இன்று 'ஹலால்' சம்பந்தமாக இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைக்கு ஓர் பிரேரணை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த அடிப்படையில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் கௌரவ தலைவி அவர்களேஇ முஸ்லிம்களை பொறுத்த வரையில் அவர்கள் வரையறையோடு வாழ வேண்டிதொரு சமூகம். அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக 'புனித குர்ஆன்' என்கின்ற நூல் இருக்கின்றது.
அந்நூலில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவனுடைய நடவடிக்கைகள், வாழ்க்கை, அவன் உணவு உண்பது எப்படி, ஏனையவர்களோடு நடந்து கொள்வது எப்படி, அயலவர்களோடு நடந்து கொள்வது எப்படி, அந்நிய உறவுகளோடு நடந்து கொள்வது எப்படி, அரச அதிகாரிகளோடு நடந்து கொள்வது எப்படி, அரசனோடு நடந்துகொள்வது எப்படி, ஒரு சிறுபான்மையாக இருக்கின்ற பொழுது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், நாங்கள் பெரும்பான்மை சமூகமாக இருந்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒட்டு மொத்த தெளிவினை கூறுகின்ற நூலாக முஸ்லிம்கள் அதனை நம்புகின்றார்கள்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண சபை அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்
இந்த உலகத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களும் 'அல் குர்ஆன்' ஐ பற்றி பிரச்சினை ஒன்று வருகின்ற போது யாரும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. அந்த 'அல் குர்ஆனால்தான் கூறப்படுகின்றது நாங்கள் எவ்வாறான உடைகள் அணியவேண்டும், எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும் எவ்வாறான உணவை நாங்கள் தேடிக்கொள்ள வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற அனைத்தையும் வரையறையோடு அழகாக கூறப்பட்டிருக்கின்றது.
அந்த அடிப்படையில் முஸ்லிம் ஒருவன் உண்ண வேண்டிய உணவு 'ஹலால்' என்று கூறப்படுகின்றது. 'ஹலால்' என்பது 'ஆகுமாக்கப்பட்ட உணவு' இதன் வரைவிலக்கணம் மிக நீண்ட தூரம் பேசுகின்ற வரைவிலக்கணம். 'அந்த உணவை வாங்குவதற்கு அவனுடைய உடல் உழைப்பினால், நியாய பூர்வமாக உழைக்கப்பட்ட பணத்தை கொண்டு வாங்கியிருக்க வேண்டும். தடுக்கப்பட்ட உணவாக இருக்க கூடாது அவ்வாறு கூறப்படுகின்றது'. இதை 'ஹலால்' என்று நாங்கள் கூறுவோம்.
அதேபோன்று 'ஹராம்' என்று ஒன்று இருக்கின்றது. இவை மனித குலத்திற்கு தடுக்கப்பட்ட விடயங்கள். விஷேடமாக முஸ்லிம் சமூகத்திற்கும், உலகத்தில் உள்ளவர்களுக்கும் தடுக்கப்பட்டவையாக 'குர்ஆன்' கூறுகின்றது.
'குர்ஆன்' என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரைக்கப்பட்ட நீதி புத்தகம் அல்ல. இந்த உலகத்தில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானதொரு நியாய பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சாசனம். அந்த சாசனத்தை கூடுதலாக முஸ்லிம்கள் ஏற்று அவர்களின் திருமறையாக, அவர்களுடைய அடிப்படை வாழ்வாதாரமாக அதனை ஏற்றுக் கொண்டு நேசிக்கின்றார்கள்.
இந்த திருமறையில்தான் ('குர்ஆன்') 'ஹலால், ஹராம்' பற்றி கூறப்பட்டிருக்கின்றது. எவ்வாறான உணவு உண்ணப்பட வேண்டும் இதற்கு ஒவ்வொரு நாடுகளிலும்இ ஒவ்வொரு திட்டங்கள் காணப்படும். அங்கு உணவு தயாரிக்கின்ற முறைமை, அவர்களுடைய நடை, உடை பாவனைகள், 'ஹராம் ஹலால்' உணவில் மாத்திரம் அல்ல. நாங்கள் அணிந்திருக்கின்ற ஆடையில் 'ஹலால் ஹராம்' இருக்கின்றது. இந்த விடயத்தில் 'ஹலால்' ஆன பணத்தில் வாங்கப்பட்டதா? உண்மையான உழைப்பின் மூலம் பெறப்பட்டதா?.... என்பது போன்ற சட்ட முறைப்படி நடந்து கொள்கின்ற வழிமுறைகளையும், மதத்தை பின்பற்றுகின்ற வழிமுறைகளையும் இஸ்லாமியர்கள் 'ஷரிஅத்' என்று கூறுவார்கள்.
அந்த 'ஷரியா' சட்டத்தின் படி நாங்கள் நடந்து கொள்கின்றோமா, திருமணம் செய்கின்றோமா, பிள்ளை பெறுகின்றோமா, அந்த பிள்ளைகளை 'ஷரியா' சட்டத்தின் படி வளர்க்கின்றோமா, இல்லை என்றால், அது எங்களுக்கு 'குர்ஆன்' இல் கூறப்படுகின்றது அதற்கு தண்டனை இருக்கின்றது என்று. அயலவர்கள்; எந்த மதத்தவர்களாக இருந்தாலும் சரி, 'அயலவன் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள்'. அவன் சிங்களவராக இருக்கலாம், தமிழராக இருக்கலாம், பறங்கியராக இருக்கலாம் அவர் உண்ணாமல் கஸ்டத்தில் இருக்கின்ற போது நீங்கள் உண்ணாதீர்கள். உங்களது வீட்டில் வாசனையோடு உண்ணுகின்ற பொழுது எவ்வளவு தூரத்திற்கு உங்களது வீட்டின் அந்த வாசனை செல்லுமோ, அத்தனை வீட்டிற்கும் நீங்கள் திருப்திப்படுத்துகின்ற ஆத்மாவாக இருக்க வேண்டும் என்று 'குர்ஆன்' கூறுகின்றது.
இதன் அடிப்படையில்தான் 'ஹராம் ஹலால்' என்பது தவிர்க்கப்பட்டவை, ஆகுமாக்கப்பட்டவை என்ற விடயம் வருகின்றது. எப்பொழுதும் இந்த 'குர்ஆன்' ஐ முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.
கௌரவ தலைவி அவர்களே...
விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள், அவர்களின் தொழில்துறைகள், அவர்கள் ஆடை அணிதல், அவர்களின் நடவடிக்கைகள், அவர்களின் உணவு நடவடிக்கைகள் உங்களுக்குத் தெரியாத விடயம் அல்ல.
