Tuesday, August 9, 2011

பட்டுக்கோட்டைக்கு வழியைக் கேட்டால்....


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - 13

பட்டுக்கோட்டைக்கு வழியைக் கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு என்கிறது மலேசியாவிலிருந்து வரும் நம்பிக்கை சஞ்சிகை!

மலேசியாவில் இலக்கிய விழாவொன்றை நடத்திவிட்டு சந்தோசத்தின் உச்சத்தில் குப்பப்பிச்சை முகம்மது இக்பாலின் குழுவிலுள்ள மைதீ சுல்தான் என்பவர் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன், கவிஞர் ஜின்னாஹ் சரிபுத்தீன் ஆகியோர் விழாவுக்கு அழைக்கப்படக் கூடாதவர்கள் என்று ஒரு பட்டியலை நீட்டியதாக நம்பிக்கை இதழில் எழுதியிருந்தார்.

அச் சஞ்சிகையில் இடம்பெற்ற கட்டுரையை அப்படியே ஸ்கேன் செய்து எனது வலைத் தளத்தில் இட்டிருந்தேன்.  21 ஜூன் 2011 அன்று “நம்பிக்கையும் வம்புக் கையும்” என்ற தலைப்பில் அந்தப் பதிவு இடம் பெற்றிருந்தது. அந்தக் கட்டுரை உண்மைக்குப் புறம்பான விடயங்களைத் தெரிவிக்கிறது என்பதை ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் குப்பப்பிச்சை முகம்மது இக்பாலுக்கும் கவிஞர் ஜின்னாஹ் சரிபுத்தீன் கட்டுரை எழுதிய மைதீ.சுல்தான் என்பவருக்கும் எழுதியிருந்த மறுப்பு மின்னஞ்சல்களையும் சேர்த்தே வலைப் பதிவில் இட்டிருந்தேன்.

பின்னால் வந்த இதழொன்றில் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீனுக்கு மட்டும் நம்பிக்கை சஞ்சிகை பதில் தந்திருப்பதாகத் தெரிவித்து அந்தப் பதிலின் ஸ்கேன் பிரதி நண்பர் ஒருவரால் நமக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதான் நம்பிக்கையில் வெளிவந்திருக்கும் சப்பைக் கட்டு!

இதில் என்ன சொல்லப்படுகிறது என்று பார்ப்போம்!

--------------------------------------------------------------------------------------------------

ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் அன்போடு அழைக்கப்பட்டார்!

நம்பிக்கை ஜூன் இதழில் கவிஞர் மைதீ. சுல்தான் மலேசியாவில் நடந்த உவக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பற்றிய தமது நினைவுகளைக் கட்டுரையாக எழுதியிருந்தார். கட்டுரையைப் படித்த ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் அதிலுள்ள சில வரிகள் தம்மைச் சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டிருப்பதாகவும் அது தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மாநாட்டுக்கு வலியுறுத்தி வேண்டுகோள் விடுப்பதற்காக மாநாட்டு இலக்கியக் குழுவினர் சென்னையில் ஹாஜி ஜாபர்தீன் இல்லம் சென்ற போது அவர் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் வருகிற நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட சில காரணங்களால் தாம் வரவிரும்பவில்லை என உறுதியாகத் தெரிவித்து விட்டார். அவருடன் இருந்த இலக்கிய நண்பர்களும் அந்தக் கருத்தையே எதிரொலித்தனர்.

இந்தக் கருத்தையே கவிஞர் மைதீ சுல்தானின் வரிகள் தெரிவிக்கின்றன. எந்தச் சிலருடைய வருகையை தங்கள் வரவியலாமைக்குக் காரணமாக அவர்கள் கருதினரோ அவர்கள் கூறியதையே தமது நடையில் “யார் யாரை அழைக்கக் கூடாது என்ற பட்டியலை நீட்டிக் கொண்டிருந்தனர்” என்று எழுதியிருக்கிறார்.

சொற்களும் சொன்ன முறையும் மாறியிருந்தாலும் அவர் எழுதியதில் தவறான கருத்தோ பொய்யான செய்தியோ இல்லை. அது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரையில் இயல்பாக வெளிப்பட்ட ஒரு செய்தியாகும்.  மாறாக ஹாஜி ஜார்தீனை சிறுமைப்படுத்தும் நோக்கம் கட்டுரையை எழுதிய கவிஞர் மைதீ சுல்தானுக்கோ வெளியிட்ட நம்பிக்கை இதழின் வெளியீட்டாளர் டத்தோ இக்பாலுக்கோ இதழைச் சார்ந்த மற்றவர்களுக்கோ மாநாட்டு இலக்கியக் குழுவையும் ஏற்பாட்டுக் குழவையும் சார்ந்த மற்ற யாருக்கோ அணுவளவும் இல்லை என்பதை இதன் வழி உறுதிப்படுத்துகின்றோம்.

