Saturday, June 4, 2011

ஒசாமாவுக்குக் கடலை விற்றவர்


ஒசாமா பின் லேடனுக்கு குங்பூ கற்பித்ததாக தாய்வானைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ள செய்தி பரவலாகப் பேசப்படுகிறது. அச் செய்தி உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கக் கூடும்.


யாராவது ஒரு பிரபலம் மறைந்து விட்டால் அப்பிரபலத்தின் பெயரால் சில பரபரப்புத் தகவல்களை எடுத்து விட்டுப் பிரபலம் பெறுவது அவ்வப்போது உலகம் முழுக்க நடந்து வருகிறது.

இதற்கென்று சிலர் பாயைப் போட்டு உட்கார்ந்து வெற்றிலை சப்பிக் கொண்டு காத்திருப்பது போல் எனக்குப் பிரமை தட்டுகிறது. எதிர் காலத்தில் எத்தனையோ விதமாகக் கதைகளை விடுவதற்கு இப்போதே ரூம் போட்டு சிலர் யோசிக்கக் கூடும்.

ஒசாமாவை வைத்தே சும்மா ஒரு கற்பனை செய்து பார்த்தால் என்ன என்று நமக்கும் ஒரு யோசனை வந்தது.ஒசாமாவுக்குக் கடலை விற்றாராம்
- நாச்சிமுத்து பரபரப்புத் தகவல்

ஒசாமா பின்லேடன் தன்னிடம் கடனுக்குக் கடலை வாங்கிச் சாப்பிட்டதாக சென்னை மண்ணடித் தெருவைச் சேர்ந்த கடலை வியாபாரி நாச்சி முத்து தெரிவித்துள்ளார்.

ஒசாமா சிறுவனாக இருந்த போது அவர் தன் தகப்பனாருடன் சென்னைக்கு வந்து தங்கியிருந்ததாவும் அப்போது தங்கியிருந்த லாட்ஜிலிருந்து தகப்பனாருக்குத் தெரியாமல் ஓடி வந்து தன்னிடம் அடிக்கடி கடலை வாங்கிச் சாப்பிட்டதாகவும் நாச்சி முத்து நமது ‘குடலுருவி’ க்குத் தெரிவித்தார்.

மண்ணடித் தெருவில் கடலை விற்கும் நாச்சி முத்து இது பற்றி மேலும் தெரிவித்ததாவது:

ஒசாமாவின் தகப்பனார் தமது பிள்ளைகளுடன் ஓய்வூக்காக வருடா வருடம் சென்னை வந்து மண்ணடியிலுள்ள லாட்ஜில் தங்குவது வழக்கம். அவர்கள் சென்னை வந்தால் ஒசாமா மட்டும் என்னிடம் தினமும் வந்து கடலை வாங்குவது உண்டு. சில வேளைகளில் அவர் கடனுக்கும் கடலை வாங்கியுள்ளார். அவருக்குத் தமிழ் தெரியாது. எனவே சைகையில்தான் என்னுடன் பேசுவார்.

சின்னப் பையன் என்பதாலும் வசதியயுள்ள நாட்டில் இருந்து வருபவர்கள் என்பதாலும் அவர் கேட்கும் போது பணத்தை எதிர்பாராமலே கடலை கொடுத்து வந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் ஒசாமாதான் என்று உங்களுக்கு எப்படித் தெரியயும் என்று நமது நிருபர் நாச்சி முத்துவிடம் கேட்டார். அதற்கு நாச்சி முத்த, ஒரு முறை அவர் தனது தந்தையாருடன் கடலை வண்டிக்கருகில் செல்லும் போது அவரது தந்தை அவரைப் பார்த்து ‘ஒசாமா’ என்று அழைத்ததாகக் குறிப்பிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------

ஒசாமாவுக்குச் சுடப் பழக்கியவர் கைது!

இலங்கையில் அல்கைதாவா?