இந்த சபையில் இருக்கின்ற கௌரவ தமிழ், சிங்கள் முஸ்லிம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும் இது இன்று நேற்று தொட்டு வந்ததல்ல. எப்பொழுது நாம் ஒரு இஸ்லாமியனாக பிறக்கின்றோமோ அன்றிலிருந்து 'குர்அன்' சட்டம் எங்களுக்கு ஆரம்பமாக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் எமது பெற்றோர்களால் சொல்லித் தரப்படுகின்றது. அதன் பிறகு எங்களுடைய மௌலவிகளாலும், உலமாக்களாலும் கூறப்படுகின்றது. இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும். இவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு நரகத்தில் வேதனை இருக்கின்றது. இதை செய்வீர்கள் என்றால் உங்களுக்குத் சொர்க்கத்தில் நல்ல விடயங்கள் காத்துக் கொண்டிருக்கினனத என்று கூறுகின்றாhர்கள்.
இந்த நாட்டில் இருக்கின்ற, உலகத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதனை நம்புகின்றார்கள்.
நாங்கள் 'ஷரியா' சட்டத்தை நிறைவேற்றுகின்ற போது 'ஹலால்இ ஹராம்' ஐ பேணி நடக்கின்ற பொழுது ஒரு முஸ்லிம் உண்மையான முஸ்லிமாக வாழ அவனுக்கு கிடைக்குமென்று கூறினால், அவர் இந்த உலகத்தில் மாத்திரமல்ல இன்னுமொரு உலகம் இருப்பதாக அதில் எங்களுக்கு நல்ல வெகுமதி கிடைக்கும் என்கின்ற அந்த செய்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள். நாங்கள் மரணம் நிச்சயம் என நம்பிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றவாகள்;. இவ்வாறான காலகட்டத்தில்தான் நாட்டில் அவசரமாக முளைத்திருக்கின்ற ஒரு பிரச்சினை 'ஹலால் ஹராம்'. 'ஜமியத்துல் உலமா' என்கின்ற ஓர் நிகழ்வோடு கூடிய பிரச்சினை.
'ஜம்மியத்துல் உலமா' என்பது நாட்டில் இருக்கின்ற அஸ்கிரிய, மல்வத்த பீடம் போன்று முஸ்லிம் சமூகத்துக்கென்று இருக்கின்ற ஒரேயொரு சபை. நாட்டில் இருக்கின்ற உலமாக்கள் இஸ்லாமிய மதத் தலைவர்களை உள்ளடக்கிய, நிரந்தரமான ஓர் சபையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த சபைக்கு எவ்வாறான பிரச்சனைகள் வருகின்ற போது ஷரிஆ என்கின்ற 'குர்ஆன்'ல் கூறப்பட்ட சட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும்.
அந்த சட்டத்தில் பிரச்சினைகள், ஏற்படுகின்ற பொழுது 'ஜம்மியத்துல் உலமா' குறித்த விடயம் இஸ்லாத்திற்கு முரணானது, குர்ஆனுக்கு முரணானது என்ற வழிகாட்டலை கூறுகின்ற சபையன்றி ஆயுதத்தை எடுங்கள் பயிற்சி பெறுங்கள் அதைச் செய்யுங்கள், சிங்களவரை அடியுங்கள், தமிழர்களை இழிவுபடுத்துங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களை உடையுங்கள் என்ற வழிகாட்டலை கூறுகின்ற சபையாக நீங்கள் எப்பொழுதும் கண்டிருக்க முடியாது.
எனவே அந்த அடிப்படையில் 'ஜம்மியத்துல் உலமா' என்கின்ற அமைப்பு குர்ஆனை வழிநடத்தி அந்த முஸ்லிம்களுடைய வாழ்வாதரம் என்கின்ற அடிப்படை அந்த நாதத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்ற அந்த 'குர்ஆன்'; மையப்படுத்தியதாக 2000 ஆண்டு 51வது இலக்க கூட்டிணைக்கப்பட்ட கட்டளைச் சட்டத்தின் கீழ் 'ஜம்மியத்துல் உலமா' இலங்கைப் பராளுமன்றத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது.
அவர்களுடைய கோட்பாடுகளாக இஸ்லாமியருக்கும் உதவுகின்ற, இஸ்லாமிய மக்களுக்குத் தீர்வு கூறுகின்ற 'ஷரியாசட்டம்' குர்ஆனில் கூறப்படுகின்ற சட்டத்தை முஸ்லிம்களுக்கு அவர்கள் சொல்லிக் காட்டுகின்ற முஸ்லிம்கள் எப்பொழுது அந்த சட்டத்தில் வழுக்கள் அல்லது பலயீனம் என்று வருகின்ற பொழுது அதை சரியான வழிகாட்டல் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது அன்றி வேறு எந்த 'அல்குவைதா' வேறு எந்த நிறுவனத்துக்கோ பணம் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட சபை இல்லை என்பதை மிகவும் ஆணித்தரமாக இந்த கிழக்கு மாகாண சபையில் நான் பதிவுக்காக கூறவேண்டி இருக்கின்றது.
கௌரவ தவிசாளர் அவர்களே
இவ்வாறு இந்த 'ஜம்மியத்துல் உலமா' வுக்குப் பிறை பார்க்கின்ற ஒரு பணியிருக்கின்றது இந்த நாட்டில் நாங்கள் பெருநாட்கள் வருகின்ற போது புனித றம்ழான் மதத்தில் பிறையைப் பார்த்து எங்களுடைய கணக்கை வைப்பவர்கள் நாங்கள் இந்தவிடயத்தில் ஆங்கிலக் கலண்டர் பார்ப்பது கிடையாது. எனவே ஜம்மியத்துல் உலமாவில் பிறை பார்க்கின்ற ஒரு குழு இருக்கின்றது. அது போன்று இஸ்லாமிய சட்டரீதியான பிரச்சினைகள் வருகின்ற பொழுது, அதற்குத் தீர்வு கொடுப்பதற்காக ஒரு குழு இருக்கின்றது. அது போன்று கல்வி ரீதியான பிரச்சினை, சமூக ரீதியான பிரச்சினை இருப்பது போன்று 'ஹலால்' என்பதற்கு ஒருபிரிவு ஜம்மியத்துல் உலமாவில் இருக்கின்றது.
இங்கு 'ஜம்மியத்துல் உலமா' என்கின்ற 'ஹலால் பிரிவு' இந்த நாட்டில் இருக்கின்ற ஹலாலான உண்ணக்கூடிய விசேடமாக முஸ்லிம்களுக்குத் தெரிவிக்கக் கூடிய இந்த பொருட்களை நீங்கள் தைரியமாக உண்ணலாம் என்கின்ற அந்த செய்தியை கூறுகின்ற சபை அன்றி வேறு ஒன்றும் கிடையாது.
இது சிங்களவர் கடையில் வாங்காதீர்கள் தமிழர் கடையில் சென்று வாங்குங்கள் அல்லது கிறிஸ்தவக் கடையில் வாங்காதீர்கள் என்று கூறுகின்ற செய்தி அல்ல. இதை நீங்கள் பாவிப்பதனால் இஸ்லாமிய சட்டத்தின் படி எடுத்துக் கொள்ளப்பட்ட உணவு என்ற தேவைப்பாடு இருக்கின்றது.
