Thursday, July 12, 2012

இஸ்லாமிய இலக்கிய ஆய்வகக் கருத்தரங்கு -1

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஏற்பாட்டில் மாதாந்த ஒன்று கூடல் வரிசையில் முதலாவது ஒன்றுகூடல் இன்று மாலை 5.00 மணிக்கு வௌ்ளவத்தை, 42வது லேன், இல. 31 - 1/1, (இரண்டாம் மாடி) பிரின்ஸ் அகடமியின் கூடத்தில் நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தில் தலைவர் “காப்பியக்கோ” டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமை தாங்கினார்.


ஆலிம் கவிஞர் மௌலவி காத்தான்குடி பௌஸ் அவர்களின் கிறாஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.


 “தற்காலத் தமிழ் இலக்கியப் பரப்பில் முஸ்லிம் படைப்பாளிகளின் பங்கு” என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்த போதும் தனது வேலைப்பளுவுக்குள் விசாலமான தலைப்பில் உரை நிகழ்த்தும் சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துத் தனது வாசிப்புக்குட்பட்ட உலகில்  தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான முஸ்லிம் ஆளுமைகள் என்ற பின்னணியில் உரை நிகழ்த்தினார் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் க. இரகுபரன் அவர்கள்.


நிகழ்வில் விருந்தினராகக் கலந்து சிறப்பித்த புரவலர் ஹாஜி அப்துல் கையூம் அவர்களுக்கு தலைவர் பொன்னாடை அணிவித்துக் கௌரவித்தார்.


 “மத்திய கிழக்கு அரசியல் பற்றிய இலங்கை முஸ்லிம்களின் புரிதல்” என்ற தலைப்பில் “மீள்பார்வை” பிரதம ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர் உரை நிகழ்த்தினார்.


சர்வதேசம், ஊடகங்கள், அரசுகள் என்று மிகத் தெளிவாகத் தனது கருத்துக்களை உரையின் போது அவர் முன் வைத்தார்.


நிகழ்வில் சஞ்சிகைகளின் ஆசிரியர்கள், இலக்கியப் படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.


ஒரு குறிப்பிட்ட தொகையினரே அழைக்கப்பட்ட போதும் அவர்களில் பெரும்பாலானோர் நிகழ்வில் கலந்து கொண்டது நம்பிக்கையைத் தந்திருக்கிறது.


எதிர்வரும் றமளானுக்குப் பின்னர் இஸ்லாமிய ஆய்வகத்தின் இரண்டாவது ஒன்றுகூடற் கருத்தரங்கு நடைபெறும். இரண்டாவது கருத்தரங்கு இன்னும் பல புதிய அழைப்பாளிகளுடன் புதிய வியூகங்களுடனும் ஏற்பாடு செய்யப்படும்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

பி.அமல்ராஜ் said...

நிகழ்வு திருப்திகரமானதாக இருந்தது (தனிப்பட்ட முறையில் எனக்கு). என்னையும் அழைத்தமைக்கு நன்றிகள்.

Lareena said...

எதிர்காலத்தில் இன்னும் சிறப்புற நிகழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

பகிர்வுக்கு மிக்க நன்றி.