Wednesday, August 3, 2011

நான் அவனில்லை!


மேலேயுள்ள படத்தில் உள்ளவர்களைப் பார்த்து யார் என்று சொல்லுங்கள் என்று கேட்டால் ‘இது தெரியாதா... நம்ம ஜோர்ஜ் புஷ் அண்ணாச்சி’ என்று எந்த விதத் தயக்கமும் இன்றிச் சொல்லி விடுவீர்கள். ‘அட சின்ன வயசில அழகாத்தான் இருந்திருக்காரு...’ என்று கூடவே ஒரு கொமன்ட்டும் அடிப்பீர்கள்.


ஆனால் இருவரும் ஒருவரல்ல என்பதுதான் உண்மை!

பையன் பெயர் உஸாமா நபில். எந்த நாடு என்று கேட்கிறீர்களா... ஆச்சரியப்படுவீர்கள்... வேறென்ன ஈராக்தான்!

2005ல் எடுத்த படம் அது. அசலாக ஜோர்ஜ் புஷ் போலவே இருக்கிறான். அமெரிக்கப் படையினர்தான் கற்பழிப்பில் ஈடுபட்டார்கள்... பெரியவருமா... என்று உங்களுக்குச் சந்தேகம் வந்தால் அது தப்பு!

உசாமாவின் தந்தை ஒரு சாதாரண மனிதர். ஒரு சில்லறைக் கடைக்குச் சொந்தக்காரர்.

ஜோர்ஜ் புஷ் போலவே இருப்பது உசாமாவுக்குப் பெரும் தலையிடி. அவன் போகுமிடமெல்லாம் இந்தப் பிரச்சினை ஒரு நிழல் போல அவனைச் சித்திரவதை செய்து கொண்டேயிருக்கிறது.

உசாமா நபில் சொல்கிறான்:-

“இது எனது விருப்பம் அல்ல. அல்லாஹ்வின் ஏற்பாடு! இறைவன் ஒரே மாதிரி 40 பேரைப் படைக்கிறானாம். (இது அரபியில் வழங்கப்பட்டு வரும் மொழி). என்றுடைய தந்தையார் இந்த உருவ ஒற்றுமை பற்றி நீ கவலைப்படாதே என்று அடிக்கடி சொல்வார். உண்மையைச் சொல்லப் போனால் ‘ஜோர்ஜ் புஷ்’ என்கிற பெயரை நான் பல காரணங்களுக்காக வெறுக்கிறேன். இந்தப் பெயர் ஓர் அறபுப் பெயரோ இஸ்லாமியப் பெயரோ அல்ல. ஈராக்கில் ஆயிரக் கணக்கான சிறுவர்களைக் கொன்றவன் அவன். இந்தத் தோற்ற ஒற்றுமையை மறைக்க பாடசாலையில் நான் எவ்வளவோ முயற்சிக்கிறேன். ஆனால் சீக்கிரம் அடையாளம் கண்டு கொண்டு ‘புஷ்’ என்று என்னை அழைக்கிறார்கள். இப்படி அழைக்கும் போது எனக்கு திகைப்புத்தான் ஏற்படுகிறது. ஏனெனில் தொடர்ந்து அழைக்கப்பட்டால் அப்படியே அப்பெயர் நிலைத்து விடுமோ என்கிற பயம்தான். இதிலிருந்து எப்படி என்னைக் காத்துக் கொள்வது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”
உஸாமா நபீலின் தந்தை என்ன சொல்கிறார் தெரியுமா:-

“எனது மகன் உஸாமா மிகவும் கெட்டிக்காரன். நானில்லாத வேளையில் கடையில் ரொம்பவும் பொறுப்புணர்வுடன் செயல்படுவான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவனது முகவாக்கு ஜோர்ஜ் புஷ்ஷைப் போல் இருப்பதுதான். கடைக்கு வருபவர்கள் மற்றும் இந்த இடத்தால் குறுக்கறுப்பவர்கள் சற்றுத் தாமதித்து அவனை ஜோர் புஷ் என்று அழைக்கிறார்கள். சிலர் “சின்ன புஷ்’ என்கிறார்கள்.