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இறைச்சியை எடுத்துக் கொள்வோம் என்றால் இஸ்லாத்தில் 'குர்ஆனில்' கூறப்பட்டிருக்கின்றது இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்ட இறைச்சியைப் புசிக்க வேண்டும் என்று 'குர்ஆன்' கூறுகின்றது. அது எவ்வாறு வரவேண்டும் என்று வரைவிலக்கணத்தையும் குர்ஆன் கூறியிருந்தாலும் கூட அது அனைவராலும் விளங்கி கொள்ள முடியாது. குர்ஆன் கூறுகின்ற விளக்கத்தை உலமாக்கள் மதப் பெரியார்கள் மாத்திரம் தான் விளக்கம் கூறமுடியும் எனவே அவர்கள் அதை வழிநடத்துகின்றார்கள். இவ்வாறு தான் அறுக்க வேண்டும, இவ்வாறு தான் சமைக்க வேண்டும், இவ்வாறு தான் நோய்வாய்ப்பட்ட மாடுகளையும், ஆடுகளையும் அறுக்கக் கூடாது என்றெல்லாம் அதற்கு விதிமுறை இருக்கின்றது.
அந்த விதிமுறைக்கு எதிராக சிலர் செய்கின்றார்கள் நான் இல்லையென்று கூறவில்லை. அதைப் பற்றி நான் பேச வரவில்லை. அந்த விதிமுறைக்கு சில மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில வர்த்தகர்கள் அவர்களுடைய தனிப்பட்ட நோக்கத்திற்காக செய்து கொண்டிருக்கின்றார்கள் அதைப் பற்றி நான் இங்கு பேசுவதற்கு வரவில்லை. அது பிழை.
ஆனாலும் இந்த இஸ்லாமிய குர்ஆன் சட்டத்தில் கூறப்பட்ட இந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் தான் ஹலால் என்ற இந்த விடயத்திற்கு 'ஜம்மியத்துல் உலமா' வின் மூலம் இந்த நாட்டில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு 'ஹலால்' ஏன் இருக்கவில்லை என்கின்ற கேள்வி வருகின்றது இதற்குப் பிறகு தான் இந்த சான்றிதழ் கொடுத்தார்கள் அதற்கு முன்பு இருக்கவில்லையா என்று கேட்கின்றார்கள். அதற்கு முன்பும் இருந்தது எவ்வாறு என்று கூறினால் நாங்கள் தேடிச் சென்று ஹலால் என்று வாங்குகின்ற அல்லது எங்களுக்கு நம்பிக்கையோடு இருக்கின்ற கடைகளில் இது ஹலாலான முறையில் தயாரிக்கப்பட்டது என்று கூறுகின்ற அந்த கடைகளில் மாத்திரம் தான் முஸ்லிம்கள் பொருட்களை கொள்வனவு செய்தார்கள். ஹலால் என்ற நம்பிக்கையோடு அவர்கள் வாங்கினார்கள் இதற்கு பிறகு ஒரு பொறிமுறை தேவைப்பட்டது. கால வளர்ச்சிக்கேற்பவும் நாகரிக வளர்ச்சிக்கேற்பவும் அல்லது ஒவ்வொரு வளர்ச்சிகள் ஏற்படுகின்ற பொழுது ஒவ்வொரு அமைப்புக்கள் தோன்றி அதை உறுதிப்படுத்தியது. இது ஹலால் என்று கூறியது. ஹலால் இல்லாத பொருட்களை நீங்கள் எங்களிடம் வாங்க வேண்டும் என்று கூறவில்லை. ஹலால் என்று மாத்திரம் அவர்கள் கூறினார்கள்.
எனவே ஒரு முஸ்லிம் அடிப்படையில் இஸ்லாமிய ஷரியாச் சட்டத்தை பின்பற்றுபவன். இவனுக்குத் தெரியும் தான் உண்ண வேண்டியது ஹலாலாக இருக்க வேண்டிய காரணத்தினால் அந்த ஹலாலான உணவுகளை கடையில் வாங்கி அவர்கள் செய்தார்கள். இந்த ஹலாலான உணவு முஸ்லிம் கடைகளில் மாத்திரமல்ல சிங்கள கடைகளிலும், தமிழ் கடைகளிலும் இருக்கின்றது. ஒரு முஸ்லிமானவன் சென்று வாங்குகின்ற போது அதனுடைய ஹலால் சான்றிதழில் காணப்படும் என்று கூறினால் அது மிகவும் விநயமாக அதைப் பார்த்து அவர்கள் வாங்குகின்ற பழக்கத்தைத் தான் கடந்த காலத்தில் நாங்கள் செய்தோம்.
இப்பொழுது ஒரு பிரச்சினை கௌரவ தலைவி அவர்களே, 'ஜம்மியத்துல் உலமா' இந்த 'ஹலால்' பொருட்களை வாங்கத் திணிக்கின்றது என்று 'பொது பலசேனா' என்கின்ற ஒரு அமைப்பு இந்த நாட்டில் பூகம்பம் வெடிப்பதற்கு தயாராக இருப்பது போல ஒரு பூச்சாண்டி காட்டுகின்ற ஒரு நிலவரத்தை இந்த சபை மிகவும் அவசரமாக பார்க்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
அந்த அடிப்படையில் 'பொது பலசேனா' கூறுகின்றது 'ஜம்மியத்துல் உலமா' இந்த 'ஹலால்' என்கின்ற உணவை பலவந்தமாக பெற வேண்டும் என்று கூறுகின்றது அவர்களுக்கு நாங்கள் கூறிக் கொள்ள விரும்புவதுஇ பலவந்தம் என்று வருகின்ற போது அங்கு ஒரு தண்டனை இருக்க வேண்டும் அல்லது அதற்கு எதிராக அதை செய்யவில்லை என்று கூறினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் 'ஜம்மியத்துல் உலமா' வுக்கு இருக்க வேண்டும் ஒரு பொலிஸார் நாங்கள் செய்யவில்லை என்று கூறியதை நாங்கள் நிறைவேற்றவில்லையென்று சொன்னால் ஒரு நீதிமன்றம் போட்ட உத்தரவினை நிறைவேற்றவில்லை என்று கூறினால் அதற்கு தண்டனை வழங்குகின்ற அதிகாரம் அந்த நிறுவனத்திற்கு இருக்கின்றது.