ஒசாமா பின் லேடனுக்கு சுடப் பழக்கியவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். தானே ஒசாமாவவுக்கு சுடப் பழக்கியதாக அவர் சொன்னதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது. கைது செய்யப்பட்டவரான மம்மனவா என்பவர் தெருவோர வியாபாரியாவார். இவர் நீண்ட காலமாக கொழும்ப கண்டி வீதியில் சோளக் குலை அவித்து விற்பனை செய்து வருகிறார்.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,

ஒசாமா பின் லேடனை அமெரிக்கா வேட்டையாடியதைத் தொடர்ந்து அடுத்த தினம் பத்திரிகையில் ஒசாமாவின் பல்வேறு வயதுப் படங்கள் வெளிவந்தன. அவற்றைப் பார்த்த மம்மனிவா ‘இவரை எனக்குத் தெரியும்... இவருக்கு நான் சுடப் பழக்கினேன்’ என்று தன்னை மறந்து கூவியுள்ளார். தெருவோரத்தில் நின்ற ஒருவர் இரகசியமாகப் பொலிசாருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

அவரைக் கைது செய்து மூன்று தினங்கள் பொலிஸார் இரகசிய விசாரணை செய்து வந்தனர். மம்மனிவாவின் கைதையடுத்து சர்வதேசப் பயங்கரவாதக் கிளை இலங்கையிலும் இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்தனர்.

படிப்பறிவற்றவரான மம்மனிவா சொல்வதைப் புரிந்து கொள்வதில் சிரமங்களை எதிர் நோக்கிய பொலிஸார் பிரதேச பள்ளிவாசல் நிர்வாகிகளை உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்கள் மம்மனிவாவிடம் பெற்ற தகவல்களின்படி நீண்ட தாடயுடனான ஒரு குழுவினர் வேன் ஒன்றில் வந்து தன்னிடம் சோளக் குலை சாப்பிட்டதாவும் அதில் ஒருவர் ஒசாமாவைப் போல் தாடி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, மார்க்கப் பிரசாரத்துக்காக வேன் ஜமாஅத் செல்லும் கோஷ்டியைப பற்றியே மம்மனிவா சொல்வதாகவும் அவர்கள் ஆபத்தற்றவர்கள் என்றும் பொலிசாருக்குப் பள்ளிவாசல் நிர்வாகிகள் விளக்கம் தந்துள்ளனர்.

“எப்போது சுடப்பழக்கினாய்?” என்று பொலிசார் அதட்டிய போது, “நான் தெருவோரத்தில் சோளக் குலைகளை அவித்து விற்பனை செய்து வருகிறேன். ஒசாமா பச்சைச் சோளக் குலையை எடுத்து ஆர்வத்தோடு எனது அடுப்பில் சுடும் போது தவறி நெருப்பில் விழுந்து விட்டது. பிறகு ஒரு கிடுக்கியில் பிடித்து நெருப்பில் எப்படிச் சுடுவது என்று அவருக்குச் சொல்லித் தந்தேன்” என்று மம்மனவா தெரிவித்துள்ளார்.

பொலிஸார் அழைக்கும் போது பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-------------------------------------------------------------------------------------------------

ஒசாமா பின் லேடன் உயிருடன் இருக்கிறார்?

வலைப் பதிவாளர் தரும் ‘திடுக்’ தகவல்!


இலங்கையைச் சேர்ந்த வலைப் பதிவரான அஷ்ரஃப் சிஹாப்தீன் தன்னுடன் ஒசாமா பின்லேடன் அண்மையில் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக நமது நிருபரிடம் தெரிவித்துள்ளார். இச்செய்தி பரவத் தொடங்கியதும் உலகம் மீண்டும் கிலியில் ஆழ்ந்துள்ளது. அவரது செய்தி அமெரிக்கர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

இது பற்றி அவர் நமது “பூக்காத மல்லி”க்;குத் தெரிவிக்கையில்,

அமெரிக்கர் ஒசாமாவைக் கொன்று விட்டதாக அறிவித்து சில நாட்களின் பின் எனத வலைத் தளத்தில் ஒரு தொலைபேசி உரையாடலை கற்பனையில் “இன்வெஸ்ரிகேற்” பண்ணி எழுதியிருந்தேன்.

