அந்த வாகனத்தின் முன் ஆசனத்தில் ஏறி அமரும் வரை, அவ் வாறான ஓர் ஆனந்தம் மிக்க அனுப வம் நிகழும் என்று ஒரு போதும் நான் நினைத்திருக்க வில்லை.
வழமைபோல் ஏறக் குறைய இருபது நிமிடம் நீடிக்கும் அந்தப் பயணத்தில் அவ்வாகனத்திலிருந்த நாங்கள் யாரும் எந்தவொரு வார்த் தையையும் பகிர்ந்து கொள்ள வில்லை. சாரதி, நான் உட்பட மூவர் இருந்த வாகனத்தில் - ஒலிபரப்புப் பற்றிய குறியீட்டுச் சொற்கள் நிரம்பிய வழமையான உரையாடலை அன்று எங்களையறியாமல் நாங்கள் தவிர்த்திருந்தோம்.
எங்களிடமிருந்து எந்தவொரு வார்த்தையையும் வெளிவர விடாமலும் எங்களை வேறு எந்தச் சிந்தனைகளுக்கும் திரும்ப விடா மலும் அப்படியே ஆட்கொண்டிருந்தது, நாங்கள் அமர்ந்திருந்த வாக னத்தில் பொருத்தப்பட்டிருந்த வானொலியிலிருந்து வழிந்து கொண்டிருந்த இசை. மூச்சுத் திணற விடாமலும் திகட்டி விடாமலும் வாகனத்தை நிறைத்த அந்த இசை, வாகனத்துள்ளிருந்த எங்களையும் முற்று முழுதாக நனைத்தெடுத்தது. புறச் சூழலின் சிறு தாக்கங்களையும் கூட உணர்த்தாமல் உள்ளத்தை அப்படியே அநாயாசமாக வருடிக் கொண்டிருந்தது அந்த வாத்தியக் கருவியின் வாசிப்பு. இப்போது எண்ணிப் பார்க்கையில் - இலங்கையர்கோனின் ‘யாழ்பாடி’யின் வாசிப்பில் கிறங்கிக் கிடந்த அரசவைப் பிரதானிகளின் நிலையில் நாங்கள் இருந்தோம் என்று சொல்லலாம்.
சரியாக இரவு 11.00 மணிக்கு ‘மங்கள காத்தா’வையும் தொடர்ந்து தேசிய கீத இசையையும் ஒலிபரப்பி நேயர்களுக்கு ‘வணக்கம்’ தெரிவித்துப் புத்தகத்தில் கையெழுத்திட்டு விட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் படியிறங்கினால் நாங்கள் செல்ல வேண்டிய வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். அவ்வாறான வாகனங்களில் ஒன்றில் ஒரு குறுந்தூரப் பயணத்தில் இந்த அற்புத அனுபவம் எனக்கு வாய்த்தது.
எப்போது வாகனத்திலிருந்து இறங்கினேன், எவ்வாறு தங்கும் அறைக்குள் நுழைந்தேன் என்ற உணர்வேயின்றி ஏதோ ஒரு மந்திரத்தில் கட்டுண்டவனைப் போல வந்து சேர்ந்து எனது மேசை மீதிருந்த சிறிய வானொலியில் அவசர அவசரமாக அந்த இசை பிரவகித்த வழியைத் தேடிக் கண்டுபிடித்தேன். மீண்டும் அதே அலைவரிசை... மீண்டும் எழுவானிலிருந்து படுவான் வரைக்கும் வான வீதியூடே இறக்கை கட்டி அழைத்துச் செல்லும் அந்த இசை!
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அந்த இசையைத் தணித்துக் கொண்ட வானொலி சொன்னது, “இதுவரை உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் அவர்கள் வாசித்த ஷெனாய் இசை கேட்டீர்கள். இது அகில இந்திய வானொலி...”
இதன் பிறகு ஆயிரமாயிரம் கணங்கள் வாழ்ந்து கழிந்தன. ஆயின் அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்துள் இசையில் நான் அனுப வித்த அவ்வாறான ஆனந்தம் மிக்க கணங்கள் மீளவில்லை!
இன்று போல் அன்று இசைக் குறுந்தகடுகள் கிடையா. இடையிடையே இந்தியாவுக்குச் சென்ற போது பி.வுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ரீ.எம்.எஸ்., எஸ்.பி.பி. என்று பெயரிடப்பட்டுப் பொருத்தமற்றதும் சம்பந்தா சம்பந்தமின்றி ஒன்று படுத்தப்பட்ட மலிவுப் பதிப்பு ஒலிப்பதிவு நாடாக்களுக்குள் பிஸ்மில்லாஹ் கான் கிடைக்கவில்லை. அல்லது அவை கிடைக்கும் இடத்தை நான் கண்டறிந்திருக்கவில்லை.
