இலங்கையின் கடந்த கால உள்நாட்டுப் போரின் காரணமாகவும் பெரும்பான்மைச் சமூகங்களின் மேலாதிக்கம் காரணமாகவும் உண்டான நெருக்குவாரங்களில் முஸ்லிம் சமூகத்திலிருந்து எதிர்க்குலாகவும் துயரக் குரலாகவும் வெளிப்பட்ட கவிதைகளும் அநீதிக்கு எதிரான குரல் என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் மீதான பரிவில் ஏனைய இனக் கவிஞர்களினால் எழுதப்பட்ட கவிதைகளும் ‘மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டு 2002ம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
மாநாட்டுப் பேராளர்களுக்கும் வளவாளர்களுக்கும் வழங்கப்பட்ட இத்தொகுதி பரவலான எல்லைகளைச் சென்றடையவில்லை என்ற காரணத்தாலும் இத்தொகுதியை ஏதாவது ஒரு தேவை கருதிப் பெற விரும்புமொருவர் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளதாலும் இக்கவிதைத் தொகுதியை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஒரு சமூகாபிமானியின் நிதியுதவி கொண்டு மீள்பிரசுரம் செய்யத் தீர்மானித்துள்ளது.
இத்தொகுதியில் சேர்த்துக் கொள்வதற்கு உரிய வேளை கிடைக்கப் பெறாத பொருத்தமான கவிதைகளையும் 2009 வரை படைக்கப்பட்ட இத்தொகுதிக்குப் பொருத்தமான கவிதைகளையும் பிற்சேர்க்கையாக இணைத்து இக்கவிதைத் தொகுதி வெளியிடப்படள்ளது.
தம்மாலோ மற்றவொரு நபராலோ எழுதப்பட்ட இத்தொகுதிக்குப் பொருத்தமான கவிதைகள் கைவசமிருப்பவர்கள் அக்கவிதை வெளிவந்த பத்திரிகை அல்லது சஞ்சிகையை உறுதிப்படுத்தும் விதத்தில் புகைப்படப் பிரதியெடுத்துப் பிரதான தொகுப்பாளரின் பின்வரும் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ASHROFF SHIHABDEEN
37, Sri Sidhartha Mawatha,
(Dhankanatta Road)
MABOLA,
WATTALA,
SRI LANKA.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள்
Post a Comment