அவ்வாறு அவனை அழைக்கும் போது அவன் நிலைகுலைந்த போகிறான். அவர்கள் சும்மா தமாஷ் பண்ணத்தான் அழைக்கிறார்கள் என்ற போதும் அவன் சின்னப் பையன் அல்லவா அவனுக்குக் கோபம் வருகிறது. சில வேளைகளில் அப்படி அழைக்கும் எனது வாடிக்கையாளர்களுக்கு மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பதில் சொல்லி விடுகிறான்.

அவன் இவ்வாறு அழைக்கப்படுவதான் பாசாலைக்குச் செல்வதற்கும் தயங்குகிறான். அவனை அவ்வப்போது சமாதானப்படத்திக் கொண்டேயிருக்கிறேன். “காலவோட்டத்தில் ஜோர் புஷ்ஷை மக்கள் மறந்த விடுவார்கள். நீயும் உனத உண்மையான தோற்றத்தில் உண்மையான பெயருடன் நிலைப்பாய்” என்று சொல்லியிருக்கிறேன்.”

பாடசாலையில் மட்டுமன்றி தெருவிலும் மற்றும்  அல்லல் படும் உஸாமாவின் துயரத்தைச் சற்று நினைத்துப் பாருங்கள். ஒரு நல்ல மனிதனின் முகவாக்கு அவனுக்குக் கிடைத்திருந்தால் அவன் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பான். இப்படியொரு நாசமாப் போவானின் முகத்தையல்லவா இறைவன் கொடுத்து விட்டிருக்கிறான்.

2005 செப்டம்பரில் அல் கலீஜ் பத்திரிகையில் வந்த செய்திதான் இது. உஸாமா இன்னும் உயிருடன் இருக்கிறானா அல்லது அமெரிக்கர்கள் கொன்று விட்டார்களா தெரியவில்லை. நாம் அவன் உயிருடன் இருக்கிறான் என்றே நம்புவோம்.

அவனது தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுமாறு அந்த ரமளானில் நான் பிரார்த்திக்கிறேன். நீங்களும் அவனுக்காகப் பிரார்த்தியுங்கள். ‘அந்த முகம் எப்படியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஜோர்ஜ் புஷ்ஷின் முகமாக இருக்கக் கூடாது’ என்று இறைவனைக் கேளுங்கள்.

மனித குலத்தில் இனிமேல் யாருக்கும் புஷ்ஷின் முகம் போல் ஒரு முகத்தை இறைவன் கொடுக்கக் கூடாது!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

தொடர்ந்து அழைக்கப்பட்டால் அப்படியே அப்பெயர் நிலைத்து விடுமோ என்கிற பயம்தான். இதிலிருந்து எப்படி என்னைக் காத்துக் கொள்வது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறேன்//

நான் அவனில்லை!"நான் அவனில்லை!"நான் அவனில்லை!"

shenbagam said...

ஒரே நாட்டைச் சேர்ந்த ஒரே இனத்தைச் சேர்ந்த இருவருக்குள் இந்த கருப்பு-வெள்ளை பேதமென்றால் எங்கே போய் முட்டிக்கொள்வது. என்ன இருந்தாலும் கருப்பைக் கண்டு அலறிய வெள்ளைப் பெண்மணிக்கு விமானப் பணிப்பெண் தனது புத்தி சாதுரியத்தால் முகத்தில் கரியைப் (மறைமுகமாக) பூசிவிட்டார். விமானப்பணிப்பெண்ணுக்குத் தான் ஒரு சபாஷ்.
சகாதேவன் விஜயகுமார்

Shaifa Begum said...

பாவம் சிறுவன்...இவனோட மூஞ்சா சிறுவனுக்கு வரவேண்டும்...? இறைவன் இதிலும் நல்லதையே நாடி இருப்பான்...நானும் இச்சிறுவனுக்காக பிராத்திப்பேன்...