இரண்டு தினங்களுக்கு முன்னர் இஸ்ரேலிலும் மக்கள் தெருவில் இறங்கினார்கள். பெஞ்சமின் நெத்தன்யாகுவின் அரசுக்கு எதிராக இப்பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அரசின் பல்வேறு கொள்கைகளை எதிர்த்துக் கோஷம் எழுப்பினார்கள். முகப்புத்தகம் மூலமும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் திரட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இளைய வயதினரே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கொண்டிருந்தனர். தெருவில் கூடிய இளைஞர்கள் மாணவர்கள் தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். வீடுகளிலிருந்து வந்து சேருங்கள் என்று கோஷம் எழுப்பினார்கள்.
பெற்றோல், வீட்டுவசதி, மின்சாரம் ஆகியவை குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
60,000க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வெறுமனே அரசியல் காரணங்களைப் பேசிப் பேசி அரசு காலங் கழிப்பதாகவும் பொது மக்கள் தேவை குறித்து கவனம் கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் செய்திகள் மேற்கத்தைய ஊடகங்களில் வெளியாகவில்லை. அரபு நாடுகளின் ஆர்ப்பாட்டங்களை நிமிடத்துக்கு நிமிடம் எடுத்து உலகத்தக்கு முன் வைத்தவர்கள் இந்த விடயத்தில் பொத்திக் கொண்டு இருந்து விட்டார்கள்.
நான் மேலே தந்திருக்கும் படங்கள் வீடியோவிலிருந்து பெறப்பட்டவையே. யுடியுபில் இடப்பட்டிருந்த இஸ்ரேல் தொலைக் காட்சி வீடியோவிலிருந்தே இப்படங்களைப் பெற்றேன். இதை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். யு டியுபில் இந்த வீடியோவைத் தேடினேன். அகப்படவில்லை. நீங்கள் ஒரு முறை தேடிப் பாருங்கள். மேலும் தகவல்களைப் பெறலாம்.
குறிப்பு -
சகோதரர் பாயிக் யு டியுபின் ஓர் இணைப்பைத் தந்துள்ளார்.
கமரா ஓரிடத்தில் தரித்து நிற்க ஆர்ப்பாட்டத்தில் நகரும் மக்களைக் காட்டுகிறது இந்த இணைப்புகள்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2 comments:
http://www.youtube.com/watch?v=RCkieqKpp9k&feature=player_embedded
இந்த லின்க்`ஐ பார்க்கவும்.
வணக்கம் சகோ, உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு ஆர்ப்பாட்டம், ஊடகங்கள் தாம் எப்போதும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளை, ஊதுகுழல் என்பதனை இந்த ஆர்ப்பாட்டத்திலும் காட்டி விட்டன என்று நினைக்கின்றேன்.
இஸ்ரேலிய மக்களின் இப்போராட்டத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
Post a Comment