Wednesday, August 14, 2013

ஷவ்வால் பிறையில் சறுக்கிய கதை!

இவ்வருட ஷவ்வால் பிறை தொடர்பாக எனதும் ஏனைய சிலரது குறிப்புகளும் சில முக்கிய பின்னூட்டங்களு்ம்



கிண்ணியா காக்காமுனைப் பள்ளிவாசல் மற்றும் ஜாவாப் பள்ளிவாசல் பகுதிகளில் மாலை 6.37க்கு ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டதாக அங்கிருந்து ஒரு சகோதரர் எனக்குத் தெரிவித்தார். ஜம்இய்யதுல் உலமா சபை சார்ந்தோர் பிறை கண்டவர்களைத் துருவித் துருவி விசாரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.






நாளை நோன்பு நோற்பது என்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியாவில் பிறை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை என்றும் இன்று பிறையைக் காணும் சாத்தியம் இல்லை என்று வானியல் துறை முஸ்லிம் அறிஞர்கள் சொல்வதாகவும் பிறை கண்டதாகச் சொன்ன முறை சாட்சியத்துக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது!





அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு இனிமேல் யாரையும் பிறை பார்க்குமாறு ஊடகங்களில் அறிவித்தல் கொடுக்காமல் தாங்களாகவே பார்த்து முடிவை அறிவித்தால் இப்படியான குழப்பங்கள் ஏற்படாது. இதற்கெனச் சிலரை விசேடமாக நியமித்து உரிய இடங்களையும் தீர்மானித்து முடிவுககு வருவது நல்லது. பிறை பாரு... பிறை பாரு என்று ஊடகங்களில் அறிவித்தல் கொடுத்து விட்டு இன்றைக்கு பிறை தென்பட சான்சே இல்லை என்பதும் தென்னை மர உயரத்தில் பார்த்தாயா, அதற்குக் கீழ் பார்த்தாயா, மேகத்துக்குள் பார்த்தாயா, எந்த சைசில் பிறை இருந்தது என்றெல்லாம் கேட்டு பிறை கண்ட முஸ்லிமைப் பிறாண்டி எடுப்பதும் அதை மறுதலிப்பதும் புத்திக்கு ஒவ்வுகிற செயலாக எனக்குத் தெரியவில்லை! எனவே பிறைக்குழு ஒரு தனி ஆய்வுக் குழுவை இதற்கென நியமித்து எதிர்காலத்தில் இப்பிரச்சினைகளைத் தவிர்க்க முடிவு செய்ய வேண்டும்!





தமது சங்க அங்கத்தவர்களான உலமாக்களையே நம்பாத மத்திய குழுவின் முடிவுகளுக்கு ஏற்ப நடக்கும் அவசியம் இல்லை என்பதை கிண்ணியா ஜம்இய்யாவின் முடிவு உணர்த்தியுள்ளது. இன்னும் சில வருடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல காங்கிரஸ்களாகப் பிரிந்தது போல் ஜம்இய்யத்துல் உலமா பிரியும் ஆபத்து உண்டு. அந்த அந்தப் பிரதேச ஜம்இய்யாவின் வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளும் கட்டாயத்தை மத்திய குழு ஏற்படுத்திச் செல்கிறது!



நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்லன். கிண்ணியாவில் கண்ட பிறை விடயத்தைச் சில புத்தி ஜீவிகள் கூட தௌஹீத் அமைப்புடன் இணைத்து வெறுப்பை உமிழ்ந்திருந்தார்கள். ஹஸன் மௌலவி போன்றவர்கள் அ.இ.ஜ.உலமாவினரோடு நீண்ட நேரம் விவாதித்ததாக அறியக் கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் ஆலிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கண்ணியமும் மரியாதையும் இருக்கிறதுதானே! கொழும்பில் குந்தியிருக்கும் ஆலிம்களுக்கு மட்டும் எப்படி அந்த உலமாக்களை அவமதிக்கும் தைரியம் வந்தது என்று சிந்தித்தால் பல கதைகள் வெளிவரக் கூடும். கடந்த காலங்களில் முஸ்லிம்களின் அரசியலும் அவர்களின் தலைவிதியும் கொழும்புத் தலைமைகளால்தான் தீர்மானிக்கப்பட்டு வந்தது. அதைத் தீர்மானித்தவர்கள் சுகபோகங்களில் செழித்துச் செல்வந்தர்களாகவும் பிரமுகர்களாகவும் படாடோபமாகப் பவனி வந்தார்கள். அதே வேளை ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வாழ்ந்தார்கள். அரசியல் ரீதியாக எம்.எச்.எம். அஷ்ரஃப் இந்த நிலைமையை மாற்றியமைத்தார். 'உலமாக்கள்இ பேசாதே!' என்று பயங்காட்டும் இந்த அடுத்த முஸ்லிமை அவமானப்படுத்தும் கோஷ்டிகளிலிருந்து முஸ்லிம்களுக்கு எப்போது விமோசனம் ஏற்படும் என்று தெரியவில்லை!



குதிருக்குள் ஏதோ குடைகிறது!
நண்பர்களே
உங்களுக்கு தெரியாத விடயமொன்றை நான் கூறுகின்றேன். காரணம் நேற்று இரவு களத்தில் நின்றவன் என்ற அடிப்படையில்.

அதாவது கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஹமீதியா மண்டத்தில் நடைபெறும் பிறை பார்க்கும் நிகழ்வு பகிரங்கமாகவே இடம்பெறும். 

எனினும் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற பிறை பார்க்கும் நிகழ்வு மூடிய அறைக்குள் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயமுல் உலமா சபையின் பிரதிநிதிகள்இ கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்இ முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் மேமன் பிரதிநிதிகள் என 10 பேர் மாத்திரம் கலந்துகொண்டர்.

ஊடகவியலாளர்களோ வேறு யாருமோ உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் சுமார் 2.30 மணித்தியாளங்களின் பின்னர் வெளியே வந்தவர்கள் பிறை தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டனர்.

இந்த 2.30 மணித்தியாளங்களிற்குள் மூடிய அறைக்குள் என்ன நடந்தது எனும் விடயத்தை அல்லாஹ்தான் அறிவான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Rifthi ali


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கிண்ணியா கிளை இன்று வியாழக்கிழமை கிண்ணியாவில் பெருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற முடிவை எடுத்ததற்கான நியாயங்கள்.

