Showing posts with label Obama - Osama - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label Obama - Osama - ashroff shihabdeen. Show all posts

Thursday, May 12, 2011

ஒசாமா நானாவும் ஒபாமா தம்பியும்!

தொலைபேசி சிணுங்குகிறது....



ஹலோ... ஒபாமா தம்பியா....

ஓஹ்... யாரு... ஒசாமா நானாவா... ஹலோ நானா... நல்ல்லா இருக்கீங்களா...

எனக்கென்னடாம்பி குறை... நான் நல்லாயிருக்கேன்... அது சரி இப்ப ரொம்பக் குளுகுளுன்னு இருக்குமே...

ஹி.... ஹி.....

அப்போ இந்த முறை எலக்ஷன்ல வெண்டுறுவியாடாம்பி.....

அப்பிடித்தான் நானா நெனக்கேன்....

அல்லாஹ் காப்பாத்தட்டும்... அதுல இருந்துதான் என்ன செய்யப் போறீங்க.. சும்மா பொம்ம மாதிரி தலையாட்டிக்கிட்டு இருக்கிறதத் தவிர..

சும்மா பகிடி பண்ணாதிங்க நானா....

அது சரி என்னப் போட்டுத்தள்ளின கேஸ்ல ஆயிரக்கணக்கான ஓட்டை இருக்குதுடாம்பி...

தெரியும் நானா....

அந்த போட்டோ ஷொப் வேலய எனக்கிட்ட பாரந் தந்திருந்தா நம்ம பயலுகளப் போட்டு இன்னும் நல்லாச் செய்து தந்திருப்பனே...

இவனுங்க ஒண்ணுங் கேக்க மாட்டேனுங்கிறாங்க நானா...

ஒங்களப் பாத்தா பாவமா இருக்கு. அது சரி என்னைப் போட்டுத்தள்ள வந்த ஹெலியில ஒண்ணு விழுந்து நொருங்கிச்சாமே... ஒருத்தனும் சாகல்லயா... ஒடஞ்ச ஹெலியிட துண்டு துணியையெல்லாம் லொறியில ஏத்திக்கிட்டுப் போறதப் பார்த்தேன்... அதப்பத்தி ஒருத்தரும் பேசல்ல பாத்தீங்களா?

ஓம் நானா... நீங்க வேற ஆளக்கீளப் போட்டு விசயத்தை வெளியே இழுத்து விடாதீங்க.. இப்பவே குடல் வெளியே வாற மாதிரி ஒவ்வொருத்தன் குடையுற குடைச்சல் தாங்க முடியல்ல...