Showing posts with label Mounathin Punnakai - Radio Drama - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label Mounathin Punnakai - Radio Drama - ashroff shihabdeen. Show all posts

Thursday, May 19, 2011

அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பிளையா நீங்க....?

பகுதி - 1

(முதற்பகுதியை நீங்கள் சொடுக்கிப் பதினாறு நொடிகளின் பின்னர் நாடகத்தை நீங்கள் கேட்கலாம்.)

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அண்மையில் ‘மௌனத்தின் புன்னகை’ என்த தலைப்பில் வானொலி நிகழ்ச்சியொன்றினை கிழக்கின் பிறை எப்.எம். வானொலி ஊடே ஒலிபரப்பியது. ஒலிபரப்பப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதான அங்கமாக நாடகங்கள் அமைந்திருந்தன. பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளை வெவ்வேறு கோணங்களில் இந்நாடகங்கள் படம் பிடித்துக் காட்டின.

பகுதி - 2

இந்த நாடகங்களில் பங்கு கொண்ட ஒரு கலைஞன் என்ற வகையில் எனது வலைத்தள வாசகர்களுடனும் இவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்பி இவற்றை இங்கு பதிவேற்றம் செய்கிறேன்.

இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது “மௌனத்தின் புன்னகை“ என்ற ஒரு நாடகம். வலையேற்ற வசதிக்காக இந்நாடகத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளேன்.

இந்நாடகங்களுள் நான் தேர்ந்தெடுத்தவற்றை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

பகுதி - 3

இந்நாடகங்களை எனது வலைத் தள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கிய தயாரிப்பாளர் எம்.சி. ரஸ்மின் மற்றும் இந்நாடகத் தயாரிப்பில் முழு மூச்சாகச் செயற்பட்ட ஏ.எல். ஜபீர் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

நாங்கள் வாசகர்களாகிய உங்களிடம் நாடகங்கள் பேசும் விடயங் குறித்த கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

எல்லோரும் நன்றாயிருக்கப் பிரார்த்திப்போம்!