ஆனால்இ 'ஜம்மியத்துல் உலமா' அவ்வாறு செயற்படுகின்ற நிறுவனமல்ல. அதை பலவந்தம் செய்கின்ற ஒரு நிறுவனமாக அவர்கள் காட்டப் பார்க்கின்றார்கள் இதை பலவந்தமாக வாங்கச் சொல்லுகின்றார்கள். அந்த நிறுவனத்தில் வாங்கச் சொல்லுகின்றார்கள் இவ்வளவு பணத்தைக் கட்டச் சொல்லுகின்றார்கள் என்கின்ற குற்றச்சாட்டுக்களை கடந்த காலத்தில் இந்த 'பொது பலசேனா' அமைப்பு பலவந்தமாக செய்வதாக அவர்கள் கூறகின்றார்கள். பலவந்தம் என்று கிடையாது. விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் சரி கௌரவ தவிசாளராக இருந்தாலும் சரி உங்களுக்கு ஒரு சான்றிதல் வேண்டும் என்று கூறினால் அதற்கு நீங்கள் 'ஜம்மியத்துல் உலமா' விற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பித்து அவர்களுடைய பரீசிலனையின் பின்னால் நீங்கள் செய்கின்ற பொருளுக்கு அவர்கள் அந்த ஹலால் சான்றிதழைத் தருகின்ற வழமை இருக்குமே தவிர இங்கு வாருங்கள் கட்டாயம் இதை எடுக்க வேண்டும் என்கின்ற வற்புறுத்திய ஒரு நிகழ்வு இருக்கும் என்று கூறினால் இந்த பிரேரணையை நாங்கள் உடனடியாக இவ்விடத்தில் வாபஸ் பெறுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
கௌரவ தலைவி அவர்களே,
இந்த ஹலால் என்கின்ற விடயம்,.. இலங்கையில் நாங்கள் அனைத்தையும் பேசுகின்றோம் உலகத்தில் அனைத்து இடங்களிலும் இந்த இலத்திரனியல் ஊடகம் ஊடகங்கள் அதிகரித்தன் பின்பாக எத்தனையோ மாற்றங்களை நாங்கள் உலகத்தில் காண்கின்றோம். எவ்வளவோ விடயங்களை காண்கின்றோம். எனவே இந்த விடயத்தில் ஹலால் என்கின்ற நிறுவனத்தின் தலைமையகம் தாய்லாந்தில் தான் இருக்கின்றது. 60 நாடுகளில் இந்த ஹலால் சான்றிதழ் வழங்குகின்ற நடைமுறைகள் இருக்கின்றது. அவர்கள் கூறுகின்றார்கள். இது சர்வதேச ரீதியில் தேவைப்பட்ட ஒரு விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது. அநேகமாக நாங்கள் வெளிநாட்டிற்கு செல்வோமென்றால், எங்காவது ஹலால் உணவு கிடைக்குமா என்று பார்க்கின்றோம். அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு வருகின்றவர்களும் கேட்கின்றார்கள் 'எங்களுக்கு ஹலால் உணவு எங்கே கிடைக்கும்' என்று கேட்கின்ற விடயத்தையும் நீங்களும் அறிந்திருப்பீர்கள். நாங்களும் கண்டிருக்கின்றோம்.
கௌரவ தலைவி அவர்களே,
எனக்கு நேரம் தர வேண்டும். கௌரவ அமைச்சர் உதுமாலெப்பை அவர்களே, நான் நேரத்தை எடுத்துக் கொள்கின்றேன்.
எனவே இது தாய்லாந்தை மையமாகக் கொண்டிருக்கின்றது. இந்த ஹலால் சான்றிதழ் வழங்குகின்ற நடைமுறையில் இலங்கை ஜம்மியத்துல் உலமா தற்றுணிவாக தான் விரும்பியபடி ஹலால் சான்றிதழை வழங்க முடியாது. தாய்லாந்தில் இருக்கின்ற தலைமையகத்தின் உத்தரவிற்கமைய 60 நாடுகளின் இலங்கை ஒரு நாடாக ஜம்மியத்துல் உலமா அதன் பிரதிநிதியாக இருந்து கொண்டிருக்கின்றது.
கௌரவ தலைவி அவர்களே,
இந்த ஹலால் உணவு என்பது அண்மையில் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களுடைய அமைச்சில் 58 ஏற்றுமதியாளர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தப்பட்டதாக அறிந்தேன். இந்த கூட்டத்தின் பிரகாரம் 58 ஏற்றுமதியாளர்களும் 100 வீதம் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள்.
கௌரவ அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் அழைத்து கேட்டிருக்கின்றார், இந்த யுத்தத்தை ஒழித்தவர்கள் நாங்கள். இந்த இலங்கையில் ஆட்கொண்டிருந்த யுத்தம் ஒழிக்கப்பட்ட காலகட்டத்தில் இவ்வாறான ஒரு நிகழ்ச்சிநிரல் ஏன் வந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஏற்றுமதி செய்கின்ற உடமையாளர்கள் பெரும்பெரும் நிறுவனத்தார்களிடம் 'இது உங்களுக்கு இலாபகரமானதாஇ நட்டமா' என்று கேட்டபொழுது, அவ்வளவு வியாபாரிகளும் எழுந்திருந்து, 'கௌரவ அமைச்சர் அவர்களே இது எங்களுடைய வர்த்தகத்திற்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பம்' என்று கூறியிருக்கின்றார்கள். எங்களுடைய வர்த்தகம் அதிகரித்திருக்கின்றது என்று கூறியதாக நாங்கள் அறிய முடிகின்றது. இதை ஏன் நான் கோடிட்டு காட்டுகின்றேன் என்றால், இந்த நாட்டில் பொருளாதார அமைச்சராக இருக்கின்ற பசில் ராஜபக்ஷ அவர்கள், இந்த நாட்டில் இருக்கின்ற மிகப் பெரும் ஏற்றுமதியாளர்களை அழைத்து, இது இந்த நாட்டிற்கு ஒத்துவரக்கூடியதா? என்கின்ற விடயத்தை கேட்டு அதில் அவர்கள் தெளிவுபெற்றிருக்கின்றார்கள் என்றால், இது இந்தச் சபை யோசித்து பார்க்க வேண்டிய விடயம்.
இந்த விடயத்தில் என்ன நடக்கின்றது? எந்தவொரு விடயத்திற்காக செய்கின்றார்கள்? இதில் வேறு வேறு அசாதாரண நிலைகளில் அசுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவாக இருந்தால், அதை சுட்டிக் காட்ட வேண்டிய நிலவரம் இருக்கின்றது. ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை சமூகம் அதனுடைய மார்க்க அனுஸ்டானங்களை பேணிப் பாதுகாத்து நடந்து கொள்கின்ற ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில்தான் பொது பலசேனாவை சேர்ந்தவர்கள் மிகவும் தீவிரமாக இருக்கின்றார்கள். பத்தேகமவை சேர்ந்த தென் மாகாண சபை உறுப்பினர் தம்மாவில தேர அவர்கள் குற்றத்தை சாட்டியிருக்கின்றார்கள். அவர் பௌத்த மதத்தை சேர்ந்த பெருந்துறவி. அவர் 'இந்த நாட்டில் இன்னுமொரு கலவரத்தை இன்னுமொரு பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு பொது பலசேனா அமைப்பு தூபமிடுகின்றது' என்பதனை ஆணித்தரமாக கூறியிருக்கின்றார்.