1. நோன்பு 29இல் 07.08.2013 இல் பிறை பார்க்கும் வேண்டுகோளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைஇ கொழும்பு பெரிய பள்ளியும் விடுத்ததற்கிணங்க கிண்ணியாவில் பிறையை கண்ட மக்கள் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையின் பிறைக்குழுப் பொறுப்பாளர் ஏ.எஸ். ஜாபிர் நளீமியிடம் தெரிவித்தனர். இதற்கிணங்க தேசிய பிறைக்குழுச் செயலாளர் அப்துல் அஸீஸ் மௌலவியை கொழும்பு பெரியபள்ளியில் தொடர்பு கொண்டு பி.ப. 6.58 மணியளவில் விடயத்தை தெளிவுபடுத்தினார். இதில் அவர் பிறை கண்டவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கலந்துரையாடவும்இ சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். பெரியாற்றுமுனையில் பிறை கண்டவர்களுடனான இந்தச் சம்பவத்தை பிறைக்குழு ஏற்கவில்லை.
2. இதன் பின் இன்னும் பல இடங்களில் பிறைகண்ட பொதுமக்கள் ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளையை நாடினர். இவர்களில் ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாயல் இமாம் மௌலவி எம்.ஏ.எம். றியாஸ் மற்றும் மஹல்லாவாசிகள் 10 பேரும் கண்டதாக குறிப்பிட்டார்கள்.
3. இவ்வாறு இன்னும் பல இடங்களில் பிறை கண்ட 25க்கு மேற்பட்ட கிண்ணியா பிரதேச மக்கள் பிறைக் குழுவிற்கு அறிவித்தனர்.
4. இந்நேரத்தில் பெரியாற்றுமுனையில் பிறைகண்ட பொதுமக்களைப் பேட்டிகாணுவதற்காக மேமன் சங்கத்தின் 2 பேர் சமூகம் தந்ததை நளீமி ஜாபிர் உறுதிப்படுத்தினார். மக்களுடன் தமிழில் உரையாடிய இவர்கள் பிறைக்குழுவிற்கு அறிவிக்கும்போது மேமன் (பாய்) மொழியில் பேசியதாகவும் குறிப்பிட்டார். இது மக்களுக்கும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
5. ஆனால்இ மேமன் சங்கத்தில் இருந்து வருகை தந்தவர்கள் முக்கிய சாட்சியான றியாஸ் மௌலவியிடம் தகவல் பெறாமலும் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையை சந்திக்காமலும் உடனடியாக கிண்ணியாவை விட்டு வெளியேறி விட்டதை பின்னர் அறிந்தோம்.
6. இதன் பின்னர் பிறைகண்டதாக உறுதிப்படுத்தி ஐந்து பேரின் பெயரும் தொலைபேசி இலக்கம்இ வயது போன்ற தகவல்களும் பிறைக்குழுவிற்கு வழங்கப்பட்டது. அவர்களும் இவர்களுடன் போனில் உறையாடினர். இதன் மூலம் நல்ல முடிவு ஒன்றுவரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இரவு 9.00 மணிக்குப் பிறகு பெருநாள் இல்லை என்ற எதிர்பாராத முடிவு அறிவிக்கப்பட்டது.
7. இதன் பின்னர் ஊர் பிரமுகர்கள்இ தஃவா பிரதிநிதிகள்இ பொதுமக்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க உலமா சபை தனது அலுவலகத்தில் உடனடியாக ஒன்றுகூடலை நடத்தியது.
8. முக்கியமாக பிறை கண்ட சாட்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மௌலவி ஹஸன் அஸ்ஹரி அவர்கள் நேரடியாக கொண்டுவந்து உறுதிப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்று சபை முன்னிலையில் அவர்கள் தாங்கள் பிறைகண்டதை உறுதிப்படுத்தி சத்தியம் செய்வதற்கும் தயார் என எல்லோரும் உறுதியாக கூறினர்.
9. பிறை விடயத்தில் சபையோர் அனைவருக்கும் உறுதியான நம்பிக்கை ஏற்பட்டதன் பின் பெருநாள் என தீர்மானிக்கப்பட்டது. எமது ஊரில் நாம் பெருநாளைக் கொண்டாட கலந்து கொண்ட பிரதிநிதிகளின் ஒப்பமும் பெறப்பட்டது.
10. இதன் பின் இந்த முடிவு தொடர்பான அறிக்கை அந்த இரவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு தொலை நகல் (குயஒ) அனுப்பப்பட்டது.
11. இவ்வறிக்கையில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை கிளையின் தலைவர் ஜனாப் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் (நளீமி) மற்றும் தற்போதைய செயலாளர் எம்.எஸ்.எம். ஷபாஅத் (மதனி) ஆகியோர் ஒப்பமிட்டனர். இந்த முடிவுகள் அனைத்தும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தலைவர் ஜனாப் ஏ.ஆர்.எம். நஸார் மௌலவி அவர்களின் முன்னிலையில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.ஃஃஃஃ
நன்றி Mohammed Siraj

பிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது?

August 8, 2013 at 4:01pm

பல ஊர்கள் வியாழன் பெருநாள் கொண்டாடுவதாக தீர்மானித்து விட்டன. நோன்பு பிடிப்பது ஹராம் என்ற பத்வாக்கள் மின்னல் வேகத்தில் பரவியிருந்தன. விமர்சனங்களும் கேள்விக்கணைகளும் ஓய்வதாகத் தெரியவில்லை.

