நானும் நந்தினி சேவியரும்
இவ்வருடத்துக்கான அரச தேசிய சாஹித்திய விருது வழங்கல் வைபவம் இன்று 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகள் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த வருடம் நான் வெளியிட்ட அரபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியான “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” நூலுக்கு சிறந்த மொழிபெயர்ப்புத் தொகுதிக்கான விருது கிடைக்கப் பெற்றது.
இம்முறை விருது பெற்ற தமிழ் நூல்கள் மற்றும் நூலாசியரர்கள் விபரம் வருமாறு-
01. சிறந்த நாவல் - “சொடுதா” - எஸ்.ஏ.உதயன்
02. சிறந்த நிறுகதைத் தொகுதிகள்
“வெள்ளி விரல்” - ஆர். எம்.நௌஷாத்
“நெல்லிமரத்துப் பள்ளிக்கூடம்” - நந்தினி சேவியர்
03. காவியம் - “தோட்டுப்பாய் மூத்தம்மா” - பாலமுனை பாரூக்
04. கவிதை - “நிலம் பிரிந்தவனின் கவிதை” - சுஜந்தன்
05. சிறந்த ஆய்வு - “இந்துக் கணித வானியல் மரபு” - ச.முகுந்தன்
06. சிறந்த நாடக நூல் - “கருவறையில் இருந்து” - கந்தையா ஸ்ரீகந்தவேள்
07. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - “அம்மாவின் ரகசியம்” - எம்.ரிஷான் ஷரீப்
08. சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை - “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” - அஷ்ரஃப் சிஹாப்தீன்
09. சிறந்த மொழிபெயர்ப்பு (இளையோர் இலக்கியம்) - “காட்டுப்புற வீரர்கள்” - திக்குவ்லைக் கமால்
10. சிறந்த மொழிபெயர்ப்பு (நானாவிதம்) - “பர்மிய பிக்கு சொன்ன கதைகள்” - சோ.பத்மநாதன்
நானும் சிறந்த கவிதை நூலுக்கான விருது பெற்ற சுஜந்தனும்
காவியத்துக்கான பரிசு பெற்ற பாலமுனை பாரூக், கவிஞர் அல் அஸூமத் ஆகியோருடன் நான்
சிறுகதைக்கான விருது பெற்ற நந்தினி சேவியர், நாடக நூலுக்கான விருது பெற்ற கந்தையா ஸ்ரீகந்தவேள், நான் மற்றும் நாவலுக்கான விருது பெற்ற எஸ்.ஏ. உதயன்
இறுதிச் சுற்றுக்கு வந்த ஏனைய நூல்களும் நூலாசிரியர்களும்
--------------------------------------------------------------------------------------
01. விபுலானந்தர் காவியம் - சுப்ரமணியம் சிவலிங்கம்
02. வாத்தியார் மாப்பிள்ளை - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
03. அலைக்குமிழ் - அகளங்கள்
04. காடும் கழனியும் - ஆ.மு.பி. வேலழகன்
05. அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் - தாட்சாயணி
06. நேற்றுப்போல் இருக்கிறது - கே.எஸ். பாலச்சந்திரன்
07. மீண்டு வந்த நாட்கள் - வதிரி. சி. ரவீந்திரன்
08. ஓவியம் செதுக்குகிற பாடல் - ஸ்ரீபிரசாந்தன்
09. குறுங்கூத்துக்கள் - கலையார்வன்
10. முல்லைத் தீவுத் தாத்தா - திக்குவல்லை கமால்
குறிப்பு- பரிசு பெற்ற அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ள முயன்ற போதும் ஜனத்திரளுக்குள்ளும் கொழும்பு மீளும் அவசரத்துக்குள்ளும் அது சாத்தியமற்றுப் போயிற்று.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
7 comments:
மாஷா அல்லாஹ்! மப்ரூக்!
மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்,Sir! :)
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் .. உங்களுக்கு நன்றி
அரச சாகித்திய விருது, உரியவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குறைபாடு நீண்டகாலமாக இருந்து வந்தது. யாத்ராவில் இடம்பெற்ற முல்லாவின் கவிதைகளில் ஒன்று இதுபற்றி குத்திக் காட்டியதைப் படித்ததாக ஞாபகம். இருப்பினும், 2011ம் ஆண்டுக்கான இலக்கிய ஆக்கங்களுக்காகப் பரிசு பெற்றோரைப் பார்க்கையில் திருப்தியும் நிறைவும் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள்!
மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
My hearty congratulation
S.M.M.Bazeer-UK
congratulation sir
வாழ்த்துக்கள்..நண்பா..
கே.எஸ்.பாலச்சந்திரன்
Post a Comment