Thursday, August 25, 2011

கிறீஸ் மேன் - 2



அத்துசலாம் என்றழைக்கப்படுகின்ற அப்துல் சலாம் காரியாலயக் கடமை முடிந்து வீட்டுக்கு வந்த போது வழமை போல மாலை 6.45 ஆகி விட்டது.


மரக்கறியும் சில அடுக்களைப் பொருட்களும் வாங்க வேண்டியிருப்பதால் கொஞ்சம் நேரகாலத்தோடு வீட்டுக்கு வரச் சொல்லி கைத்தொலை பேசியில் தொடர்பு கொண்டு அத்துசலாமின் மனைவி மதிய நேரம் சொல்லியிருந்தாள்.

 ‘வருகிறேன்’ என்று பதில் சொல்லியிருந்த போதும் அது சாத்தியப்படாது என்பது அவனுக்குத் தெரியும்.

தேசிய ரீதியாகக் கிளைகள் கொண்ட நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு ஊழியனாக அவன் கடமை புரிந்து வந்தான். அவனது கடமை நேரம் மாலை 6.00 மணிக்கு முடிவடையும். அடுத்த பாதுகாப்பு ஊழியன் வந்த பிறகே அவனால் வெளியாக முடியும்.

வீட்டுக்கு வந்ததும் அவசர அவசரமாக மனைவியைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சந்தைக் கடைப் பகுதிக்கு விரைந்தான். வரும் வழியில் மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தீர்ந்து போனது. ரிசர்வ் டேங்கைத் திறந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அவன் சந்தைக் கடையருகில் மனைவியை இறக்கி விட்டான்.

பொருட்களை வாங்குவதற்கு மனைவியிடம் பணத்தைக் கொடுத்து பொருட்களை வாங்குமாறு சொல்லி விட்டுப் விட்டுப் பெற்றோல் நிரப்பிக் கொண்டு வருவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையம் நோக்கிப் பறந்தான்.

நீண்ட காலமாகத் தலை நகரக் கிளையில் கடமை புரிந்து வந்தவன் அத்துசலாம். முகாமையாளர் தன்னை ஒரு சிற்றூழியனாகக் கருதி அவனது கடமைகளுக்கப்பாற்பட்ட வேலைகளுக்கும் ஏவி வந்தார். ஒரு நாள் அதை அவன் மறுத்தான். விளைவாக... இதோ... புதிய ஒரு பிரதேசத்துக்கு அவனை அனுப்பி விட்டார்கள்.

எந்தத் தொழில் செய்தாலும் சுய கௌரவம் முக்கியம் அல்லவா... கெஞ்சிக் கூத்தாடாமல் புதிய ஊருக்கு வந்த சேர்ந்தான். நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் அவ்வூருக்கு வந்த சேர்ந்திருந்ததால் ஒரு சிலர் மட்டுமே அவனைத் தெரிந்திருந்தார்கள்.

பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் ஒருவன் கைகளில் சில கத்திகளை வைத்து எரி பொருள் நிரப்ப வருவோரிடம் விற்றுக் கொண்டிருந்தான். விலை குறைவாக இருக்கும் போல் தோன்றியதால் அத்துசலாமும் ஒரு கத்தியை வாங்கிக் கொண்டான்.

சந்தைக் கடையருகே வந்த போது இருட்டியிருந்தது. அநேகமான கடைகள் பூட்டியிருந்தன. நான்கு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் அமர்ந்து நிலத்தில் ஒற்றைக் காலூன்றியபடி அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

அத்துசலாம் மோட்டார் சைக்கிளைத் தெரு ஓரத்தில் நிறுத்தி விட்டு மனைவியைத் தேடிக் கடைத்தெருவில் பார்வையைச் செலுத்தினான். ஒரு மூடப்பட்ட கடைக்கு முன்னால் பெரியதொரு பையுடன் மனைவி நிற்பதைக் கண்டு தெருவைக் கடந்து மனைவியை நோக்கி நடந்தான்.

தலையில் ஹெல்மெட் அணிந்து கையில் கத்தியுடன் ஒரு பெண்ணை நோக்கி வேகமாக நடந்த செல்லும் மனிதனைக் கண்ட இளைஞர்கள் “கிறீஸ் மேன்...” என்று சத்தமிட்டபடி அவனை நோக்கி ஓடினார்கள். அவன் சுதாகரிப்பதற்குள் அவனை அடி அடியென்று அடித்தார்கள். அவர்கள் எழுப்பிய சத்தத்தில் புற்றிலிருந்து ஈசல்கள் வருவது போல் எங்கிருந்தோ வந்த பலநூறு பேர் வந்து குழுமினார்கள்.