ஒசாமா நானாவும் ஒபாமாத் தம்பயும் என்பது அந்தப் பதிவின் தலைப்பாகும். ஒசாமா பினலேடனும் பரக் ஒபாமாவும் தொலைபேசியில் அளவளாவுவதாக அந்த உரையாடல் அமைந்திருந்தது.

இந்தப் பதிவை இட்டபின் எனது வலைத் தளத்துக்கு வருவோர் தொகை அதிகரித்து விட்டது. நான் நினைத்திராத தேசங்களில் இருந்தெல்லாம் வாசகர் திமிறியடித்துக் கொண்டு வாசித்துக் கொண்டேயிருந்தார்கள். அநேகமாக இப்பதிவை பரக் ஒபாமா படித்திருப்பார் என்று நம்பியிருந்தேன்.

ஆனால் எதிர்பாராத விதமாக ஒசாமாபின் லேடன் எனது கைத் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒசாமா பின் லேடன் என்ன பேசினார் என்று பதிவாளரிடம் கேட்ட போது,

“அந்த டீலிங் ரொம்பப் புடிச்சிருக்கு” என்று சொல்லி விட்டுத் தொடர்பைத் துண்டித்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

9 comments:

Shaifa Begum said...

ஐயோ சேர் !! சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.. எப்படி உங்களால இப்படி எழுத முடியுது..?
ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி..கடைசியில நீங்க உங்களையும் விட்டு வைக்க வில்லையே !!
அச்சோ.. என்னால இப்படியெல்லாம் கற்பனை செய்யவே முடியல....
ஆனால் இது தான் இப்போ உண்மையான உலக நடப்பு.... இப்போ நாட்டில மனுசங்க இதை தான்
பண்ணிட்டு இருக்காங்க. பிரபலம் ஆவதற்கு கண்ணு மண்ணு தெரியாம உலறது.. கடைசில அவங்களே அவங்க வாயால அவங்களுக்கு ஆப்பு வைச்சிக்கிறது..
சேர்.. உங்கள் உச்சகட்ட கற்பனை.. நாசச்முத்து,மம்மனிவா..வலைப்திவாளர், இந்த மூவரையும் என் கண்முன்னாலேயே நிறுத்தி விட்டது..

Hats Off Sir !!! கலக்கல் .. ,இதுக்கு மேல எனக்கு ஒன்னும் சொல்ல தெரியல

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

கதை அருமை ஒரு படம் பார்த்த ஃபீலிங் இருந்தது

rajamelaiyur said...

Wow what a comedy post

rajamelaiyur said...

Your writing style is super

கடம்பவன குயில் said...

உண்மையிலேயே இதுதான் சிறந்த சீரியஸான ஜோக். ரொம்ப நல்லா இருக்கு உங்க டீலிங்ஸ்

irukkam said...

உங்களுக்குள் இப்ப‍டியொரு கொடூரமான காமெடியன் இருந்துள்ள‍ விஷயம் இப்போதுதானே தெரிகிறது.

Shaifa Begum said...

”உங்களுக்குள் இப்ப‍டியொரு கொடூரமான காமெடியன் இருந்துள்ள‍ விஷயம் இப்போதுதானே தெரிகிறது.:

Brother Hafis ... இதைதான் நான் எப்படி சொல்றதுனு தெரியாம யோசிச்சுட்டு இருந்தேன்.
சபாஷ்! நீங்க சொல்லீட்டீங்க

Riyaash said...

உங்கள் காமடி சூப்பர்.

nifasdeen said...

நீங்க திரைப்படத்துக்கு கதை எழுதலாம் சார்