அன்புள்ள கடாபி மச்சான்,
நெலம ரொம்ப சிக்கலாகிக்கிட்டு வாறதாப் பேசிக்கிறாங்க. உங்களுக்கெதிரா வான் வெளித் தாக்குதல் ஆரம்பமாகிட்டு. வில்லங்கத்த வெல கொடுத்து வாங்கிக்கிட்டிங்கன்னு நெனக்கிறேன். எங்க நாட்டில பொல்லக் குடுத்து அடிவாங்கிற என்டு சொல்லுவாங்க. அதத்தான் நீங்களும் செய்திருக்கிறதாப் படுகுது எனக்கு.
நீங்க ஒரு புகழ்பூத்த தலைவன்தான் மச்சான். அதில சந்தேகமே இல்லை. இதை மறுக்கிறவனோட மல்லுக்கு நிக்கிறத்துக்கு நான் ரெடியாத்தான் இருக்கன். ஆனாப் பாருங்க மச்சான்.... எல்லாத்துக்கும் ஒரு கால எல்லை இருக்கு. அது தாண்டிட்டுண்ணு வச்சிக்குங்க.. அதுக்குப் பிறகு சடுதியா மாற்றங்கள் வரும். மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படக்குள்ளேயே நாம சுதாகரிச்சுக்கணும். இல்லைன்னு வைங்க... றோட்டால போற சொறி நாயும் நம்மளப் பார்த்து சும்மாவாலும் ‘வள்’ என்று விட்டுப் போகும் நெலம வந்துரும். அந்த நெலம இப்போ உங்களுக்கு வந்துட்டுது. நீங்க சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள்ள விழுந்திருக்கீங்க.
வரலாற்றுல இருந்து கத்துக்கிறதுக்கு நெறய இருக்கு மச்சான். துரதிர்ஷ்ட வசமா நாம அதைப்பத்திச் சிந்திக்கிறதே இல்லை. இதனாலதான் இந்தக் கதி ஏற்படுகுது. இப்ப கூட உங்களுக்கு அவகாசம் இருக்கு. இன்னும் முரண்டு பிடிக்காதீங்க மச்சான். சாட்சிக் காரன் கால்ல விழுகுறத விடச் சண்டக்காரன் கால்ல விழலாம். உங்கட மக்கள்ற விருப்பத்துக்கிணங்க நீங்க நடந்துக்கிட்டா கௌரவமா மிச்சக் காலத்தையும் வாழ்ந்து கழிக்கலாம்.
இப்ப உங்களுக்குச் சில நாடுகள் ஆதரவா இருக்கிறாங்தான். ஆனா நெலம மோசமாகினா எல்லாப் பயலுகளும் வாலச் சுருட்டிக்கிட்டு நம்ம வேலயப் பார்ப்போம்னு போயிடுவானுங்க. அதாவது உங்களக் கொண்டு நடுத் தெருவுல விட்டுப் போட்டு ஓடி ஒளிச்சிருவானுங்க.
வான் வெளித் தாக்குதல்ல குழுந்தைகள், அப்பாவிகளெல்லாம் இறந்து போனதாக் கேள்விப்பட்டு சரியான கவலையிருக்குது. நீங்க விட்டுக் குடுக்க மாட்டேன் என்று மார் தட்டினதால மேற்கத்தேய மச்சான்மார் உங்க நாட்டுக்குள்ள காலடி வைக்கப் போறான். பிடிவாதம் பிடிச்சிக்கிட்டே இருந்தீங்கன்னு வைங்க. வந்து புகுந்து உங்களையும் அள்ளிக்கிட்டுப் போய்த் தூக்குல போட்டுடுவானுங்க. அத செல் போன்ல படம் புடிச்சி ஊருலகமெல்லாம் காட்டுவான். தேவையா இது?
மூட்டைக்குப் பயந்து வீட்டக் கொளுத்துற வேலயத்தான் நீங்க எல்லாரும் பார்த்துக்கிட்டு வாறீங்க. வீட்டுக்குள்ள ஆயிரம் பிரச்சினை வரும். அதைப் பயன்படுத்திக் கள்ளன் காவாலியெல்லாம் வீட்டுக்குள்ள நுழையுறத நீங்க அனுமதிச்சா நீங்க எப்புடித் தலைவனா இருக்க முடியும்? கண்ணுக்கு முன்னால ஈராக் இருக்கு. அதை மட்டும் பார்த்தாலே போதும். நான் சொல்லுறத் சொல்லிட்டேன்... அதுக்கு மேல உங்க இஷ்டம்!
மச்சான் என்று விளிக்கிறத்துக்காக மன்னிக்கணும் தல. எல்லாம் ஒரு பாசத்துலதான்!
ஏலுமென்டா தலைமுடியையும் நல்லா எண்ணெய் வச்சு வார்ந்துக்குங்க!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
7 comments:
ஒரு போராளியாக தன்னை அடையாளப்படித்தியவர், இந்த அரசியல் ஒரு காவாளி’யாக மாற்றி விட்டது.
word varification'ஐ நீக்கி விடுங்கள். கருத்துக்கள் இட சிரமமாக இருக்கிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்! இதை அப்படியே அரபியில மொழிப்பெயர்த்து உங்க மச்சானு(கடாஃபி)க்கே அனுப்பினா நல்லா இருக்கும் சகோ :) சொல்லவேண்டிய புத்திமதி அத்தனையும் அழகா சொல்லிட்டீங்க, அருமையான வழக்கு பாஷையிலே :-)
//எல்லாத்துக்கும் ஒரு கால எல்லை இருக்கு//
40 வருஷம் சர்வாதிகாரம் பண்ணியதும் பத்தாதுன்னா... மக்கள் செத்து மடிவது முக்கியமில்லை. ஏன்னா சாகும்வரை பதவி, சுகபோக ஆசை!
//ஏலுமென்டா தலைமுடியையும் நல்லா எண்ணெய் வச்சு வார்ந்துக்குங்க!//
:)))))) அவர் நல்ல புத்தியோட நகர்ந்து, தப்பிச்சா போதும். தப்பிச்ச தலையில அதுக்கப்புறமா எண்ணெய் வச்சு வார்ந்துக்கலாம் :) நல்ல பதிவு சகோ.
Fantastic Ashraff, I'm still your fan. Jawahir Saly
அருமையான அட்வைஸ் எங்க இவனுகள் திருந்தப் போறாங்கள்..
தாங்கள் இதனைப் பதிவிட்டு 7 மாதத்தின் பின்னர் இன்று அப்படி அப்படியே எல்லாமும் நடந்து விட்டது. :-(
ஹூம்! என்னத்த சொல்ல! கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்ற மாதிரித்தான் ஆகிப் போச்சு! ஜனநாயகம் பேசிப் பேசியே பாஸிஸ ராச்சியம் புரிந்த சர்வாதிகாரிகள் கால வெள்ளத்தில் சிறு துரும்பாய் அடித்துச் செல்லப்படுவார்கள் என்ற வரலாறு தொடர்கிறது... நீங்கள் சொல்வது போல் இவர்கள் வரலாற்றில் இருந்து பாடம் படித்தால் நல்லதுதான். ஆனால், படிப்பார்களா? :)
Post a Comment