Tuesday, August 23, 2011

சப்பாத்துப் பாடல்










சப்பாத்துப் பாடல்


காலில் போடும் சப்பாத்து - தனித்

தோலில் ஆன சப்பாத்து


பயணத்துக் குதவும் சப்பாத்து- நம்

பாதம் காக்கும் சப்பாத்து


வகை வகையான சப்பாத்து - பல

வழிகள் அறியும் சப்பாத்து


தேர்ந்தே எடுக்கும் சப்பாத்து - சிலர்

திருடிப் பிழைக்கும் சப்பாத்து


காலைக் கடிக்கும் சப்பாத்து - சிலர்

கழற்றி அடிக்கும் சப்பாத்து


பழுதாய்ப் போகும் சப்பாத்து - சிலர்

கழுவிக் குடிக்கும் சப்பாத்து!
 
(என்னைத் தீயில் எறிந்தவள் கவிதைத் தொகுதியிலிருந்து)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 comments:

Shaifa Begum said...

சேர் நீங்கள் சொன்னது எல்லாமே சரி.. சிலர் கழுவிக் குடிக்கும் சப்பாத்து.. இதுதான் புரியவில்லை..
சப்பாத்து பாடலில் அப்படியொரு சந்தம் .. ஓசைநயம் இருக்கிறதே..!!!

பி.அமல்ராஜ் said...

ரசித்தேன்... சிறுவயதில் படித்த தோ தோ நாய்க்குட்டி.. என்கின்ற சிறுவர் பாடல் ஞாபகம் வருகிறது அண்ணா. (அந்த சந்தத்திற்காய் சொன்னேன்).

sinnathambi raveendran said...

எல்லாமே சரி.. சிலர் கழுவிக் குடிக்கும் சப்பாத்து.. இதுதான் புரியவில்லை..
அதன்கருத்து என்ன?

Shaifa Begum said...

sinnathambi raveendran .. என்னைக் கேட்கிறீர்களா..?

காலில் போடும் சப்பாத்து - தனித்
தோலில் ஆன சப்பாத்து
பயணத்துக் குதவும் சப்பாத்து- நம்
பாதம் காக்கும் சப்பாத்து
வகை வகையான சப்பாத்து - பல
வழிகள் அறியும் சப்பாத்து
தேர்ந்தே எடுக்கும் சப்பாத்து - சிலர்
திருடிப் பிழைக்கும் சப்பாத்து
காலைக் கடிக்கும் சப்பாத்து - சிலர்
கழற்றி அடிக்கும் சப்பாத்து

இதுவரையும் எல்லாமே சரி..

பழுதாய்ப் போகும் சப்பாத்து - சிலர்
கழுவிக் குடிக்கும் சப்பாத்து!

இது புரியவில்லை என்று சொன்னேன்...
சப்பாத்தை கழுவிக் குடிக்கிற விசயம் எனக்கு இப்போ தான் தெரிகிறது.
ஆனாலும் எதற்கு கழுவிக் குடிக்கிறார்கள் என்று தெரியவில்லை...

RIPHNAS MOHAMED SALIHU said...

"சிலர் கழுவிக் குடிக்கும் சப்பாத்து!" புரியவில்லையே இதன் அர்த்தம்.. விளக்க முடியுமா?