எனவே இந்த சபையில் இருக்கின்ற கௌரவ உறுப்பினர்கள், தலைவர்கள் இதைத் தெளிவாக பேச வேண்டும். இனவாதம் பேசிப் பேசி கடந்த 30 வருட காலம் எங்களுடைய முகவரியை தொலைத்துக் கொண்டவர்கள். எங்களுடைய முதுகில் மீண்டும் மீண்டும் சொறிவதற்கு நாங்கள் இடங்கொடுத்தால், இந்த நாட்டில் இருக்கின்ற எல்லோரும் நஷ்டவாளர்கள். இந்த நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் 'சிறுபான்மை என்ற சமூகம் இந்த நாட்டில் இல்லை' என்று கூறியிருக்கின்றார்கள். அவ்வாறான சூழ்நிலையில் இப்படிப்பட்ட மத இயக்கங்கள் இன்னுமொரு மதத்தை நசுக்குவதற்கு, இன்னுமொரு இனத்தை நசுக்குவதற்காக முனைப்பு செய்வார்களென்றால், இந்த நாட்டில் இருக்கின்ற இன்னுமொரு சிறுபான்மை சமூகத்திற்கு செய்கின்ற மாபெரும் அநியாயம்இ மாபெரும் துரோகம் என்பதை இந்த சபை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
கௌரவ தலைவி அவர்களே,
இந்த பொது பலசேனா அமைப்பு இன்னுமொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். 12இ000 பேரை பாகிஸ்தானிலிருந்து தயார்படுத்திப் படை திரட்டி இந்த நாட்டில் இருக்கின்ற சிங்கள துறவிகளையும் சிங்கள மக்களையும் அழிப்பதற்காக கொண்டு வந்திருக்கின்றோமாம். கடந்த கால வரலாறு உங்களுக்கு நன்றாகத் தெரியும். கடந்த கால போராட்ட வரலாறு எங்கள் முன்னே இருக்கின்றது. இதை தெரிந்து கொண்டுமா இந்தப் போராட்டத்தை செய்ய வேண்டும்?
இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் எப்பொழுதும் தனிநாடு கேட்டு போராடியவர்கள் அல்ல. இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம்கள் எந்தவொரு சமூகத்தையும் எந்தவொரு நலனுக்காகவும் காட்டிக் கொடுத்த சமூகமென்று எந்தவொரு சரித்திர ஆசிரியர்களாலும் சொல்லமுடியாது. அவ்வாறான சூழலில் வாழ்ந்து வருகின்ற சமூகம் பெரும்பான்மை சமூகத்தோடும் ஏனைய சிறுபான்மை சமூகத்தோடும் விட்டுக் கொடுப்போடும் புரிந்துணர்வோடும் நல்ல ஒப்புதல்களோடும் வாழ வேண்டும் என்று விரும்புகின்ற ஒரு சமூகத்திற்கு இன்னுமொரு பெரும்பான்மை சமூகத்திலிருந்து, மதத் தீவிரவாதத்தை அள்ளிவீசி, இன்னுமொரு மதத்தை துவம்சம் செய்கின்ற, அநியாயம் செய்கின்ற, அசிங்கப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தை செய்யுமென்றால்... அது இந்த நாட்டில் இருக்கின்ற பௌத்த மதத்தை நேசிக்கின்ற எல்லோருக்கும் அவமானச் செயலாக நாங்கள் பார்க்கின்றோம்.
எனவே கௌரவ தலைவி அவர்களேஇ இந்த 12இ000 பேர் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்திருக்கின்றோம் என்பது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. இந்த நாட்டில் உளவுப் புலனாய்வு இருக்கின்றது. வீட்டுக்கு வீடு ஒரு புலனாய்வு இருப்பது போல் இப்பொழுது தெரிகின்றது. சறுக்கி விழுந்தாலும் புலனாய்வில்தான் விழுந்து விடுவோமா என்கின்ற நிலவரத்தில் நாங்கள் இருக்கின்ற பொழுதுஇ 12இ000 பேர் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்திருக்கின்றோம் என்றால்இ இந்த பொது பலசேனா அமைப்பை சேர்ந்த பௌத்த தர்மத்தை போதிக்கின்ற துறவிகள் ஏன் இவ்வளவு பெரிய பொய்யை சொல்ல வேண்டுமென்று இந்த சபையில் நான் நெஞ்சை நிமிர்த்தி கேட்க கடமைப்பட்டவனாக இருக்கின்றேன்.
கௌரவ தலைவி அவர்களே, அதுமாத்திரமல்ல இந்த ஹலால் சான்றிதழ் என்ற திட்டத்தினால்இ 700 கோடி ரூபா வருமானத்தை ஜம்மியத்துல் உலமா பெற்றுக் கொள்கின்றது என்றுஇ மகா பெரிய பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். 204 நிறுவனங்கள் இதுவரையில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஜம்மியத்துல் உலமாவில் விருப்பத்தின் பேரில் 204 நிறுவனங்கள் இலங்கையில் பதிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் 204 நிறுவனங்களின் பெயரால் ஒரு மாதத்திற்கு 15 இலட்சம் ரூபாவை ஜம்மியத்துல் உலமா பெற்றுக் கொள்கின்றது. ஆனால் இந்த 204 நிறுவனங்களையும் பரிபாலிப்பதற்காக வாடகையோடு 44 உத்தியோகத்தர்களோடு ஜம்மியத்துல் உலமாவிற்கு 13, 1ஃ2 இலட்சம் ரூபா வரையில் மாதத்திற்கு செலவு செய்யப்படுகின்றது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ஒன்றரை இலட்சம் ரூபா வரை மிஞ்சமுடியும். ஒரு வருடத்திற்கு 12 இலட்சம் ரூபா வரமுடியும். 5 வருடம் என்றால் 60 இலட்சம் ரூபாவிற்கு மேல் மிஞ்சமுடியாது.
கௌரவ தலைவி அவர்களே, உங்களுக்கு நன்றாகத் தெரியும்இ 12 இலட்சம் ரூபா என்பது சாதாரண பணம் என்று நீங்கள் தள்ளிவிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு வசதி படைத்த பெண்மணி. உங்களுக்குத் தெரியும். நீங்கள் பணத்தில் அருமை பெருமை பற்றி அறிந்தவர்கள். எனவே உங்களிடத்தில் இருக்கின்ற நகைகளை எடுத்தால்இ பல இலட்சக் கணக்கான ரூபாவை நாங்கள் எடுத்துவிட முடியும். இவ்வாறு பெறுமதியோடு வாழ்கின்ற ஒரு பெண்மணி இச்சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கின்றது. கௌரவ தலைவி அவர்களே, இவ்வாறு 700 கோடி ரூபா வருமானம் வருகின்றதாக கூறப்படுகின்ற இந்த விடயம், ஒரு பௌத்த துறவிக் கூட்டம் இந்த நாட்டில் கூறுமென்றால், அது பொய் கூறுகின்றது என்று நான் துணிந்து கூறுவேனென்றால, அதற்கு அவர்கள் கூறப் போகின்ற பதில் என்ன என்பதை நான் அறியக் காத்துக் கொண்டிருக்கின்றேன்.
