ஓர் இலக்கியவாதிக்குக் கிடைக்கும் பாராட்டானது அவனை ஆத்ம திருப்திக்குள்ளாக்கும் அதே சமயம் மீண்டும் எழுதத்தூண்டிவிடக் கூடியது.
பாராட்டு என்பது இலக்கியவாதியொருவருக்கு அவ்வளவு இலகுவாகக் கிடைத்து விடுவதில்லை. ஒரு இலக்கியவாதியைப் பாராட்டும் எல்லாப் பாராட்டுக்காரர்களையும் அவன் மனதார ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு பாராட்டு வெளிவரும் போது அதன் பின்னணி, அதன் அரசியல் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
தனக்கு ஒரு மேடை கிடைப்பதானால் ஒரு இலக்கியவாதி அல்லது சில இலக்கியவாதிகள் தேவை என்று கருதும் பிரகிருதிகளால் நடத்தப்படும் பாராட்டு, வெறும் நட்புக்காக நடத்தப்படும் பாராட்டு, படைப்பாளியிடம் ஏதோ ஒரு தேவை கருதி நடத்தப்படும் பாராட்டு என்று ஏகப்பட்ட பாராட்டு முறைகள் இப்போது நடைமுறையில் இருக்கின்றன.
பாராட்ட வேண்டிய எழுத்தைப் பாராட்டும் மனோ நிலை சிலரிடம் கிடையாது. எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காகத் தானும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்பதற்காகப் பாராட்டும் முறையும் உண்டு.
இன்னொரு படைப்பாளியின் எழுத்து புகழப்படும் போது நாசூக்கான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனைக் குறைத்துப் பேசுபவர்களும் உள்ளனர்.
நேர்மையான ஒரு விமர்சகர் என்று தான் கருதும் ஒருவர், அறிமுகமற்ற, முகமறியாத ஒருவர் தனது எழுத்தைப் படித்துப் பாராட்டும் போது ஒரு படைப்பாளியின் மனது நிறைவடைகிறது.
அப்படியொரு பாராட்டு எனக்குக் கிடைத்திருக்கிறது.
இதனை ஸ்கேன் செய்து எனது நண்பர் ஜாபர் சாதிக் பாக்கவி அவர்கள் சென்னையிலிருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்.
நான்கே நான்கு வசனங்களில் அமைந்த அந்தக் குறிப்பில் எனது எழுத்துப் பற்றி ஒரு வசனம் வருகிறது. இதுதான் அந்த வசனம்:-
“ஒரு மரத்தையும் கூட மனித உரிமைப் போராளியாக ஆக்கிவிடும் எழுத்து அஷ்ரப்புடையது.”
இந்த வசனத்தை ஒரு பெரும் விருதாகவே நான் காண்கிறேன். எனது நூலைப் படித்த விட்டு இந்தக் குறிப்பை எழுதிய அந்த முகமறியா நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றி!
நான் சந்தோஷமாக இருக்கிறேன்!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
4 comments:
சேர், உங்கள் சந்தோசத்துடன் இணைந்து நாங்களும் சந்தோசமாக இருக்கிறோம்..
ஒற்றை வரியில் விருது கொடுத்து திரு.செ.ச. செந்தில் நாதன் அவர்களையும்
இந்த நேரத்தில் நினைத்தப் பார்க்கிறோம்..நீங்கள் பொருத்தமானவர் என்பதனால் தான்
இந்த ஒற்றை வரி விருதும் உங்களை வந்தடைந்திருக்கிறது..
“ஒரு மரத்தையும் கூட மனித உரிமைப் போராளியாக ஆக்கிவிடும் எழுத்து அஷ்ரப்புடையது.”
ஆழமான கருத்துடைய ஒற்றை வரி விருது.. உங்களுக்கு மிகப் பொருத்தமே.....
நன்றிகள்..
நாங்களும் பெருமையாக உணருகின்றோம் ............
முகப்புத்தகத்தில் இடப்பட்ட
ஒரு பின்னூட்டம் -
Lareena Abdul Haq மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! எங்கள் நாட்டுக்கே கிடைத்த பெருமை இது. இன்னும் இதுபோல் நிறைய விருதுகள் கிடைக்க இதயப் பிரார்த்தனைகள்!
//பாராட்ட வேண்டிய எழுத்தைப் பாராட்டும் மனோ நிலை சிலரிடம் கிடையாது. எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காகத் தானும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்பதற்காகப் பாராட்டும் முறையும் உண்டு.
இன்னொரு படைப்பாளியின் எழுத்து புகழப்படும் போது நாசூக்கான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனைக் குறைத்துப் பேசுபவர்களும் உள்ளனர்// நச்!
about an hour ago · UnlikeLike · 2 peopleLoading...
"பாராட்ட வேண்டிய எழுத்தைப் பாராட்டும் மனோ நிலை சிலரிடம் கிடையாது. எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காகத் தானும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்பதற்காகப் பாராட்டும் முறையும் உண்டு.
இன்னொரு படைப்பாளியின் எழுத்து புகழப்படும் போது நாசூக்கான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனைக் குறைத்துப் பேசுபவர்களும் உள்ளனர்" சார்... "ஒரு குடம் கண்ணீர் " இற்காக ஒரு வாரியிலென்ன ஓராயிரம் வரியிலும் விருது வழங்கலாம்..ஒரு கதையை படித்து விட்டு முழு நாளும் அழுதவர்களில் நானும் ஒருத்தி என்பதால் சொல்கிறேன்...திரு.செ.ச. செந்தில் நாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Post a Comment