கணவனுக்கு அடி விழுவதைக் கண்ட அவனது மனைவி ஓடி வந்து “அவன் என் புருசன்... அவர் என் புருசன்.. அவரை விட்டுடுங்க..” என்று சத்தமிட்டாள். அந்தச் சத்தம் களேபரத்தில் யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.

அத்துசலாமின் தலை, மூக்கு ஆகியவற்றிலிருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. சோர்ந்து கீழே விழுந்தான்.

அடித்து ஓய்ந்த ஒருவன் கூட்டத்திலிருந்து வெளியே வந்து “அவன் கத்தியால் உங்களை வெட்டினானா?” என்று அத்துசலாமின் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

நிலத்தில் அமர்ந்திருந்த அவள் எதுவும் பேசாமல் தலையிலும் நெஞ்சிலும் அடித்து அழுது கொண்டிருந்தாள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

8 comments:

Shaifa Begum said...

ஐயோ.!!......... அத்துசலாம் பாவம்.... இப்படி எத்தனை பேர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அடி வாங்குகிறார்களோ.. இந்த ” கிறீஸ் மேன்” ஒரு அச்சுறுத்ததல் தான்.. இவன் பார்வை பெண்கள் பக்கமாக திசை திருப்பபட்டிருப்பதால் அவதானம் தேவைதான்.. அதற்காக கண்டவரை எல்லாம் போட்டு அடித்து காயப்படுத்தலாமா ..? நிதானமும் கையாளப்பட்டால் அப்பாவிகள் அடிவாங்குவதிலிருந்து தவிர்க்கப்படுவார்கள் அல்லவா..?

மதுரை சரவணன் said...

nalla kathai... iyalbu nadai kavarkirathu ..vaalththukkal

RIPHNAS MOHAMED SALIHU said...

ஆஹா.. இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறதல்லவா... ஊராரை குற்றம் சொல்வதற்குமில்லை.. நாட்டு நடைமுறை அப்படி இருக்கிறது... ஆனாலும், அப்பாவிகள் தண்டிக்கப்படுவது வேதனைக்குரியதே..

பி.அமல்ராஜ் said...

இப்ப இவாறான சம்பவங்கள் நடைபெற அதிகம் வாய்ப்புள்ளது நம்ம ஏரியாக்களில்... நிச்சயமாக மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது தங்கள் தலைகளையும் கொஞ்சம் பாவித்தேயாகவேண்டும்..

Mohamed Faaique said...

இன்றைய நிலமையை சரியாக படம் பிடித்து காட்டுகிறது.

shenbagam said...

அத்துசலாம் என்ற அப்பாவியின் கதை(அல்ல உண்மை நிகழ்வு) மிகவும் உருக்கம்.அறண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல யாதுமறியா அப்துல் சலாமை வந்தவனும் போனவனும் தாக்கிக் காயப்படுத்தியிருப்பது முற்றிலும் நியாயமற்றது. சும்மாவா சொல்லி வைத்தார்கள்...கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்யென்று.

ASHROFF SHIHABDEEN said...

முகப்புத்தகக் கருத்துக்கள்

Aadham Izzath

நெற்குவியலில் இருந்து பதரை காற்றில் தூற்றிஅகற்றும் போது சில நெற்களும்தான் சேர்ந்து செல்கின்றன, அதேபோல் கீறீஸ்மனிதர்களின் களையெடுப்பில் சில அப்பாவிகளும் அடிவாங்குவதை தத்தூருபமாக சொல்லும் பாங்கு இதமானது
Yesterday at 12:06am · UnlikeLike · 4 peopleYou, Irfan K Mohammed, Nawfeer Mohamed and Begum Sbegum like this.

Mohamed Fowzoon

ithil mediakkalin pangalippu than athiham marma manithan vivaharam inthalavukku vistheeranamavathatku athai sila samooha virothihal sathahamaha payanpaduthtuhinranar
Yesterday at 10:56am · UnlikeLike · 1 personLoading....Rinoosa Irham kaalaththukku eatra kathai..
Yesterday at 12:42pm · UnlikeLike · 1 personLoading....

Farveen Mohamed

ennamai planepannuraanka ...............
Yesterday at 4:40pm · UnlikeLike · 1 personLoading....

Alashar Nijamdeen
intersting story and true
19 hours ago · UnlikeLike · 1 personLoading...

AH said...

சுஜாதா பிறகு உங்கள் எழுத்துகள் பிடிச்சிருக்கு...