அது ஒரு விளையாட்டரங்கம்.
ஒரு விளையாட்டு விழா அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. எல்லா முகங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
சிறுமிகள் எட்டுப் பேர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளத் தயாராக நின்றிருந்தார்கள்.
“ஆயத்தம்!”
“போ!” என்ற கட்டளைக்குரிய சத்த வெடில் கேட்டது.
சிறுமிகள் ஓடத் தொடங்கினார்கள்.
பத்து அல்லது பன்னிரண்டு எட்டுக்களை அவர்கள் தாண்டிய வேளை அவர்களில் சிறியவளான ஒருத்தி தடுக்கிக் கீழே விழுந்தாள். கால் உராய்வில் ஏற்பட்ட வலியில் சத்தமிட்டு அழ ஆரம்பித்தாள்.
ஓடிக் கொண்டிருந்த சிறுமிகளின் காதுகளில் அழுகைச் சத்தம் கேட்டதும் அவர்கள் ஓட்டத்தை நிறுத்தினார்கள். அப்படியே அதே இடத்தில் ஒரு கணம் தரித்து விட்டு விழுந்து கிடக்கும் சிறுமியை நோக்கி ஓடி வந்தார்கள்.
அவர்களில் ஒருத்தி குனிந்து சிறியவளை அணைத்துக் கொஞ்சினாள். ‘கொஞ்ச நேரத்தில் வலி சரியாகி விடும்’ என்றாள்.
விழுந்து கிடந்தவளை ஏழு சிறுமிகளும் ஒன்று சேர்ந்து தூக்கி நிறுத்தினார்கள். அனைவரும் கைகோர்த்து வெற்றிக் கோட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
ஒரே வரிசையில் அனைவரும் வெற்றிக் கோட்டைத் தாண்டினார்கள்.
விளையாட்டு உத்தியோகத்தர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தனர். மைதானத்தில் குழுமியிருந்த அனைத்துப் பார்வையாளர்களும் எழுந்து நின்று கைகளைத் தட்டத் தொடங்கினர்;.
பலரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
இந்தச் சிறுமிகள் எண்மரும் மனோ வளர்ச்சி குன்றியவர்கள்!
அந்த நொடிகளில் ஒற்றுமை, மனிதாபிமானம், அன்பு, எல்லோரும் சமம் ஆகிய அம்சங்களை மனோ வளர்ச்சி குன்றிய அந்தச் சிறுமிகள் உலகத்துக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்!
இந்தியாவின் ஹைதராபாத்தில் National Institute of Mental Health [NIMH] நடத்திய விளையாட்டு விழாவில் நடந்த உண்மைச் சம்பவம் இது.
நன்றி -ராஜ்ஸ்ரீ - ஏப்ரல் 20, 2008
கதையைப் படித்ததிலிருந்த நான் என்னிடம் எதையோ தேட ஆரம்பித்திருக்கிறேன்!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
6 comments:
manathai nehizhthum sambavam.manavalarcheil kurainthavarkalaha erunthalum,namai manamuruha chaithu vittargal...manitha sinthanaiku azhahana example.ethai paditthu yennai sinthikka vaithamaiku manamarntha nantrigal.
நல்ல பதிவு மனிதம் செத்துக் கொண்டு இருக்கும் போது இவ்வாறான பதிவுகளும் நிகழ்வுகளும்
ஆறுதல் அளிக்கின்றன, இருந்தும்..மனவளர்ச்சி..பூரனமானவுடந்தான் மனதில் குரூர எண்ணங்களும் அடுத்தவனை கவிழ்த்துவிட்டு எப்படி அத்த இடத்துக்கு வரலாம் என்ற கெட்ட எண்ணமும் தோன்றுகிறது..
உண்மையிலேயே நெஞ்சை உருக்கும் கதை அண்ணா. அதிலும் இறுதியில் மனதில் ஒரு ஆறுதல் இன்னும் இந்த மனிதம் சிறுவர்கள் மனங்களில் உயிர்வாழ்வதை எண்ணி. இருந்தும், மாற்றாற்றல் உள்ள இச்சிறுவர்களிடமிருந்து உலகமே கற்றுக் கொள்ளும் அளவிற்கு நிறைய விடயங்கள் இருப்பது அவர்கள் உண்மையிலேயே மாற்றாற்றல் உள்ளோர் என்பதற்கு பொருத்தமான உதாரணம்.
ஓரிரு இடங்களில் அதிர்ச்சி ஏன் ஏன் ஏன்? விளங்கவில்லை.தொடர்கிறேன்.தொடர்ந்து வாசிக்கின்றேன்.இப்போது விளங்கிற்று.நெஞ்சத்தை வருடியது.நெஞ்சத்தைக் கனக்கச்செய்தது.நெஞ்சம் பதை பதைத்தது.இந்த மனவளர்ச்சிக் குன்றிய சிறுமிகளிடத்தில் இருக்கின்ற ஓர் ஒற்றுமை உணர்வு கூட ஆறறிவும் சீராகயிருக்கின்ற மனித (அறிவு ஜீவிகளிடத்தில்)குலத்தில் இல்லாமல் போயிற்றே.......என்ற ஆதங்கத்தைத் தோற்றுவித்தது. மனித நேயத்தை எடுத்துக்காட்டிய எழுத்தாளர் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்கட்குப் பாராட்டுக்கள்.தொடரட்டும்.........
கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்.
என் கண்களில் கண்ணீர் ! அது ஆனந்த .கண்ணீரா.? வேதனை கண்ணீரா என்று எனக்கு புரியவில்லை....சொல்லி கொடுத்தும் செயலில் வராத இந்த அரிய குணம் இந்த பிஞ்சு உள்ளங்களில் ...பார்க்கும் போதுநெகிழ்ச்சியாக இருக்கிறது....மனிதம் சாகவில்லை.. இந்த குழந்தைகளின் உருவில் வாழ்கிறது..நமக்குள்ளும் தேட வேண்டிய ஒன்று என்று ஒன்றிருந்தால் அது இது தான்........சேர் ரொம்ப நன்றி.. எங்களையும் இல்லாத ஒன்றை தேட வைத்து விட்டீர்கள்
முகப்புத்தகப் பின்னூட்டம்
Lareena Abdul Haq
//இந்தச் சிறுமிகள் எண்மரும் மனோ வளர்ச்சி குன்றியவர்கள்!
அந்த நொடிகளில் ஒற்றுமை, மனிதாபிமானம், அன்பு, எல்லோரும் சமம் ஆகிய அம்சங்களை மனோ வளர்ச்சி குன்றிய அந்தச் சிறுமிகள் உலகத்துக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்!// -
இதைப் படித்ததும் என்னை அறியாமலேயே என் விழிகள் பனித்தன. மாஷா அல்லாஹ்! மனிதம் இன்னும் மரணித்துப் போகவில்லை. நம்மை நாமும் சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
August 17 at 1:12am Like · 1 person
Post a Comment