அது மாத்திரமல்ல, இறைவனுக்காக நேர்ச்சைக்காக வைக்கப்பட்ட பொருட்கள் ஹலால் பொருட்கள் என்று இந்த பொது பலசேனா பிரச்சாரம் செய்கின்றது. இறைவனுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜம்மியத்துல் உலமா எந்தவொரு இனத்தையும் பலவந்தப்படுத்தி சாப்பிடச் செய்கின்ற வேலைத்திட்டத்தை செய்ய முடியாது. செய்வதற்கு நாங்களும் தயாராக இல்லை.
இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழுகின்ற சமூகத்திற்குள் அவ்வாறு செய்யுமென்றால், அது முற்று முழுதான பொய்யான விடயம். ஆனால் அவ்வாறு செய்யாத விடயத்தில் அவர்கள் இது டநஅ டசஅங றனலனசா இறைவனுக்காக நேர்ச்சைக்காக செய்யப்பட்ட பொருட்கள் என்று கூறுகின்றார்கள். பொது பலசேனா மிகவும் பொய்யைத்தான் கூறுகின்றார்கள். அது மாத்திரமல்ல, இவர்கள் கூறுகின்ற இன்னுமொரு குற்றச்சாட்டு. இந்த ஹலால் சான்றிதழ் அடிக்கப்பட்ட பொருட்கள் விலை கூடியதாக இருக்கின்றது என்று கூறுகின்றார்கள். இதிலும் பொய்யைதான் கூறுகின்றார்கள்.
ஏனென்றால் அந்த பொருட்களை உற்பத்தி செய்கின்ற நிறுவனம் பொது பலசேனா அல்ல. பெரும் பெரும் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றார்கள். அவர்களுக்கு இது தேவைப்படுகின்றது.
கௌரவ தவிசாளர் அவர்களேஇ இப்பொழுது இந்த நாட்டில் ஒரு கயளாழைn இருக்கின்றது. ஒரு உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்கு சில சந்தைப்படுத்துகின்ற சில சந்தைப்படுத்தல் உபாயங்கள் என்று கூறுவார்கள். இவ் யுக்திகளை அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த உபாயங்களில் ஒன்று தான் ஐஎஸ்ஐமுத்திரை குறிப்பது. அந்த முத்திரைக்கு பல இலட்சக்கணக்கான ரூபாவை கொடுக்கின்றார்கள். எஸ்.எல்.எஸ். என்று ஒரு சான்றிதழ் எடுக்கின்றார்கள். ஐடிஐ தரச்சான்றிதழ் என்று எடுக்கின்றார்கள். எதற்காக எடுக்கின்றார்கள் என்றால்இ ஒரு சந்தைப்படுத்தல் யுக்திக்காக செய்கின்றார்கள். ஆனால் ஜம்மியத்துல் உலமா சந்தைப்படுத்தல் யுக்திக்காக கொடுக்கப்பட்ட ஒரு விடயமல்ல, முஸ்லிம் மக்கள் இப்பொருட்கள் ஹலால் உணவா என உறுதிப்படுத்துகின்றதேயன்றி வேறொன்றும் கிடையாது.
கௌரவ தலைவி அவர்களேஇ நான் நினைக்கின்றேன். சில வேளைகளில் சில நிறுவனங்கள் சந்தைப்படுத்தல் யுக்திக்காகவும் இதை பாவிக்கலாம். அது எனக்கு தெரியாது. இருந்தாலும் அவ்வாறு பாவிக்கப்படுமென்றால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய இயலாது. இதனால் எந்தவித விலையேற்றமும் அவர்களுக்கு கிடையாது. இவ்வாறு இந்த ஹலால் சான்றிதழை அறிமுகப்படுத்தியதன் பின்பாகஇ வர்த்தக சமூகத்தினரிடம் ஏற்றுமதியில் மாற்றம் கண்டிருக்கின்றது. அரபு நாடுகளுக்குஇ வெளிநாடுகளுக்கு எல்லா இடங்களிலும் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஹலால் சான்றிதழுக்காக நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு பொருள் என்றால் அந்த பொருளுக்குரிய விலை 0.0003 ரூபா. இவ்வளவு தான் பெறுகின்றது. 1000ல் ஒரு 3 சதத்திற்கும் இல்லை. 0.0003 என்ற ஒரு பொருளுக்காக செலவழிக்கின்றதாக இவர்கள் பார்க்கின்றார்களே ஒழியஇ ஒரு ரூபா கூட அவர்களுக்கு வந்து சேரவில்லை. இவ்வாறு தான் ஜம்மியத்துல் உலமா மிகவும் கரிசணையோடு செய்து கொண்டிருக்கின்றது. ஜம்மியத்துல் உலமா கலைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஜம்மியத்துல் உலமா கலைக்கப்படுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமல்லஇ இந்த நாட்டில் இனப்பிரச்சினை குரூரமாக இருந்த போதுஇ இந்நாட்டில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக ஜெனீவா சென்று குரல் கொடுத்தவர்கள் இந்த ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள்.
எங்களுடைய முஸ்லிம் சமூகத்திற்குள் எத்தனையோ அரசியல் ரீதியான பிரச்சினைகள் பிளவுகள் இருந்த போதும், அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கட்சி பேதம் பாராது இந்நாட்டில் ஜனாதிபதி அவர்களுடைய ஸ்திரத்தன்மையையும் இந்த அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஜெனீவாவிற்கு சென்று, இந்நாட்டிற்காக வாதாடிய தலைவர்கள் தான் ஜம்மியத்துல் உலமா தலைவர்கள். இவர்கள் கலைக்கப்பட வேண்டும் என ஒரு பௌத்த துறவி கூறுவார் என்றால், நான் வெட்கப்பட வேண்டிய விடயம் அல்ல, அவர் வெட்கப்பட்டுக் கொள்ள வேண்டிய விடயம். ஏனென்றால் இந்த நாட்டின் போராட்டத்திலும் பங்கோடும் இந் நாட்டில் சர்வதேச பிரச்சினைக்கு முகங் கொடுக்கின்றவர்களாக தோள் கொடுக்கின்ற பங்காளியாக இந்த ஜம்மியத்துல் உலமா இருந்திருக்கின்றது. அவ்வாறு இருக்கின்ற ஜம்மியத்துல் உலமாவை அவர்கள் கலைக்க வேண்டும் என கோருவார்கள் என்றால், அது இச்சமூகத்தில் சிறுபான்மை என்ற மக்களுக்கு அப்பால் நின்று ஒரு சாதாரண மனித சமூகத்திற்கு ஒரு சாதாரண மனிதனுக்கு செய்கின்ற மாபெரிய துரோகம் அந்த பௌத்த துறவிகளுக்கு தெரியாமல் போனது எனக்கு விந்தையாக இருக்கின்றது.