இவற்றையெல்லாம் சரிகண்ட நிலையில் நான் இதனை எழுதவில்லை. எனினும் சமூகத்தின் நிலை வியாழன் பிற்பகல் ஒரு மணிவரை இவ்வாறு தான் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதற்கு யார் காரணம்?
பக்கச்சார்போடு குறைகளை ஒருபக்கம் வைத்துப் பேசி விடாமல் படிப்பினை பெறும் நோக்கில் நடுநிலையாக சிந்தித்தால் நடந்துமுடிந்த குழப்பத்துக்கான பொறுப்பின் பங்குகளை உரியவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இனியும் இப்படியொரு குழப்பம் சமூகத்தில் வரக்கூடாது என்ற ரீதியில் இதுபற்றி சிந்திப்பது சமூகத்தின் பொறுப்பாளர்களது தார்மீகக் கடமையாகும்.

..........பிறை விவகாரம் அவ்வாறானதல்ல. அது ஒரு நாளோடு முடிவடைந்து விடுகிறது. அத்துடன் முடிவு அவசராமாகத் தேவைப்படும் விவகாரமும் கூட. அதுமட்டுமல்ல நோன்பு நோற்பது ஹராமா? பெருநாள் கொண்டாடுவது ஹராமா? என்று சிந்தனையைக் குழப்பும் சீரியஸான ஒரு மார்க்கப்பிரச்சினையுமாகும். இதனை ஆற - அமர விட்டுத் தீர்க்க முடியாது. 'இரண்டு மணித்தியாலங்கள் நாம் இதற்காக செலவிட்டோம்' என ஜம்இய்யதுல் உலமா கூறுவதை குறைத்து மதிப்பிடாவிட்டாலும் இன்னும் சில மணித்தியாலங்கள் செலவிட்டு சமூகம் குழம்பாமல் தடுக்க முடிந்திருந்தால் அதனைப் பிழை என்று யார் கூறுவார்கள்?

சமூகத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் தலைவர்கள் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டும்.

'பிறை விடயத்தில் இத்தகையதொரு தெளிவான விளக்கம் சமூகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குத் தான் சமூகத்திற்குப் பிறை தொடர்பான இத்தகையதொரு விளக்கம் கிடைக்கிறது முக்கால் நாள் சமூகம் விளக்கமின்றி குழப்பத்தில் சிக்கித்தவித்ததன் பின்னர்...

விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் அதுவரை சமூகத்தை அதன் போக்கில் விட்டிருந்தார்களோ அல்லது சமூகம் விளக்கமின்றியே கட்டுப்படுமென்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. சமூகத்தை யார் யாரோ வழிநடாத்தி தீர்மானங்களை எடுத்து கருமமாற்றி முடிந்ததன் பிறகு... பெருநாள் கொண்டாடியவர்கள் பெருநாள் கொண்டாடியதன் பிறகு... நோன்பை விட்டவர்கள் நோன்பை விட்டதன் பிறகு... விமர்சனங்கள் செய்தவர்கள் முடிந்தமட்டும் விமர்சனம் செய்த பிறகு சமூகத்திற்கு விளக்கம் கிடைத்தது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு பத்வாவையும் ஒரு வினாவுக்கான விடையையும் தவிர விளக்கம் உண்மையில் திருப்திகரமாகவே இருந்தது.

வினா இது தான்: வானவியல் நுட்பங்களை அறிந்த சர்வதேச மற்றும் உள்ளுர் நிபுணர்களின் வழிகாட்டலுக்கேற்ப இலங்கையில் புதன் மாலை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரிவதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தால் பிறை தீர்மானிக்கும் மாநாட்டை அன்று ஏன் கூட்ட வேண்டும்? பிறை பார்க்குமாறும் பிறை கண்டால் அறியத்தருமாறும் மக்களுக்கு ஏன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்?

இதனைவிட புதன் மாலை மாநாட்டைக் கூட்டி வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குக் கொடுத்த விளக்கத்தை அப்போது கொடுத்திருக்கலாமல்லவா. அல்லது செவ்வாய் பின்னேரம் மாநாட்டைக் கூட்டி இந்த விளக்கத்தைக் கொடுத்த பின் புதன் மாலை பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறமாட்டாது என்பதை அறிவித்திருக்கலாமல்லவா? அப்போது ஊர் மட்டங்களில் தீரமானமெடுக்கும் பொறுப்புதாரிகள் ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுடன் பெரும்பாலும் உடன்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம். சமூகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் தவிர்த்திருக்கலாம்.

