Friday, August 26, 2011

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!



இவர் சிரிய தேசத்தைச் சேர்ந்த பாடகர். பெயர் இப்றாஹிம் காஷ_ஷ்.

சிரியாவின் ஹமா பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பொது நிகழ்வுகள், திருமண வைபவங்களில் பாடுகின்ற மரபு ரீதியான பாடகர்.

சிரியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியில் இவரும் ஒரு பிரபல நட்சத்திரம். மிக எளிமையான வசனங்களைக் கொண்டு அவரே எழுதிப்பாடும் அவரது பாடலின் ஒவ்வொரு வசனத்தையும் அவர் பாட அந்த வசனங்களை மீளப் பாடுகின்றனர் லட்சக் கணக்காகத் திரண்டிருக்கும் மக்கள்.

அந்தப் பாடல் சிரியாவின் தலைவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறது.

அடக்கு முறைக்கும் அசுரத்தாக்குதலுக்கும் அரச படையினரது துப்பாக்கிக் குண்டுகளுக்கும் எதிராக வலிமை மிக்க ஆயுதமாக அவர் பயன்படுத்தியது அவரது குரலை மாத்திரமே!

ஹமா நகர மத்தியில் அவர் கடைசியாகப் பாடியது இவ்வருடம் ஜூலை முதலாம் திகதி. இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடி நின்று அரச எதிர் ஆர்ப்பாட்டத்தை நடத்திய போது அவர் பாடினார்.

“பஷர் நீர் வெளியேற வேண்டிய தருணம் இது...

பஷர், மாஹிரி. ரமி... ஆகியோர் கொள்ளையர்கள்...

அவர்கள் எனது உறவினர்களைக் கொள்ளை கொண்டவர்கள்...

பஷர்... உம் குற்றங்கள் மன்னிப்புக்குரியலையல்ல...

பஷர்... நீர் அமெரிக்காவின் கையாள்... நீர் ஒரு பொய்யன்...

பஷர்... நீ ஒரு தேசத் துரோகி...


அவமானப்படுவதை விட இறப்பது மேல்...

சுதந்திரம் வாசலில் வந்து காத்து நிற்கிறது...

மக்கள் உமது ராஜாங்கத்தை வீழ்த்தத் துடிக்கிறார்கள்...

பஷர்... நீர் வெளியேற வேண்டிய தருணம் இது....!”


இப்றாஹிம் காஷ_ஷ் இன்று உயிருடன் இல்லை.

இந்த ஆர்ப்பாட்டம் நடந்து சரியாக நான்காவது தினம் அஸ்ஸா ஆற்றங்கரையில் இப்றாஹிம் கஷ_ஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது குரல் வளை அறுக்கப்பட்டு உடல் துப்பாக்கிச் சன்னங்களால் துளைத்தெடுக்கப்பட்டிருந்தது.


மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சியின் வரிசையில் சிரியாவில் ஏற்பட்ட எழுச்சியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பஷர் அல் அஸாத்தின் அரசு தெளிவான ஒரு எச்சரிக்கையை இப்றாஹிம் காஷ_ஷின் கொலை மூலம் விடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மக்கள் அடக்குமுறைக்கெதிராகவும் அராஜகங்களுக்கெதிராகவும் குரல் கொடுக்கும் பாடகர் ஒருவர் கொலை செய்யப்படுவது இதுவே முதற் தடவையல்ல. சிலியில் 1973ல் ஒகஸ்டோ பினோச்சே இராணுவப் புரட்சி மூலம் அரசைக் கைப்பற்றிய பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விக்டர் ஜாரா என்ற பிரபல பாடகர்.


ஒரு மகத்தான மக்கள் கலைஞனான அவருக்கு நேர்ந்த கதி பரிதாபத்துக்குரியது. அவரை அடித்து எலும்புளை உடைத்துச் சித்திரவதை செய்து உடலை சந்தியாகோ தெருவில் வீசி எறிந்தது அரசு. அவரது உடலில் 44 துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன.

சலீம் அல் லோஸி லெபனானியப் பத்திரிகையாளர். இவர் சிரிய அரசுக்கெதிராக 80களில் எழுதி வந்தவர். லண்டனிலிருந்து வெளிவரும் அல் ஹவாதத் பத்திரிகையின் வெளியீட்டாளரான இவர் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.




கையில் விலங்கிடப்பட்ட நிலையில் கொலையாகியிருந்த இவரது முகத்தில் அசிற் ஊற்றப்பட்டிருந்தது. இந்தக் கொலையின் பின்னணியில் சிரிய அரசே செயற்பட்டது என்று ஊடகங்கள் அடித்துப் பேசின. இன்றும் அவர் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்.

இப்றாஹிம் கஷ_ஷின் மரணத்தைத் தொடர்ந்து அரச எதிர்ப்பு மேலும் வலுவடைந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோரின் பதாதைகளில் “ஹாபிஸ் (பஷரின் தந்தை) எனது பாட்டனாரை 1982ல் கொலை செய்தார். பஷர் எங்கள் தந்தையை (இப்றாஹிம் காஷ_ஷ்) 2011ல் கொலை செய்தார்” என்று எழுதப்பட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.