'அல்குவைதாஇ ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு பணம் கொடுக்கின்றோம்' என்று மற்றுமொரு குற்றச்சாட்டை அவர்கள் கூறுகின்றார்கள். நாங்கள் கட்டிய பறையையே அடிக்க முடியாமல் இருக்கின்றது. இந்த ஹமாஸ்இ அல்குவைதா என்பது நாங்கள் கேட்டுக் கொண்ட செய்தி தான். வெளிநாடுகளில் சவுதியில் ஆப்ஸ்கானிஸ்தானில் ஹமாஸ்இ அல்குவைதா என்கின்றார்கள். இவைகளெல்லாம் நாங்கள் கேட்டுக் கொண்ட பெயர் தான். அந்த நாட்டுக்காரர்கள் இலங்கையில் முன்னைய நாட்களில் டுவுவுநு என்பதை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அது போன்று நாங்கள் பத்திரிகைகளில் தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்கின்ற விடயம்;. நான் ஏற்கனவே கூறினேன். இந்நாட்டில் ஒரு மனிதன் தடக்கி விழுந்தாலும் ஒரு உளவுச்சேவை அதிகாரியினுடைய காலில்தான் விழவேண்டி இருக்கின்றது. இந்நாட்டில் நாங்கள் ஹமாஸிற்காகவும் அல்குவைதாவிற்காகவும் பணம் கொடுக்கின்ற செய்தி என்பது பெரிய பொய்யாக இருக்கின்றது. கௌரவ தலைவி அவர்களேஇ உங்களுக்கு கூட தெரியவில்லையா? இந்த விடயங்களை நாங்கள் பேசுகின்றோம். அரச மட்டத்தில் உயர் மட்டத்தில் அமைச்சரவையில் பேசப்படுகின்றது. பாதுகாப்புச் செயலாளரிடத்திலும் பேசப்படுகின்றது.
கௌரவ அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள்இ இதில் மும்முரமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றார். இரண்டு தடவைகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபே ராஜபக்ஷ அவர்களிடத்தில் இந்த ஜம்மியத்துல் உலமாவினுடைய கடந்த கால கணக்கீடுகளை அவர்கள் கையளித்திருக்கின்றார்கள். கௌரவ செயலாளர் அவர்களேஇ 'நீங்கள் கூறுங்கள் நாங்கள் இதை எங்களுடைய வரவுகளையும் செலவுகளையும் நாங்கள் சிங்கள யுரனவை நிறுவனத்திலா செய்திருக்கின்றோம். இதில் நீங்கள் ஏதாவது பிழையை கண்டீர்கள் என்றால் தயவு செய்து கூறுங்கள். 'நீங்கள் கூறுகின்ற எந்தவொரு குற்றச்சாட்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயார்' என்று ஜம்மியத்துல் உலமாவின் தலைமை அவர்களிடத்தில் கடந்த கால நிதி அறிக்கைகளை ஒப்படைத்திருக்கின்றார்கள்.
ஏனென்றால் அவர்களிடத்தில் நல்ல அபிப்பிராயம் இருந்த காரணத்தினால்தான். அது மாத்திரமல்லஇ இவர்கள் 'நாங்கள் ஹலால் சான்றிதழை உடனடியாக வருகின்ற புது வருடத்திற்குள் எடுத்துவிட வேண்டும்' எனக் கூறுகின்றார்கள். இப்போது நாட்டில் இருக்கின்ற பிரச்சினை அடிப்படையில் இருக்கின்ற பிரச்சினை, தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினை. சிறைச்சாலையில் இருக்கின்ற தமிழ் மக்கள் வெளியில் வரவேண்டும். அடைக்கப்பட்ட தமிழ் மக்கள் வெளியில் வரவேண்டும் என்ற பிரச்சினை, சம்பூரில் இருக்கின்ற மக்களுக்கு மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற பிரச்சினை, கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம்களுக்கு எல்லை ரீதியான பிரச்சினை, மற்றை இடங்களில் இருக்கின்ற சிங்கள மக்களுக்கு வாழ்வாதார ரீதியான பிரச்சினை. இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் பேச வருகின்ற போது, அபிவிருத்தி பற்றி பேசுகின்ற போது, உரிமையின் வடிவம் பற்றி பேசுகின்ற போது இப்பொழுதுஇந்த நாட்டில் இருக்கின்ற முக்கிய பிரச்சினை 'ஹலால் சின்னத்தை இல்லாமல் ஆக்க வேண்டும்' என்று கூறுகின்றார்கள். இல்லாமல் ஆக்கி விட்டால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடுவதாக இந்த பொது பலசேனா அமைப்பினர்கள் கூறுகின்றார்கள் என்றால், முஸ்லிம், சிங்கள, தமிழ் பிரதேசங்களில் கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் மதப் பெரியார்களுடைய பெயர்களைக் கொண்டு வைக்கப்பட்ட வீதிகளை அவர்கள் இரவில் துவம்சம் செய்கின்றார்கள், அழிக்கின்றார்கள். வேறு சிங்கள பெயர்களை மாற்றி வைக்கின்றார்கள். ஏன்? இன்னுமொரு இனக் கலவரம் வரவேண்டும் என்பதற்காகவா? இல்லை முஸ்லிம்களை அடித்து துன்புறுத்தி, கடந்த காலத்தில் இன்னுமொரு சிறுபான்மை சமூகம் நசுக்கப்பட்டிருந்தது போல் முஸ்லிம் சமூகமும் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்களா? இதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு பொது பலசேனாவிற்கு இருப்பதாக நான் நினைக்கின்றேன்.
