Sunday, August 19, 2012

ஊரைக்குழப்புறாங்க சாமி!


இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை நாம் கண்டு வருகிறோம்.

சொந்தச் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ஒரு முஸ்லிம் பள்ளிவாசலுக்குப் பங்கம் ஏற்படுவதைச் சகிக்க மாட்டான். இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை நெறி. எனவே ஒரு முஸ்லிமுடைய வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லாச் செயற்பாடுகளிலும் இஸ்லாம் பின்னிப் பிணைந்துள்ளது. அப்படிச் சொல்வதைக் காட்டிலும் அந்த வாழ்க்கை நெறிக்குட்பட்டவனாகத்தான் அவன் சமூகத்தில் வாழவேண்டும்.

பள்ளிவாசலில் மாற்று மதத்தார் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதானது தனது வாழ்வியலில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்குச் சமமாகப் பார்க்கப்படுவது இதனால்தான்.

பள்ளிவாசல்கள் மீதான அச்சுறுத்தல்கள் இன்று ஓர் எச்சரிக்கையாக இலங்கை முஸ்லிம்களின் மனதுகளில் பதிந்து போயுள்ளது. இன்றைய சூழலில் நான்கு முஸ்லிம்கள் சேர்ந்திருந்தால் அங்கு பேசப்படும் முதல் அம்சமாக இது இருக்கிறது. அனுராதபுர ஸியாரம் உடைப்பு முதல் ஒபயசேகரபுர பள்ளிவாசல் அச்சுறுத்தல் வரையான செய்திகள் சர்வதேசம் வரை இன்று எட்டியுள்ளது.

கிழக்குமாகாண சபைக்கான அரசியல் பிரச்சாரங்களில்  பயன்படு்த்தப்படும் மிக முக்கியமான பிரசார ஆயுதமாகவும் ஒருசாராரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனது அரசியல் பிரசாரப் பேச்சில் கவனக்குறைவாக விடப்பட்ட ஒரு வார்த்தை அல்லது தவிர்க்கப்பட்ட ஒரு சொல் பெரும்பான்மையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்கு சகோதரர் ரவூப் ஹக்கீமைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தான் ஓர் அமைச்சர், ஒரு கட்சியின் தலைவன் என்ற விடயத்தையெல்லாம் தாண்டி அவர் மன்னிப்புக் கேட்டதானது ஒரு பெரும்பான்மைத் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மையினர் எப்படி வாழவேண்டும் என்பதையும்  நிகழ்காலத்தின் இலங்கைச் சூழல் குறித்த அவதானத்திற்குள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்களையும் சுட்டுவதாகும்.

இவ்வாறான ஒரு சூழலில் சிறுபான்மையினர் எத்தகைய அவதானத்துடன் தமது செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊடகத்துறையில் ஈடுபடுவோர் இவ்வாறான விடயங்களை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதுடன் பொறுப்புணர்வு இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவதற்காகவே இதை நான் எழுத ஆரம்பித்தேன்.

அண்மையில் இப்படியொரு திடீர்ச் செய்தி முகநூல் இணைப்பில் ஓர் இணையத்தளத்தில் வந்தது.

“முஸ்லிம் சமாதான நீதவானைத் தாக்கி புத்தரை வழிபட வைத்த ஸ்ரீலங்கா காவல்துறை அதிகாரி!”

செய்தித் தலைப்பைப் பார்த்ததும் என்னைத் தூக்கி வாரிப் போட்டது.

இச்செய்தி ஜஃப்னா இணையத்தளத்தில் வெளிவந்திருந்தது. நண்பர் நாச்சியாதீவு பர்வீனின் ஊரில் நடந்த சம்பவம் இது. அவரைத் தொடர்பு கொள்ள முயன்றேன். பலனளிக்கவில்லை. ஆனால் பிற்பகல் அதே இணையத்தளத்தில் இச்செய்தி தூக்கப்பட்டு விட்டது. பிழையான தகவல் என்று நாச்சியாதீவு பள்ளிவாசல் நிர்வாகமும் பர்வீனும் இணையத் தளத்துக்கு அறிவித்ததை மட்டும் அந்த இணையத்தளம் தகவலாகத் தந்திருந்தது.

இப்போது புத்தரை வழிபடச் சொன்ன விடயம் என்ன என்பது தெரியவில்லை. மாலை நண்பர் பர்வீனைத் தொடர்பு கொண்டு விபரமறிந்தேன். அதற்கிடையில் அவரது முகநூல் பக்கத்திலும் தகவல் இட்டு வைத்திருந்தேன்.

இனி அந்தத் தகவல்கள் -
???????? இந்த பிழையான தவல்களை சில இணைய இதழ்களும் வெளியிட்டு இருந்தன ....................

இதுபற்றிய உண்மையான தகவல்களை பெற விருப்பமுள்ளவர்கள்
நாச்சியாதீவு முஸ்லிம் ஜும்மா பள்ளிபரிபாலனை சபை தலைவர்-
எஸ்.எச்.இஸ்மாயில்-0712940194
நாச்சியாதீவு பர்வீன்- 0771877876 .

ஊடக தர்மம்.??????????????????????


porkutram.forumta.net/

t297-topic

Ashroff Shihabdeen இதோ இன்னொ இணையத்தளம்.

lankamuslim.org


மேற்குறித்த இரண்டு இணையத்தளங்களிலும் இன்று மாலை 5.40 வரை இச்செய்தி திருத்தப்படவோ எடுத்துக் கொள்ளப்படவோ இல்லை.

இது பற்றி விபரமாக நாச்சியா தீவு பர்வீன் முகப்புத்தகத்தில் தந்த குறிப்பு இனி -


Farveen Mohamed அந்த வகையில் இவரும் தனது தில்லு முள்ளுகளுக்கு பிரதேசத்து பொலிஸ் நிலையத்தையும் பயன்படுத்தி வந்தார், ஆனால் தற்போது உள்ள ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிக்கு புறம்பான செயற்பாடுகளுக்கு எதிரானவர் மாடுகள் களவெடுத்தல், கஞ்சா கடத்தல், மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முன்னிற்பவர் இலஞ்சம்,கொடுப்பதையும், வாங்குவதையும் கடுமையான குற்றமாக கருதுபவர் இதனால் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் புரிகின்ற ஆசாமிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.தவிரவும் முஸ்லிம்களை மதிக்கின்ற, அவர்களது ஒற்றுமையை புகழ்கின்ற ஒரு நேர்மையானவர்.
இனி நடந்த சம்பவத்தை பார்த்தால் - கடந்த மாதம் ஒரு ஏழை சிங்கள மாது தனது வாழ்வாதாரத்துக்கு பால் வழங்கிவந்த தன்னிடமிருந்த ஒரேஒரு பசுமாட்டை காண வில்லை என்று ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் ஹென்றியை பதிவு செய்துள்ளார் அவரது அந்த முறைப்பாட்டுக்கு இணங்க விசாரணைகளை ஆரம்பித்த ஹிதோகம போலீசார் அந்தப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு சிங்கள அன்பரின் கூடாக JP என்பருக்கு விற்கப்பட்டதாக அறியக்கிடைத்த தகவலை அடுத்து குறிப்பிட்ட சிங்கள வியாபாரியையும் இந்த JP என்பவரையும் விசாரித்து உள்ளனர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதாலும் ஊர்மக்கள் அந்த மாடு சிங்கள மாதுக்கே சொந்தமானது என்று உறுதியாக கூறியதாலும் பொய் வாக்கு மூலம் வழங்கிய JP யும் மற்றவரும் கைது செய்யப்பட்டனர் இரண்டு பிரிவுகளில் இவர்களது குற்றம் பதிவு செய்யப்பட்டிருந்தது கள்ள மாடுகளை விற்றல் வாங்கள், அடுத்து பால் கொடுக்கின்ற பசுமாட்டை திருடியமை (மிருக வதை சட்டம்) இது வரை காலமும் தாம் எத்தனை தில்லு முள்ளு செய்தாலும் இலஞ்சம் கொடுத்து தப்பித்து கொள்ளும் வாடிக்கையான நிகழ்வு பிழைத்துப் போனதினால் இன்றைய நாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு இந்த OIC யை விரட்ட கையாண்ட யுக்திதான் அவர் தன்னை மண்டியிட வைத்து புத்தர் சிலையை வணங்க வைத்தார் என்கின்ற புகாராகும் இதற்க்கு சாட்சியாக
அதே நிலையத்தில் வேளை செய்கின்ற இரண்டு கான்ஸ்டபல்களையும் இவர் தயார் படுத்தியிருந்தார் ஆனால் அவர்கள் விசாரணையின் போது JP என்பவர் தமக்கு பணம் தந்து பொய் சாட்சி சொல்ல தொடர்ந்தும் வற்புறுத்தியதாகவும் அவரது பணத்திற்க்கு ஆசைப்பட்டே தாம் இவ்வாறு பொய் சாட்சி சொன்னதாகவும் கூறியுள்ளனர் இவர்கள் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு பொய் சாட்சி சொல்ல முன் வந்ததும் இலஞ்சம் பெற்றுக்கொண்டதும் உறுதி செய்யப்பட்டதினால் இவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இப்போது மட்டும் அனுராதபுர சிறைச்சாலையில் உள்ளனர் இப்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது..இந்த JP என்பவர் முதலில் இந்த விடயங்களை பத்திரிகையில் எழுத வேண்டும் என்று என்னிடம் தான் கேட்டுக்கொண்டார்
2 hours ago · 

மேலும் விபரங்களைத் தெரிந்து கொள்ளச் சொடுக்குங்கள்.
http://farveena.blogspot.com/2012/08/blog-post.html

ஒரு இணையத்தளத்தை ஆரம்பித்து விட்டால் போதுமா? அதில் இடப்படும் பதிவுகள் சரியா? உண்மையா? என்று ஆராய்ந்து பார்ப்பதில்லையா?  இடப்பட்ட செய்தி பற்றிய பின்னரான நிகழ்வுகள் கவனிக்கப்படுவதில்லையா?இவ்வாறான செய்திகளால் மக்களுக்கிடையே குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லையா?

(இணையச் செய்திகள் படத்தின் மேல் சொடுக்கினால் தெளிவாகப் பார்க்கவும் படிக்கவும் முடியும்)

(இந்தப் பதிவு 10.08.2012 மாலை 6.14க்கு இடப்பட்டது)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான தகவலுக்கு நன்றி...

முடிவில் சொன்னது அனைவரும் அறிய வேண்டும்...

Lareena said...

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்க முனையும் இத்தகைய பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராக ஊர் ஜமாஅத் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்தில் வீண் குழப்பம் விளைவித்து, அதன் அமைதிக்குப் பங்கமேற்படுத்துவது கொலையைவிடக் கொடியது என்ற செய்தியை பரவலாய் மக்களைச் சென்றடையச் செய்வதில் மஸ்ஜித்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.

ஆராயாமல் வதந்திகளைப் பரப்பும் ஊடங்களைப் பற்றி என்னத்தச் சொல்ல!
:(