தலைப்பிறையைப் பிரகடனம் செய்ய வேண்டிய பொறுப்பாளர்கள் தேவையான விளக்கத்தை ஏற்கனவே கொடுக்காமல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை காத்திருந்து விட்டு சமூகத்தை மாத்திரம் குறை சொல்வது முறையல்ல.

அந்த விளக்கமின்மையால் நோன்பை விட்டவர்களில் பலர் வருந்தினார்கள். அந்த வருத்தத்துக்கு நாமும் காரணம் என்பதை உணர்ந்து பிறை தீர்மானித்த பொறுப்பாளர்கள் தவ்பா செய்யாமல் நோன்பை விட்டவர்களைப் பாவிகளாக்கி அவர்கள் தவ்பா செய்து நோன்பையும் கழா செய்ய வேண்டும் என்று பத்வாக் கொடுப்பது ஷரீஆ தர்மத்துக்கு எந்தவகையிலும் பொறுத்தமானதல்ல.

....................................இருப்பினும் மேற்குறிப்பிட்ட பத்வாவும் மேலே கேட்கப்பட்ட விடையில்லாத வினாவும் கேட்போருக்கு உணர்த்திய உண்மை யாதெனில்இ

'சமூகம் நூறு வீதம் குற்றவாளிகள். பொறுப்பாளர்கள் நூறு வீதம் தூய்மையானவர்கள். எனவே சமூகம் தவ்பா செய்ய வேண்டும்.'

சமூகத்தலைவர்களின் மனப்பாங்கு இத்திசையில் தொடர்ந்தும் செல்லுமானால் ஒற்றுமைக் கோஷம் வாய்க்கும் வார்த்தைக்கும் இனிமையாக இருக்கலாம். சமூகம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிய வண்ணமே இருக்கும்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்இ
அமீர்இ இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

(அவர்களது கருத்தின் சில பகுதிகள்)
47 Shares


மிகக் குறைந்த சதவிகிதம் வாழும் செல்வம் மிக்க மேமன் சமூகத்துக்கு பிறைக்குழுவில் பெரியளவில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் நமக்கு ஆட்சேபனையும் இல்லை. கிண்ணியாவுக்கு மேமன் சமூகத்திலிருந்து இருவர் சென்றிருப்பதையும் அவர்கள் அங்கிருந்து தமது குஜராத் மொழியிலேயே கொழும்புக்குக் கதைத்துள்ளதாகவும் கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா அறிக்கை சொல்கிறது. கொழும்பிலும் ஒரு மேமன் சமூகத்தவரே அந்த அழைப்புக்குப் பதில் சொல்லியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அப்படியானால் மேமன் சமூகத்துக்கு பிறை பார்க்கும் முழு அதிகாரத்தையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொடுத்துவிட்டதா என்றும் ஒரு கேள்வி எழுகிறது!


Ilham Safeek

ஷெய்க் றிஸ்வி முப்தியின் விளக்கவுரையிலிருந்து சில கேள்விகள்!!!!!!!!

1. நாட்டில் பல பாகங்களிலும் ஜம்இய்யதுல் உலமாசபை கிளை நிறுவனங்களையும்இ சுமார் 10இ000 உலமாக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அவருக்கு ஜம்இய்யதுல் உலமா கிண்ணியாக் கிளையின் தற்போதய தலைவர் யாரென தெரியாது போனது ஏன்?

2. கொழும்பில் வெற்றுக் கண்ணால் பிறையைக் கண்ட ஒருவரின் சாட்சியத்தின்படி நோன்பு நோட்கும் தீர்மானத்தை எடுத்த இவருக்கு கிண்ணியாவில் 10 உலமா உட்பட வெற்றுக்கண்ணால் பிறையைக்கண்ட தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது போனதேன்?