கட்டுரையில் இயல்பாக இடம்பெற்றுவிட்ட இச்சொற்கள் ஹாஜி ஜாபர்தீன் புண்படக் காரணமாக நேர்ந்தமைக்காக வருந்துகிறோம்.
----------------------------------------------------------------------------------- ஆசிரியர்

செய்தியின் படி ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் மாநாட்டுக்கு வலியுறுத்தி அழைக்கப்பட்டுள்ளதை முதற் பந்தி தெரிவிக்கிறது. தலைப்போ “அன்போடு அழைக்கப்பட்டார் என்கிறது.

இன்ன இன்னார் வருவதால் தான் வரவிரும்பவில்லை என்கிறார் ஹாஜி ஜாபர்தீன் சொல்லியுள்ளார். யார் யாரை அழைக்கக் கூடாது என்ற பட்டியலை அவர்கள் நீட்டிக் கொண்டிருந்தனர் என்கிறார் மைதீ. ஆனால் இரண்டும் ஒன்றுதானாம் என்று சோப்புத் தேய்க்கிறது நம்பிக்கை.
இவர்கள் வரக்கூடாது என்று சொல்லப்படுவதும் இவர்கள் வருவதால் தான் வரவில்லை என்று சொல்லப்படுவதும் ஒன்றுதானாம். அது கவிஞரிடம் இயல்பாக வெளிப்பட்ட செய்தியாம்! என்னவொரு கண்டுபிடிப்பு!

நம்பிக்கையில் எப்படி வேண்டுமானாலும் எழுதி விட்டு இது இயல்பு என்று சொல்ல முடியுமாக்கும்.

இது எப்படியிருக்கிறது என்றால் - ஒரு தமிழ்ப் படத்தில் நடிகர் செந்திலை வாழைப்பழம் வாங்க அனுப்புவார் நடிகர் கவுண்டமணி. செந்தில் ஒரு பழத்தைச் சாப்பிட்டு விட்டு ஒன்றைக் கொண்டு வருவார். ஒன்று இங்கேயிருக்கு மற்றது எங்கே என்று கேட்டதும் ”இதுதான் அது” என்பாரே அப்படித்தான் இருக்கிறது.

கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மைதீ சுல்தானுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் நேர்மையான மனிதர் என்றால் அதற்குப் பதில் தரவேண்டாமா? கட்டுரை எழுதிய மைதீ சுல்தான் தன் இயல்பான எழுத்து நடையால் ஒருவர் நொந்ததாகத் தகவல் தந்தால் அவருக்குப் பதில் சொல்ல வேண்டாமா?

நம்பிக்கைக்கு வெளியீட்டாளரும் கௌரவ ஆசிரியரும் இக்பால். நிர்வாக ஆசிரியர் வேறு ஒருவர். பொறுப்பாசிரியர் பிதாவுல்லா. இந்தப் பதிலை அளித்த ஆசிரியர் யார்?

உப்பைத் தின்றால் தண்ணீர் அருந்தத்தான் வேண்டும். மீண்டும் தாகத்துக்கு உப்புத் தண்ணீரைக் குடித்தால் மீண்டும் தாகம் வரும்!

இனி, பலருக்குத் தெரியாத தகவல் ஒன்று உண்டு.

ஹாஜி ஏவி.எம். ஜபாபர்தீனும் மலேசியர்தான். அப்படியாயின் இந்த இலக்கிய விழாவில் ஜாபர்தீன் ஹாஜியின் பங்கு எப்படி இல்லாது போனது என்று கேள்வி எழும்.

குப்பப்பிச்சை முகம்மது இக்பாலை விட இஸ்லாமிய இலக்கியச் செயற்பாடுகளில் முன்னின்றவர் ஹாஜி ஜாபர்தீன். 199ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய இலக்கிய ஆறாம் மாநாட்டின் அச்சாணியாய் இருந்தவர். அப்படியான ஒரு மலேசியர் மலேசியாவில் நடந்த மாநாட்டின் தலைவராகவோ செயலாளராகவோ இருந்திருக்க வேண்டாமா?

மலேசியாவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்துவதற்கான முதலாவது ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட பொழுது ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் மலேசியாவில்தான் இருந்தாராம். ஆனால் அவருக்குத் தெரியாமலேயேதான் அவரது 40 வருட கால நண்பராக குப்பப்பிச்சை முகம்மது இக்பால் அக்கூட்டத்தை நடத்தியிரு்கிறார். அவரை அழைத்தால் சில வேளை தலைமை அவருக்குப் போய் விடலாம் அல்லவா?

எல்லாவற்றையும் செய்து முடித்து தானே எல்லாமாகவும் ஆன பிறகு (மாநாட்டுக் குழுவுக்கு செயலாளர் கூட நியமிக்கப்படவில்லை என்பதை ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன்) இலக்கியக் குழுவை ஜாபர்தீன் ஹாஜியின் வீட்டுக்கு அனுப்பினாராம் இக்பால். எப்படி விளையாட்டு.

அப்படி அனுப்பி அவர் சொன்ன கருத்தையும் திரித்து எழுதி பிறகு ஜாபர்தீன் ஹாஜி பதில் எழுதிய பிறகே இயல்பாக பிழையாகவே எழுதும் கவிஞரைக் கொண்டு இயல்பாக எழுதி விட்டார்கள்!

”ஒண்ணு இந்தாருக்கு... மற்றது எங்கே.?”

”அதாங்க இது!”


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: