Monday, October 31, 2011

விருது விளையாட்டு!


நேற்று மாஹோவில் நடந்த தேசிய சாஹித்திய விழாவில் எனது “ஒரு குடம் கண்ணீர்“ நூலுக்கு ஒரு சான்றிதழைப் பரிசாக வழங்கியுள்ளனர். சான்றிதழை மட்டும் தேசிய விருதாகப் பெற்ற ஒரே நூல் இதுதானாம். ஏனெனில் நான் அங்கு சென்றிருக்கவில்லை. சில பிரிவுகளில் இவ்விரண்டு விருதுகளும் பணப்பரசும் வழங்கப்பட்டுள்ளன. பரிசுக்குரிய நூல்தான், ஆனால் சான்றிதழ் மட்டுமே எங்களால் வழங்க முடியும் என்பதே இதன் மூலம் உணர்த்தப்படும் செய்தி. எதுவாக இருந்தாலும் தேசிய சாஹித்தியப் பரிசுகளில் முதன் முதலாக சான்றிதழை மட்டும் பெற்று விட்டார் “சர்வதேச சகலருக்கும் சால்வை அமைப்பின் தேசியத் தலைவர்.” யாரங்கே.... எங்கேயடா தேசியத் தலைவருக்கான சால்வை? .............

மேற்படி குறிப்பு தேசிய சாஹித்திய விருது வழங்கப்பட்ட அடுதத தினம் முகப்புத்தகத்தின் எனது பக்கத்தில் 29ம் திகதி இடப்பட்டது. இதுகுறித்த கருத்துப் பரிமாறல் இன்று வரை தொடர்கிறது. முகப்புத்தக நட்பில் இல்லாத எனது வாசக அன்ப, அன்பிகளுக்காக அவற்றை இங்கே பதிவிடுகிறேன். மேலும் கருத்துக்கள் பகிரப்பட்டால் அவற்றை அவ்வப்போது இப்பதிவில் சேர்த்துக் கொள்ளுவேன். ஆகவே அவ்வப்போது எனது தளத்துக்கு வந்து விரு்பியவர்கள் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.!


Sameer Ahamed
வாழ்த்துக்கள்
Saturday at 8:51am

Kalanenjan Shajahan
வாழ்த்துக்கள்.தாழ்த்தப்படுபவர்கள் உயர்த்தப்படுவார்கள்
Saturday at 9:29am

Vj Yogesh
Namma thalakke intha nilaiyaa? Anyway congratulations sir! 
Saturday at 9:34am

Sihabdeen Najimudeen -
Congratulations, saalvai Canada vilirunthu pack panni parsalil varukirathu petruk kollungal.
Saturday at 9:49am

Shibly Poems
all the very best
Saturday at 10:15am

Amalraj Francis
வாழ்த்துக்கள்..

ஹி ஹி ஹி... என்ன கொடும சார் இது?? பெருமையா இருக்கு, ஆகக் குறைஞ்சது ஒரு சான்றிதழாவது கொடுக்கணும் எண்டு தோணிச்சே அவங்களுக்கு..
என்னங்கோ.. தலைவருக்கே.. தட்டுப்பாடா.. சால்வை???? கூட்டுங்கையா சங்கத்த உடனே..
Saturday at 10:23am

Thevarasa Mukunthan
சோகமான விடயத்தை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள். ஆனாலும் சிரிக்க முடியாமல் சோகம் மனத்தை அழுத்துகிறது.
Saturday at 11:30am

Ashroff Shihabdeen
 எழுத்தாளர்களின் நூல்களை ஆய்வு செய்ததான் நாங்கள் பட்டம் பெறுகிறோம் என்று பேரா. சோ.சந்திரசேகரன் அடிக்கடி சொல்வார். துரதிர்ஷ்டவசமாகப் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களே நுஸல்களை அநேகமாகவும் பரிசீலிப்பதாலும் அவர்களும் நூல்களை எழுதிப் பரிசுக்கு அனுப்புவதாலும் எழுத்தாளர்கள் இரண்டாவது படியிலேயே நின்று கொண்டிருக்கும் துரதிர்ஷ்டம் நீண்டகாலமாகவே நிலவி வருகிறது முகுந்தன்!
Saturday at 11:45am

Amalraj Francis
உண்மைதான்...
Saturday at 11:55am

Farveen Mohamed
எழுத்தாளர்களின் நூல்களை பேராசிரியர்கள் மதீப்பீடு செய்வதானது காலா காலமாக நடந்து வரும் ஒரு விடயம், இருந்தும் இலக்கிய ஆர்வமற்ற, அல்லது எழுத்துத் துறை சாராத பேராசிரிகள் நூலை மதிப்பிடும் போது அந்த நூலின் கனதி பற்றிய ஆழமான அறிவற்றவர்களாகவே அவர்கள் நோக்குவார்கள், இன்னொன்று தமக்கு பரிச்சயமான, அல்லது அடிக்கடி பத்திரிகைகளில் காண்கின்ற ஒரு பெயர் ஆக்கத்தின் தரத்தினைவிடவும் அவர்களை கவர்ந்து விடுவதும் உண்டு, தமது ஆசானின் முன்னுரையைக்கண்டவுடன் சிலர் நன்றிக்கடனுக்காக அந்த நூலுக்கு பரிசு வழங்குவதும் உண்டு, ஒரு நூலின் தரத்தை பரிசுகள் தீர்மானிக்கும் என்ற கருத்துடன் முற்றிலும் முரண்கருத்துடயவன் நான், ஒரு குடம் கண்ணீர் ஈழத்து இலக்கியப் பரப்புக்கு மிகவும் புதிய வரவு, அராபிய, ஆங்கிலேயே, ரஷ்ய இலக்கிய தாளங்களில் எல்லாம் இது வந்து விட்டது அராபிய கவிதை வடிவமான நாபாத்திய கவிதைகள் நானோடிகளாக ஆங்காங்கே வாழ்ந்த அரபியரின் வாழ்க்கையின் சோகங்களை சொல்லி நிற்கின்றது..அப்படித்தான் அவர்களின் கண்ணீரின் ஒரு துளியை இந்த ஒரு துளிக் கண்ணீர் அடையாளப் படுத்தியுள்ளது.
Saturday at 1:32pm

Hareerah Ibrahim
விருதுகளை விடவும் ஒரு கலைஞனுக்கு மன நிறைவையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியவை உண்மையான பாராட்டுக்களும் வாழ்த்துக்களுமே... அந்த வகையில் தங்களுக்கு அவை நிறையவே உரித்துடையவை... பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள் சார்!
Saturday at 3:35pm

Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
பணப் பரிசு இல்லாவிடினும் மனம் நிறைய வைக்க வாழ்த்துகிறோம்.
Saturday at 3:54pm

Thevarasa Mukunthan
 நீங்கள் சொல்வது உண்மைதான். நீங்கள் சொல்லும் அதே பல்கலைக்கழகச் சமூகத்தைத் சேர்ந்தவன் ஆகையால் குற்ற உணர்ச்சி உறுத்துமாப்போலுள்ளது.
Saturday at 4:29pm

Ashroff Shihabdeen
உங்களிடம் மனச்சாட்சி இருக்கிறது. உறுத்துகிறது!
Saturday at 4:36pm

Ashroff Shihabdeen
இன்னும் ஒரு கதை முஸ்லிம் எழுத்தாளர்கள் மத்தியில் உலவுகிறது... இதில் எந்தளவு உண்மை என்று தெரியவில்லை... இன்று தமிழில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர் தொகைக்கு நிகராகத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும் தமிழில் எழுதி வருகிறார்கள். உலவும் அந்தச் செய்தி என்னவென்றால் - சாஹித்திய விருதைத் தீர்மானிப்பவர்கள் - இரண்டு முஸ்லிம்களுக்கு மேல் விருதுக்குத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதுதான். இது எழுதப்படாத் சட்டமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இது பற்றி யாராவது தெரிந்தவர்கள் பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியவி்ல்லை. காரணம் அடுத்தடுத்த வருடங்களில் தமது புத்தகம் வந்தால் அறுத்து விடுவார்கள் என்பதுதான்.... முழுத் துன்பங்களும் என்று நீங்கும் என்பதுதான் எனக்கு விளங்கவேயில்லை. ............
Saturday at 4:43pm

Ashroff Shihabdeen
இந்தக் குறிப்புக்களையெல்லாம் பலர் படிக்கிறார்கள். ஆனால் கருத்துச் சொல்ல அச்சம்.... அச்சம்..... அச்சம்..... அச்சம் இன்னும் நிலவுகிறது தோழர்களே.... தோழியரே
Saturday at 4:45pm

Mohamed Shihar
விருதைத் தீர்மானிப்பவர்கள் - இரண்டு முஸ்லிம்களுக்கு மேல் விருதுக்குத் தேர்ந்தெடுப்பதில்லை என்பது உண்மையான செய்தியாக இருந்தால் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒப்புக்காகவே இரண்டு முஸ்லிம்களைத் தெரிவுசெய்கிறார்கள் என்று எண்ணுகிறேன். (அதற்காக, தெரிவுசெய்யப்படும் எல்லா நூல்களுமே தகுதி குறைந்தவை என்ற கருத்தில் கூறுகிறேன் என்று கருதிவிட வேண்டாம்). முஸ்லிம் தரப்பிலிருந்து ஏதேனும் எதிர்ப்பு வந்துவிடும் என்கிற முன்னெச்சரிக்கையோடு நடக்கும் கண்துடைப்பாய் இருக்கலாம் என்பதே என் கருத்து. அவர்கள் நான் கருதும் விதமாகவே வழங்குகிறார்கள் என்றால் தமிழ் நூல்களுக்கென அவ்விருதுகளை வழங்கவில்லை, மாறாக தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் நூல்களுக்கே விருதுகள் வழங்குகிறார்கள் என்றுதான் அர்த்தம் கொள்ளவேண்டியிருக்கிறது.
Saturday at 6:05pm

Sethuraman Ramasamy
இதிலும் ஊழலா?
Saturday at 6:12pm

Thevarasa Mukunthan
தமிழில் எழுதப்பட்ட தகுதியான படைப்புக்களுக்கு பரிசு வழங்காமல் இன ரீதியான ' கோட்டா' முறையையா அமுல்படுத்துகிரார்கள்?
Saturday at 7:09pm

Ashroff Shihabdeen
இம்முறை வருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்யும் குழுவிலும் கூட ஒரு முஸ்லிம் அறிஞரோ படைப்பாளியோ இல்லையாம் என்றும் அறியக் கிடைக்கிறது..... வாழ்க தமிழ்!
Saturday at 8:25pm

Mohideen Saly
உண்மையாய்ச் சொன்னீாகள் நண்பரே! நானும் நேற்று மஹவைக்குச் சென்றிருந்தேன் உங்கள் படைப்பிற்கு மாத்திரம் சான்றிதழ் மட்டும் வழங்கியது ஆச்சாியமாகவே இருந்தது. சிலருக்கு ஒரே நூலுக்கு இரண்டு விருதுககள் கிடைக்க உங்கள் நூலுக்கு மாத்திரம் சான்றிதழ் மாத்திரம் வழங்கியது மனதிற்கு சங்கடமாகவே இருந்ததது. உங்களை சந்திக்கும் ஆவலில் அங்கிருந்தேன் பின்னா நீங்கள் வராதது நல்லதுதான் என எண்ணிக்கொண்டேன்.
Saturday at 9:54pm

Ashroff Shihabdeen
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்று ஒன்று ஏன் ஆரம்பமானது என்பது இப்போது புரிகிறதா?
Saturday at 10:33pm

Elilventhan Sinnathurai
இல்லை. மத்தியஸ்தம் செய்தவர்கள் தங்கள் இயலாமையை மறைக்கத் தந்த குழாய்தான் - மன்னிக்கவும் விருதென்ற சான்றிதழ் வைத்த வெண்கலக் குழல்தான் அது.
Saturday at 10:42pm

Ashroff Shihabdeen
அதற்குள் ஒரு சான்றிதழ் இருக்கிறது. றபர் பேண்ட் போட்டுச் சொருகியிருந்தார்கள். இதில் இன்னொரு செய்தியும் உண்டு. அங்கு சென்றிருந்த இறுதிச் சுற்றுக்குத் தெரிவான நூல்களின் ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் தருவோம் என்றும் சொன்னார்களாம்... என்னையா நடக்குது
Saturday at 10:45pm

Elilventhan Sinnathurai
ஆனால் ஒரு வகையில் நீங்கள் பெருமைப்படுத்தப்பட்டுள்ளீர்கள். சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். முதன் முதலாக, சாஹித்ய விழாவில் வெண்கலக்குழாய் மட்டுமே வாங்கிய ஒரேயொரு எழுத்தாளர் (சிங்கள, தமிழ், ஆங்கில எழுத்தாளர்கள் மத்தியில் ) தாங்கள் மட்டுமே என்பதே அந்தப் பெருமை.
Saturday at 10:49pm

Elilventhan Sinnathurai
இதற்காகவே நிச்சயம் ஒரு பன்னாடை மன்னிக்கவும் பொன்னாடை தயார் செய்யலாம். கவலையை விடு நண்பா.
Saturday at 10:50pm

Ashroff Shihabdeen
அது சரி... நீ அந்த வேலையப் பாரு மச்சான். சால்வையொன்றை ரெடி பண்ணு
Saturday at 10:51pm

Ashroff Shihabdeen
அட... இனி எனது பெயருக்குப் பின்னால் “வெண்கலக் குழாய் விருது வென்றவர்” என்றும் போட்டுக் கொள்ளலாம் அல்லவா?
Saturday at 10:57pm

Selvy Jeyan
 வாழ்த்துக்கள்.. !
Yesterday at 1:14am

Ahamed Faris Mohamed Amanullah
வாழ்த்துக்கள் சேர்!! ஆனாலும் மனசுக்குள்ள சிறு வருத்தமாத்தான் இருக்கு... தலைவரே சங்கத்த உடனடியாக்கூட்டி இதுக்கொரு வண்மையான கண்டனத்த தெரிவிக்கனும்...
Yesterday at 2:42am

Ashroff Shihabdeen
கண்டனம் தெரிவிச்சு எதுவுமே ஆகப் போவதில்லை. இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் எது தமிழுக்குச் சிறந்தது என்பதை நேர்மை கொண்ட பார்வையுடன் நோக்குவோர் வந்து சேரும் வரை இந்த அவலங்கள் தொடரும்
Yesterday at 3:12am

Ashroff Shihabdeen
தேசிய சாஹித்த விருது - நடுவர் குழு - 2011 பேரா. க.அருணாசலம், பேரா. சபா ஜெயராசா, பேரா. துரை மனோகரன், கலாநிதி வ. மகேஸ்வரன், கலாநிதி ஸ்ரீ பிரசாந்தன், கே. இரகுபரன் (விரிவுரையாளர்), திருமதி. பத்மா சோமகாந்தன், நா. தர்மராஜா - அகளங்கன், சு. முரளிதரன், பன்மொழிப் புலவர் த.கனகரத்தினம். .........
21 hours ago

Amalraj Francis
 ‎'வெண்கலக் குழாய் விருது' வென்ற எங்கள் சங்கத் தலைவர் அஷ்ரப் அண்ணா வாழ்க வாழ்க....
20 hours ago

Ashroff Shihabdeen
நவீன இலக்கியம் என்ன... நீங்கள் என்ன இலக்கியம் எழுதினாலும் அதே தராசுதான் முகுந்தன்!
20 hours ago