31 வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையாரின் அரசினால் கொல்லப்பட்ட சலீம் லோஸியை மக்கள் இன்றும் மறக்கவில்லை என்பதை இந்தப் பதாதைகள் மூலம் பஷர் அறிந்து கொண்டிருப்பார். ஆக அதிகாரத்தில் இருக்கும் போது யார் அநியாயக் கொலைக்கு ஆளானாலும் மக்கள் அதனை இலகுவில் மறந்த விடுவதில்லை என்பதையும் கூடவே அவர் புரிந்து கொண்டிருப்பார்.

எல்லாக் கணக்குகளையும் கூட்டிக் கழிக்கும் ஒரு தினம் வரும் போது அராஜகம் நிகழ்த்தியவர்களுக்காக இரங்க ஒரு நாய்க்குட்டி கூட முன்வருவதில்லை.

இந்த நிலைக்கு ஆளான அநேகம் பேரின் அந்திம கால வாழ்க்கை தெருக்குப்பைக்குள்ளால் ஓடும் சுண்டெலியின் நிலையை விட மோசமானது.

இவ்வாறானவர்கள் அநேகரின் சரித்திரம் கண்முன்னே இருந்த போதிலும் ஆட்சியாளர்கள் ஏனோ அதிலிருந்து கற்றுக் கொள்வதில்லை.

எழுச்சிப் பாடல் ஒலிக்கும் ஒரு தொண்டையை அறுப்பதானது தனது தொண்டையையேத் தானே அறுத்துக் கொள்வதற்கு ஒரு லட்சம் கத்திகளைச் செய்து கொள்வதற்கு ஒப்பானது!

http://www.youtube.com/watch?v=3mG3V2fBYbw&feature=related

இந்த இணைப்பைச் சொடுக்கினால் இப்றாஹிம் காஷ_ஷ் பாடுவதையும் அவரைத் தொடர்ந்து மக்கள் குரல் கொடுப்பதையும் நீங்கள் கண்டும் கேட்டும் ரசிக்கலாம்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

6 comments:

RIPHNAS MOHAMED SALIHU said...

"எழுச்சிப் பாடல் ஒலிக்கும் ஒரு தொண்டையை அறுப்பதானது தனது தொண்டையையேத் தானே அறுத்துக் கொள்வதற்கு ஒரு லட்சம் கத்திகளைச் செய்து கொள்வதற்கு ஒப்பானது!" ரொம்ப சரியாய் சொன்னிங்க..
எல்லா ஆட்சியிலும் அடக்குமுறைகளும் அட்டூழியங்களும் தான் நடந்துகொண்டிருக்கின்றன. இது எப்ப தான் முடியுமோ..

Shaifa Begum said...

எழுச்சிப் பாடல் ஒலிக்கும் ஒரு தொண்டையை அறுப்பதானது தனது தொண்டையையேத் தானே அறுத்துக் கொள்வதற்கு ஒரு லட்சம் கத்திகளைச் செய்து கொள்வதற்கு ஒப்பானது!”
மிக வேதனையாக இருக்கிறது...கண்டிப்பாக அராஜகர்களுக்கு காலம் சொல்லும்...

AH said...

"இந்த நிலைக்கு ஆளான அநேகம் பேரின் அந்திம கால வாழ்க்கை தெருக்குப்பைக்குள்ளால் ஓடும் சுண்டெலியின் நிலையை விட மோசமானது" இந்த வரிகளுக்கு நம் தலைவர்களும் விதிவிலக்கல..

ASHROFF SHIHABDEEN said...

முகப்புத்தகக் கருத்தக்கள் -

Nagul Selvan
‎//எல்லாக் கணக்குகளையும் கூட்டிக் கழிக்கும் ஒரு தினம் வரும் போது அராஜகம் நிகழ்த்தியவர்களுக்காக இரங்க ஒரு நாய்க்குட்டி கூட முன்வருவதில்லை.// கண்ணீர் வரவழைக்கும் பதிவு
21 hours ago · UnlikeLike · 1 personLoading...

Farveen Mohamed
நல்ல தேடல் அண்ட் பதிவு..நீங்க நீங்கதான், நம்ம கைகளையும் கொஞ்சம் பத்திரப் படித்தக் கொள்ள வேண்டும்..நான் என்னைச்சொன்னேன்..
8 hours ago · UnlikeLike · 2 peopleYou and Farveen Mohamed like this.

Begum Sbegum
எழுச்சிப் பாடல் ஒலிக்கும் ஒரு தொண்டையை அறுப்பதானது தனது தொண்டையையேத் தானே அறுத்துக் கொள்வதற்கு ஒரு லட்சம் கத்திகளைச் செய்து கொள்வதற்கு ஒப்பானது!”
மிக வேதனையாக இருக்கிறது...கண்டிப்பாக அராஜகர்களுக்கு காலம் சொல்லும்...
4 hours ago · UnlikeLike · 1 personYou like this.

Vj Yogesh
It's very pathetic...
4 hours ago · UnlikeLike · 1 personYou like this.

MOHAMED FOWZOON said...

avarathu kural valaithan arukka mudinthathu unarvuhalai alla

ASHROFF SHIHABDEEN said...

மின்னஞ்சலில் வந்த தகவல்

Indli Service service@indli.com via u15400979.onlinehome-server.com to me
show details 5:37 PM (6 hours ago)

Hi ashroffshihabdeen,

Congrats!

Your story titled 'அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 28th August 2011 12:07:02 PM GMT

Here is the link to the story: http://ta.indli.com/story/541521

Thanks for using Indli

Regards,
-Indli