கௌரவ அமைச்சர் அவர்கள் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும். நான் மிகவும் கௌரவமாக மதிக்கின்ற ஒரு அமைச்சர் கௌரவ சம்பிக்க ரணவக்க அவர்கள். இது சம்பந்தமாக அவர் அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பிரபாகரன் அவர்கள் ஆயுதத்தின் மூலம் எல்ரிரிஈ இயக்கத்தை வைத்துக் கொண்டு, சாதிக்க முற்பட்ட விடயத்தினை ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழை வைத்துக் கொண்டு சாதிக்கப்பார்க்கின்றார்கள் எனக் கூறியிருந்தார். முழங்காலிற்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடுகின்ற சமாச்சாரம் இது. இதைத் தவிர எனக்கு வேறொன்றும் கூற முடியாது. அவர்களிடத்தில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கின்றது. அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவர்இ சிறந்த அரசியல் பேச்சாளன். அவர் சிறப்பாக இருக்க வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன். ஆனால் இவ்வாறு துவேச உணர்வோடு இந்நாட்டில் அரசியல் செய்ய சிங்கள சமூகமும் சிங்கள சமூகத்தில் இருக்கின்ற வெறி பிடித்தவர்களும் வெளிக்கிட்டு விடுவார்கள் என்றால் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு, நிம்மதி கிடையாது. ஏற்கனவே அழுது கொண்டிருக்கின்ற தமிழ் சமூகத்தோடு சேர்ந்து நாங்களும் ஒப்பாரி வைக்கின்ற வேலையை இந்த சமூக சிங்கள தலைவர்கள் உருவாக்கிவிட வேண்டாம் என நான் இவ்விடத்தில் மிகவும் விநயமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இவ்விடயத்தில் சிங்கள தலைவர்கள் அதிகம் பேச வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதனுடைய உண்மைத்தன்மை எல்லோருக்கும் தெரியும். சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரியும். நல்ல சிங்கள மதப்பெரியார்களுக்குத் தெரியும். முதிய நிலையில் இருக்கின்ற காவிஉடை தரித்த சிங்கள மதப் பெரியார்களுக்கு இதனுடைய தெளிவு இருக்கின்றது. சிங்கள நல்ல தலைவர்கள் இருக்கின்றார்கள். அச்சத்தின் காரணமாக அவர்கள் அதைப் பேசுவதற்கும் கூறுவதற்கும் பயப்பிடுகின்றார்கள். அவ்வாறு இக் கிழக்கு மாகாண சபையில் இருக்கின்ற கௌரவ உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர் போன்றவர்கள் இருந்துவிடக் கூடாது என்பது என்னுடைய பிரார்த்தனை. இதில் உண்மை எது? பொய் எது? இவை சரியானதா? பிழையானதா? என்கின்ற கருத்தை இந்த மாகாணத்திற்குள் நாங்கள் பாதுகாத்து கொள்ள தவறுவோம் என்றால்இ நாங்கள் எல்லோரும் கைசேதப் பட்டவர்களாகி விடுவோம்.
நிறைய விடயங்கள் நாங்கள் பேசுவதற்கு இருக்கின்றது. ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் சிங்கள பிரதேசங்களில் இந்நாட்டில் சிறு துண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு இரவு நேர தூக்கமும் அவர்களுக்கு பல வருடக் கணக்குகள் போன்று இருக்கின்றது. ஒரு இரவைக் கழிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் சங்கடமாகவும் பிரச்சினையாகவும் சர்ச்சையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. இலங்கையின் நாலாபுறத்திலும் ஒவ்வொரு தந்திகளும், தொலைபேசி அழைப்புகளும் வந்துவிட்டால் இரவு நிம்மதியாக தூங்க முடியுமா என்கின்ற செய்தியும், காலை நாங்கள் போகமுடியுமா என்ற செய்தியும், பள்ளிக்கு செல்கின்ற போது அடிக்கின்றார்கள் என்ற செய்தியும் குர்ஆனை எரிக்க வேண்டும் என்ற பதாதைகளையும் ஹலால் சின்னத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற விடயங்களும், பள்ளி அடைக்கப்பட வேண்டும் என்ற செய்திகளும் தொடர்ந்தேர்ச்சியாக வருமென்றால், நிச்சயமாக ஒரு முஸ்லிம் சமூகத்திற்குள்ளே, மாறுபட்ட கருத்தால் மாறுபட்ட குழுவினரால் இன்னுமொரு பிரச்சினையை தூண்டுவதற்கான வேலைத்திட்டத்தை இந்த பொது பலசேனா செய்கின்றார்கள் என்ற பலமான குற்றச்சாட்டை நான் வைத்தேயாக வேண்டி இருக்கின்றது.
எனவே இவ்விடயத்தில் பலவந்தம் என்கின்ற வேலைத்திட்டம் கிடையாது. நாங்கள் பணம் உழைக்கின்றோம் என்கின்ற வேலைத்திட்டம் கிடையாது. நாங்கள் வெளிநாடுகளுக்கு உதவி செய்கின்றோம் என்கின்ற வேலைத்திட்டம் கிடையாது. நாங்கள் இந்நாட்டில் நிம்மதியாகவும் கௌரவமாகவும் விட்டுக் கொடுப்புகளோடும் ஆத்மார்த்தமான உறவுகளோடும் வாழவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். இந்நாட்டில் இருக்கின்ற பெரும்பான்மை சமூகத்தோடும் மற்றைய தமிழ் சமூகத்தோடும் உறவாடி நாங்கள் விட்டுக் கொடுப்பு செய்துஇ அவர்களுடைய பிரச்சினைகளில் பங்காளிகளாக அவர்களின் உறவுகளில் பங்காளிகளாக நாங்கள் இருக்க வேண்டும் என விரும்புகின்றோம்.
அந்த அடிப்படையில் தான்இ எங்களுடைய மூதாதைகளிடமும் எங்களுடைய வரலாற்றுப் படிவங்களும் சிங்கள மூலத்தில் இருந்து தோன்றியது தான். நாங்கள் தூரத்து உறவுகள் அல்ல. எங்களது இரத்த உறவுகள். இவர்களும் இப்படி செய்கின்ற ஒரு வேலைத்திட்டம் எதிர்காலத்தில் வருமென்றால், மத ரீதியான கருத்தை வைத்துக் கொண்டு மதத்தை ஆக்கிரமிப்பு செய்கின்ற ஒரு வேலைத்திட்டம் வருமென்றால், நிச்சயமாக அது சாதாரணமான ஒரு சூழ்நிலையில் இருக்கின்ற போது, இந்த நிகழ்வின் மூலம் இந்த நாட்டில் மீண்டும் ஒரு பூதாகரமான நிகழ்வுகள் பிரச்சினைகள் வருவதன் மூலம், ஒரு சந்தேகப்பார்வை எல்லா இனங்களுக்கும் மத்தியில் ஓடி விளையாடத் தொடங்கி விடும். எனவே தான் கௌரவ தலைவி அவர்களேஇ இந்த சபையில் இருக்கின்ற உங்களால் முடியும். இந்த கௌரவ சபையில் இருக்கின்ற அரசியல் தலைவர்களால் முடியும். அதை நியாயம் எனக் கூறுவதற்கும் இதனை சரி எனக் கூறுவதற்கும் இதனை பிழை என்றால் பிழை என்று கூறுவதற்கும் உங்களுக்கு முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில் இது ஒருவருடைய குரல் அல்ல. இது சமூகத்தினுடைய குரல் என .இங்கு மேலும் குறிப்பிட்டார்.
-----------------------------------------------------
மாகாண சபை உறுப்பினர் 19.02.2013 அன்று கிழக்கு மாகாண சபையில் ஆற்றிய உரை. நன்றி - காத்தான்குடி இன்போ.
------------------------------------------------------------------------------------------------------
விசேட நன்றி - முகநூலில் இவ்வாறு படம் போட்டு அரசியல்வாதிகளின் தாய்மாரைத் தூஷித்த “ஈமானியப் புரட்சியாளர்களுக்கு!”
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment