யாத்ரா நிர்வாக ஆசிரியர் நாச்சியாதீவு பர்வீன்
யாத்ரா -22 இதழ் பற்றிய கலந்துரையாடல் கடந்த 07.01.2013 அன்று இலக்கம் 31, 42வது லேன், கொழும்பு - 6ல் அமைந்துள்ள பிரின்ஸ் அகடமியில் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் லண்டனில் வசிக்கும் யாத்ரா வாசகியான சட்டத்தரணி ஷர்மிலா ஜெயினுலாப்தீன் அதிதியாகக் கலந்து கொண்டார்.
தலைமையுரை நிகழ்த்தும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
கவிஞர் மேமன் கவி
இலங்கையில் வெளிவந்த சி்ற்றிதழ்கள், கவிதை இதழ்கள் ஆகியவை பற்றியும் இதழ்களை வெளியிடுவதில் உள்ள சிரமங்கள் பற்றியும் வாசகரை நோக்கிய இதழ்கள் பற்றியும் மேமன் கவி தனது உரையில் குறிப்பிட்டார்.
கவிஞர் அமல்ராஜ் பிரான்ஸிஸ்
யாத்ரா சஞ்சிகையின் தனித்துவம் பற்றிக் கவிஞர் அமல்ராஜ் பிரான்ஸிஸ்
தனது உரையில் குறிப்பிட்டார்.
முபாறக் அப்துல் மஜீத்
நிர்வாக ஆசிரியர் நாச்சியா தீவு பர்வீன் தனது உரையின் போது யாத்ராவின் மீள்வருகைக்காகச் செய்யப்பட்ட முயற்சிகள் பற்றிப் பேசிய பின்னர் கருத்துரைகள் இடம்பெற்றன. அல் ஜஸீரா பத்திரிகை ஆசிரியர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அதன் போது தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கவிஞர் முஸ்தீன்
சிற்றிதழ்களின் விற்பனைப் பரவலாக்கம் பற்றியும் அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் தனது கருத்துக்களை கவிஞர் முஸ்தீன் குறிப்பிட்டார்.
சட்டத்தரணி ஷ்மிலா ஜெயினுலாப்தீன்
அதனைத் தொடர்ந்து அதிதியாகக் கலந்து கொண்ட சட்டத்தரணி ஷர்மிலா ஜெயினாப்தீன் உரையாற்றினார்.
யாத்ரா ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் பதிலுரை வழங்கினார்.
உள்நாட்டுப் போரின் போது இலங்கை முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள், அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்துப் படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுதியான “மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்” அதிதிக்கு வழங்கப்பட்டது.
பி.ப.5.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 7.00 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
நல்வாழ்த்துக்கள்!
Post a Comment