டாங்களா... குண்டு போட்டதைக் கண்டாங்களா... யார் யாரோ சொன்னதுக்கெல்லாம் போய் யார் யாரையோவெல்லாம் கொலை செய்றது சரிங்கிறீங்களா நீங்க...


அப்போ அந்தாளு ஏன் ஒளிஞ்சு திரிஞ்சான்னு கேட்பீங்க... கொல்லத்தான் தேடுறானுங்கன்னா.. வாங்க மச்சான் இங்கேதான் இருக்கேன்... ஒரு தேத்தண்ணியக் குடிச்சிட்டு அப்புறம் கொல்லுங்கன்னு எவனாச்சும் சொல்வானா என்ன?

நாய்க்கு எந்த இடத்தில அடிபட்டாலும் காலத் தூக்கிற மாதிரி எங்கே குண்டு வெடிச்சாலும் இந்தாள் பேரையே சொல்லிக்கிட்டிருந்தாங்க...

உலகத்துல அதி மோசமான பயங்கரவாதி இந்தாள்தான்னு அமெரிக்கா சொல்லிக்கிட்டேயிருந்திச்சு. தேடுற பட்டியல்லயும் இந்தாளத்தான் முதல்ல வச்சிருந்துச்சு... இப்போ ஆளைப் போட்டாச்சு... ஏங்க.. இனி உலகத்துல ஒரு இடத்திலயும் குண்டே வெடிக்காதா? அமெரிக்கா சொன்ன மாதிரி பார்த்தா இனிமேல் எல்லாப் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்திரணுமே... ஏங்க வந்துடுமா...

நான் வராதுங்குறன்... ஏன்னா இந்தாளு அமெரிக்கா வளர்த்த பிள்ளை... சதாம் ஹ_ஸைன ஈரானுக்கெதிரா வளர்த்த மாதிரி இந்தாளயும் வளர்த்தது அவிய்ங்கதான். ரெண்டு பேரையும் வச்சிக்கிட்டு அவிய்ங்களுக்கு யார் யாரைப் பயங்காட்டணுமோ அதைச் செய்துக்கிட்டே இருந்தாங்க.

ஒரு கட்டத்துக்கு மேல நாம செய்யிறது கிறுக்குத் தனம் எங்கிறது அவங்களுக்கு விளங்க வந்திருச்சி. அதனால உம் பேச்செல்லாம் எந்த நாளுங் கேட்டுக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்கேலான்னு ஒதுங்கப் பார்த்தாங்க.. விடுவாய்ங்களா அவிய்ங்க...

நீங்களே வளர்த்த பிள்ளை... உங்க முகத்துக்கே விரல் நீட்டினா சும்மாவா இருப்பீங்க.. முறிச்சிட மாட்டீங்க..? அதத்தான் அவிய்ங்க செய்திருக்காய்ங்க...

இனி கடாபியை நோக்கி மொத்தக் கவனமும் திரும்பிடும். நம்ம கர்ளாவி ஹஸ்ரத்தாங்களும் கடாபியக் கொல்லணும்டாங்களாமே... நெசமாத்தானாங்க.... கர்ளாவி ஹஸ்ரத்தாங்க வாழுற கத்தாருலதான அமெரிக்கன் ராணுவக் கேந்திரமெல்லாம் இருக்கு.... கத்தார் அரசுக்கு இதப்பத்தி ஹஸரத்தாங்க ஒண்ணுமே சொல்லலியேங்க... எனக்கு ஒரே கொழப்பமா இருக்குங்க...

அடுத்தாளு இந்த அஹமதி நெஜாத். ஒரு இம்பட்டுப் போல ஆளு... என்னா பேச்சப் பேசுறான் அந்தாளு... அமெரிக்கங்காரனுக்கு கோவம் வராமலா இருக்கும்... பென்னம் பெரிய சண்டினுக்கிட்டப் போய் சரிசமமா நிக்கலாமா நாம...?
ஆனா... ஒரு விசயம் வெளங்க மாட்டேங்குதுங்க... சதாம முடிச்சத்துக்குப் புறகும் குண்டு குண்டா வெடிக்குதே... ஏங்க...

பின்லாடன் இல்லாமப் போனாலும் இந்த மாதிரி நடக்கும் எங்கிறீங்களா நீங்க...

கடாபிய அமுக்கினாலும் அப்பிடித்தான் ஆகும்கிறீங்களா...

உங்களுக்கு ஏதாச்சும் வெளங்கிளா... ஒரு பின்னூட்டம் போட்டுச் சொல்லுங்க.. தலையெல்லாம் சும்மா கிறு கிறுக்குது!









இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 comments:

எம் அப்துல் காதர் said...

ஹா..ஹா.. இயல்பு நிலையை அருமையா படம் பிடித்துக் காட்டியிருக்கீங்க!! வாழ்த்துகள். தொடருங்கள்.

Unknown said...

அருமை.ஆனால் உஸாமா பின் லேடன் அமெரிக்க அடியாள் என்பதை நிறுவிப்பல ஆதாரங்கள் வந்துள்ளன.அவரை வைத்து உண்மையான முஜாஹித்கள் பலரை அமெரிக்கா தீர்த்துக்கட்டியிருக்கிறது.

Prapa said...

அவிங்க இப்பிடித்தான் போடியார்.... அவையளுக்கு வேணும் எண்டால் வேணும்,, இல்லன்ன போட்டு தள்ளிடுவினம்.. என்ன நீதியோ என்ன நியாயமோ .????

Shaifa Begum said...

அருமை அருமை... கிராமத்து தமிழ் வாடை நன்றாகவே வீசுகிறது.
” அப்போ அந்தாளு ஏன் ஒளிஞ்சு திரிஞ்சான்னு கேட்பீங்க... கொல்லத்தான் தேடுறானுங்கன்னா.. வாங்க மச்சான் இங்கேதான் இருக்கேன்... ஒரு தேத்தண்ணியக் குடிச்சிட்டு அப்புறம் கொல்லுங்கன்னு எவனாச்சும் சொல்வானா என்ன?”

சரியாகக் கேடடீங்க சேர்.. இப்படித்தான் ஆளுக்காள் கேட்குறாங்க..அப்போ அந்தாளு ஏன் ஒளிஞ்சு திரிஞ்சான்னு ..? சரியான பதிலும் கொடுத்துடீங்க...

எது எப்படியென்றாலும்.. உயிர் என்பது விலைமதிக்க முடியாத ஒன்று. போனால் திரும்பி வராத
ஒன்று. எனவே உலகம் சொல்வது போல் அவர் உயிர் போயிருந்தால்,இறைவன்
அவர் பிழைகளை பொறுத்தருளட்டும்.

vignaani said...

So Osama was only a creation of America; He did nothing bad on his own; America to be blamed for all his sins; Nobody said anything like this till last week, though one reader has told there are several evidences that he doing the American bidding.

I am yet to see one post that said, if he was the head of Al-qaida, and if it has caused so much destruction thro blasts and Twin-Tower type damages, he deserved to die.

I wish this polarisation does not turn uglier. Amen.