3. மூதூர்இ கிண்ணியா மக்கள் சுனாமி மற்றும் அனர்த்தங்களின்போது பெற்ற நிவாரணப் பொருட்களுக்காக கண்ட பிறையை இல்லை என்று சொல்வதற்கு ஷரீஆ வழிமுறையில் ஆதாரங்கள் உண்டா?

4. சுமார் 80இ000 முஸ்லீம் சனத்தொகையைக் கொண்ட கிண்ணியாவின் பிரதிநிதிகளாக தங்களின் ஜம்இய்யதுல் உலமா கிண்ணியாக் கிளையை இவர் கருதுகின்றாரா? அல்லது கொழும்பின் மேமன் சங்கத்தைச் சேர்ந்த (எங்களுக்கு பாஷை புரியாத) அந்த இருவரையும் பிரதிநிதியாகக் கருதுகின்றாரா?

5. பிறை கண்டவர்கள் மாத்திரம் நோன்பை விடுவதற்கும் பெருநாள் கொண்டாடுவதற்கும் ஷரீஆ வழிமுறை இருக்கும்போது தொடர்புச் சாதனங்கள் வளர்ச்சியடைந்த நவீன உலகில் பிறை கண்டமையை அதனூடாக உறுதிப்படுத்திக்கொண்டு நோன்பை விட்டவர்கள் பெருநாள் கொண்டாடியவர்கள் எந்த வகையில் பாவிகளாக மாறுவார்கள்?

6. வானியல் ஆய்வாளர்களின் முடிவின் பிரகாரம் நோன்பு 29 இல் பிறை தென்படும் சாத்தியம் இல்லையென முன்னரே அறிந்துகொண்ட நீங்கள் இந்நாட்டு முஸ்லீம்களை பிறைபார்க்கச்சொன்னதேன்? உங்களின் அருள்பாளிக்கப்பட்ட மேமன் சங்க உறுப்பினர்களை அனுப்பியதேன்?

7. வருடாந்தம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுக்கு மாற்றமாக பெருநாட்களைக் கொண்டாடிவரும் தௌஹீத் ஜமாஅத்தினர் தரீக்கா சகோதரர்கள் தொடர்பில் இதுகாலவரை எவ்வித பத்வாக்களையும் வழங்காத நீங்கள் கிண்ணியா மக்கள் தொடர்பில் மாத்திரம் பாவிகள் பத்வா வழங்குவதற்கு காரணமென்ன?

8. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிருவாக உறுப்பினர்கள் பலர் நோன்பு நோற்காது விட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் பெருநாள் கொண்டாடி இருக்கின்றனர். இந்நிலையில் ஜம்இய்யாவின் மசூறாவின் நிலை என்ன? தலைமைத்துவக் கட்டுப்பாட்டின் நிலை என்ன? உங்களது உரை தன்னிச்சையான முடிவா?

9. சமூக ஒற்றுமையில் விருப்பம் கொண்ட நீங்கள் கிண்ணியாவில் உண்மையில் பிறை கண்டிருந்தும் உங்கள் தீர்க்க தரிசனமற்ற முடிவால் இலங்கை வாழ் முஸ்லீம்களையும் ஊர்களையும் பிரிவினைக்குட்படுத்தியது ஏன்?

10. இப்பிரச்சினையை உணர்வுபூர்வமான பிரச்சினையாக மாற்றியமைக்கு உங்களது உரைக்கு முக்கிய பங்குண்டு. இப்பிரிவினையும் குழப்பநிலையும் உங்களின் தவறா? அல்லது திட்டமிட்ட சதியா? அல்லது எவரினதும் வலைக்குள் சிக்கியிருக்கின்றீர்களா?

'ஈமான் கொண்ட முஸ்லீம் சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் மீது அச்சம் இருக்கின்றது. அவ் அச்சம் உங்களுக்கு மாத்திரமே இருக்கின்றது என நாங்கள் கருதவில்லை. அனைத்துக்கும் அல்லாஹ்வே போதுமானவன்'
--------------------------------------------------------------------------------------

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: