ஒரு நீர் ஏரிக் கரையில் இளந்துறவிகள் மூவர் கவனத்தை எங்கும் சிதைய விடாமல் கண்களை மூடித் தியானம் மேற்கொண்டிருந்தனர்.
சட்டென முதலாவது இளந்துறவி எழுந்தான். 'எனது பாயை மறந்து விட்டேன்' என்று சொல்லி விட்டு ஏரித் தண்ணீரின் மேலால் நடந்து அடுத்த கரையில் அமைந்துள்ள தங்களது குடிலுக்குள் நுழைந்தான். பாயை எடுத்துக் கொண்டு விறு விறுவென நீரின் மேல் நடந்து அவன் திரும்பி வந்தான்.
இரண்டாவது துறவி எழுந்தான். 'என்னுடைய உள்ளாடையைக் காயப் போட மறந்து விட்டேன்' என்று சொன்ன படி அமைதியாக நீரின் மேல் நடந்து சென்று அவ்வாறே திரும்பி வந்தான்.
இவர்கள் இருவரையும் அவதானித்த மூன்றாவது இளந்துறவி தன்னுடைய தவ வலிமையையும் பரிசோதிக்க நினைத்தான்.
'நீங்க இரண்டு பேரும் என்னை விட அதிகம் வலிமை கொண்டவர்கள் என்பதையா எனக்குக் காட்டுகிறீர்கள்... இதோ பாருங்கள்... நானும் நடந்து காட்டுகிறேன்' என்று சத்தமாகச் சொல்லி விட்டு வேகமாகத் தண்ணீரில் காலை வைத்தான்.
அந்தோ பரிதாபம்!
நீருக்குள் விழுந்தான் அவன்.
நீருக்குள் இருந்து எழுந்து நடப்பதற்கு முயற்சித்தான். ஆனால் நீருள் மூழ்கினான். அவன் மீண்டும் மீண்டும் முயற்சித்தான். ஒவ்வொரு முயற்சியின் போதும் அவன் நீருக்குள் மூழ்கினான்.
இதை முதலாம் இரண்டாம் துறவிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரண்டாவது இளந்துறவி முதலாவது துறவியிடம் கேட்டான்:-
'எந்த எந்த இடத்தில் கற்கள் இருக்கின்றதன நாம் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?'
நீதி-
அரைகுறைத் துறவிகள் இப்படித்தான். ஆழம் புரியாமல் காலை வைத்துவிடுவார்கள்!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
தியானத்தின் போதும் எதையோ நினைத்துகொண்டிருந்த அவர்களும் அரை குறை துறவிகள் தான்
Post a Comment