Amalraj Francis
நான் நினைக்கிறேன், இப்பொழுது இலங்கையில் இந்த விருது, விருது நடுவர் குழு என்றெல்லாம் பக்கம் பக்கமாய் விவாதிப்பது பயனற்ற ஒன்றாகவே எனக்கு தெரிகிறது.. இந்த கலாச்சாரத்தை எம்மால் மாற்ற முடியுமா என்று ஜோசிப்பது பயன் மிக்கது. நான் இதை சொல்வதற்கு காரணம், நாங்கள் இப்படி எங்கள் மன ஆதங்கங்களை கொட்டித் தீர்க்கலாமே தவிர, இந்த விடயத்தில் எம்மால் ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியுமா என்ற சந்தேகம் பெருமளவில் உண்டு. அவர்களும் சிந்திக்கப் போவதில்லை. நாமும் இந்த விடயத்தில் திருப்தியடையப்போவதில்லை. இது எமது இலக்கிய தலை விதி. நியூட்டன் இன் மூன்றாம் விதி இங்கு மட்டும் தோற்றுத்தான் போகும்.
20 hours ago

Ashroff Shihabdeen
இல்லை... இவற்றை மாற்ற முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது “மற்றவர் பிரச்சினை“ என்றும் “அவருக்குக் கிடைக்கவி்ல்லை“ என்று தமக்குள் திருப்திப்பட்டுக் கொள்வதிலும் “நமக்கெதற்கு வீண் பிரச்சினை“ என்று வாளாதிருப்பதுமே சிலர் “புகுந்து விளையாடுவதற்கு” அல்லது “தமது தராசைக் கொண்டு நிறுப்பதற்குக்“ காரணங்களாகி விடுகின்றன. இந்த விடயத்தை நேரடியாக உரிய அமைச்சரையும் அமைச்சுச் செயலாளரையும் சந்தித்து புட்டு வைத்தால் ஓரளவு வெற்றி காண முடியும். ஆனால் புனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே பிரச்சினை!
20 hours ago

Amalraj Francis
உண்மைதான் அண்ணா, பூனைக்கு மணி கட்டுவது யார்??? ஆமா.. யார்???
20 hours ago

Amalraj Francis
 சார்.. ஒரு சந்தேகம்.. நம்ம சங்கம் மணிய கட்டினா என்ன... ஹி ஹி ஹி.... ஓகே.ஓகே புரியுது.. சங்கத்தின் யாப்பின் படி சால்வ மட்டும்தான் போடமுடியும்.. மணியெல்லாம் கட்ட முடியாது.. என்ன சார்..??

புரியுது.. 'யாப்பு முக்கியம் அமைச்சரே..'- இதுதானே உங்க பதில்...
20 hours ago

ஊதா பூ ஊதா பூ
manathuku paneer agathum):
14 hours ago

Hasan Basree
அட்டைப்படமே அர்த்தபூர்வமாக உள்ளது!
13 hours ago

Farveen Mohamed
விருதுதேர்வுக்கான நடுவர்குழுவில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் வட புலத்து கல்விச் சமூகத்தை சேர்ந்தவர்கள், குறைந்தது ஒரு முஸ்லிம் புத்திஜீவியாவது இதில் உள்ளடக்கப்படவில்லை, அநேகமானவர்கள் பேராசியர்கள் அவர்கள் இலக்கிய மதிப்பீட்டு தராசுகளா? ஒரு வேலை உங்கள் சமர்ப்பணம் வேறுமாதிரி இருந்திருந்தால் உங்களுக்கும் பரிசு கிடைத்திருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது அஸ்ரப் சார், இஸ்லாமிய தமிழ் இலக்கியம் கட்டாயம் தேவைதான் என்பதை இப்படியான புறக்கணிப்புகள் நியாயப் படுத்துகின்றன.
8 hours ago

Ashroff Shihabdeen
 எனது புத்தகம் தயாராகும் வேளையில் ”டம்மி” யைப் பார்த்து சமர்ப்பணப் பக்கத்தைக் கண்டதும் இதை மாற்றுங்கள், இல்லையென்றால் உங்களுக்கு எங்குமே ஒரு விருது கிடைக்காது என்றார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ”விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட” என்று போடாமல் ”இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்ட” அல்லது ”பள்ளிவாசலில் படுகொலை செய்யப்பட்ட” என்று போடுங்கள் என்றார். ஆயினும் நான் அதை மாற்ற விரும்பவில்லை. இப்போதும் கூட அதற்காககத்தான் சான்றிதழோடு விருது மட்டுப்படுத்தப்பட்டது என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் மாற்றச் சொன்ன நண்பர், நீங்கள், உங்களைப் போல் இன்னும் சிலரின் மனப்பதிவு இவ்வாறு ஏற்படுவதற்குக் காரணமானவர்கள் உண்மையில் வெட்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்.
about an hour ago

Ashroff Shihabdeen
பொதுவாகவே முஸ்லிம்களுக்குத் தமிழ் தெரியாது என்ற ஒரு கருத்து தமிழர்களில் ஒரு சாராரிடம் இருக்கவே செய்கிறது. அதை தமது சுயநலத்துக்காகவும் தப்பித்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறான பரிசுத் தேர்வுகளின் போது பெரும்பான்மை இனத்திடம் எடுத்துச் சொல்லவும் கூடப் பயன்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் வடபுலத்திலிருந்து வெளியே்ற்றப்பட்ட போது வெளிநாடுகளில் குறிப்பாக தமிழ் நாட்டில் ”முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள்” என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இன்குலாப் போன்ற கவிஞர்கள் இன்றும் அதைத்தான் நம்பிக் கொண்டிரக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா.... ஆக முஸ்லிம் சமூகத்தின் மீது இத்தேசத்தின் இரண்டாவது பெரும்பான்மையின் கண்ணுக்குத் தெரியாத ஓர் ஆதிக்கக் கரம் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பது புலனாகிறதல்லவா? இந்த அடிப்படையில் முஸ்லிம் புத்தி ஜீவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் கலாநிதிகளுக்கும் தமிழ் தெரியாது, புத்தகம் தெரிவு செய்யத் தெரியாது என்று எண்ணியிருக்கக் கூடும். சில வேளை பட்டங்களும் சான்றிதழ்களும் சமமாக இருந்த போதும் வடபுலத்துப் படிப்பாளிகளுகளுக்கு நிகராக நிற்கும் யோக்கியதை முஸ்லிம் படிப்பாளிகளுக்கு இல்லை என்றும் எண்ணியிருக்கக் கூடும். ஏனெனில் அவர்களது கருத்துப்படி முஸ்லிம்களுக்குத் தமிழ் தெரியாது அல்லவா?
39 minutes ago

குறிப்பு - ஃபேஸ்புக் முறைமைகளின் படி “லைக்” இட்டவர்கள் பட்டியல் பின்னர் இணைக்கப்படும்.
 
 
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

rajamelaiyur said...

வாழ்த்துகள் நண்பா

AH said...

வாழ்த்துக்கள்

Lareena said...

"ஒரு குடம் கண்ணீர்" எனும் அற்புதமான படைப்புக்கு விருது கிடைக்கவில்லை என்ற செய்தியைக் கேட்டதும், ஒருகணம் திகைத்துப் போய் விட்டேன். என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை.

ஓர் எழுத்தாளனின் ஆளுமையை, ஆற்றலை விருதுகள் தீர்மானிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், தமிழுக்கு புதிய வளம் சேர்க்கும் அரிய நூல்கள் புறக்கணிக்கப்படுவது என்பது, தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் உண்மையாகவே நேசிக்கும் யாரையுமே வேதனையுறச் செய்யும். ஓர் அற்புதமான நூலுக்கு ஒரு தேசியப் பெருவிழாவில் வெறுமனே ஒரு சான்றிதழை மட்டும் வழங்கியிருப்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல, அந்த விழாவையே ஒரு கேலிக்கூத்தாகக் கருதத்தக்க ஒரு பிம்பத்தையே அது கட்டமைத்துள்ளது. இது ஓர் ஆரோக்கியமான விடயம் அல்ல.