என்று அந்த இசையில் நான் ஈர்க்கப்பட்டேனோ அன்றி லிருந்து பிஸ்மில்லாஹ்கான் ஓர் ஈடு இணையற்ற கலைஞன் என்ற - வேறு யாரதும் உபயமும் இன்றி, எனக்குள் ஆளுமை செலுத்தும் வேறு யாரேனும் மாற்றுக் கருத்துச் சொன்னாலும் கூட சமரசம் செய்து கொள்ளவோ அல்லது ஓரளவுக்கு நெகிழ்ந்து கொடுக்கவோ கூடத் தயாரற்ற - முடிவுக்கு நான் வந்து விட்டேன்.
அவரது இசையில் நான் மயங்கி நின்ற அந்தச் சம்பவத் துக்கும் அவரது மறைவுக்குமிடையே ஏறக்குறைய 19 ஆண்டுகள் கழிந்து போய் விட்டன. அந்த இசை ததும்பிய நிமிடங்களின் நினை வையும் அடைந்த பரவசத்தையும் பத்தொன்பது ஆண்டுகளில் - கடந்து சென்ற காலம், அக்காலத்தில் எனக்குக் கிடைத்த அனுப வங்கள், எனது கருத்தியலில், சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகிய எவையும் அழித்து அல்லது மறுத்துவிடவில்லை. ஒரு முப்பது நிமிடத்தில் தனது வாத்திய வாசிப்பால் நீண்ட காலம் ஒருவரது மனதில் நின்று நிலைப்பவன் ஓர் ஒப்பற்ற கலைஞனன்றி வேறு யாராக இருக்க முடியும்? அன்று எனது உள்ளத்தில் அமர்ந்து விட்ட அந்த மேதாவியை இன்று வரை ‘சற்றுத் தள்ளி அமருங்கள்’ என்று சொல்வதற்குக் கூடத் தயாரில்லாத நிலையிலேயே இருக்கிறேன்.
என்னை அதிசயத்தில் ஆழ்த்திய அவரது இசையை இந்த இடைப்பட்ட காலப் பிரிவில் நான் மீண்டும் கேட்டது கிடையாது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இணையத்தில் உலகளா விய ரீதியில் கவிஞர்களைத் தேடியிருக்கிறேன் கவிதைகளைத் தேடியிருக்கிறேன். கண்டதும் கடியதும் பார்த்திருக்கிறேன். ஆனால் பிஸ்மில்லாஹ்கான் பற்றி ஒரு தேடுதல் நடத்தும் உந்தலோ ஒரு ஞாபகமோ எனக்கு ஏன் ஏற்படவில்லை என்பது எனக்கே புரிய வில்லை. அவரது மேதாவிலாசம் குறித்து அறிய அவரது இசையின் கீர்த்தியும் உன்னத வெளிப்பாடும் போதுமே தவிர அவர் குறித்து வேறு தகவல்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று எனது உள்மனம் ஒரு வேளை தீர்மானித்திருக்கலாம்.
2001ம் ஆண்டு ‘யாத்ரா’ கவிதை இதழின் அறிமுக விழாவை நண்பர் பீர் முகம்மது மாத்தளையில் ஏற்பாடு செய்திருந்த போது, அந்த மேடையில் ‘நள்ளிரவில் பிஸ்மில்லாஹ்கானின் ஷெனாய் இசை யை ரசித்திருக்கிறீர்களா? இல்லையெனில் ஒரு நல்ல கவிதையைப் படித்துப் பாருங்கள்’ என்று பேசியிருந்தேன்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைக்கு ஒலிபரப்புக்கென வந்திருந்த நாடகப் பிரதி ஒன்றின் ஓரங்கத்தை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அஷ்ரப்கான் திருப்பி எழுதிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் (திருப்தியற்ற பிரதிகளைத் திருத்தி எழுதிக் கொள்வது அவரது வழக்கம்) அவருடனான சம்பாஷணையின் போது சொன் னார், ‘ஷெனாயைப் போட்டு ஒருவாறு இதைச் சமாளித்துக் கொள்வேன்.’
இந்தியச் செய்தித் தகவலின் அடிப்படையில் 22 ஆகஸ்ட் 2006 அன்று நமது பத்திரிகைகள் ‘புகழ் பெற்ற ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லாஹ் கான் நேற்றுக் காலமானார்’ என்று செய்தியறிவித்திருந்தன. மரணத்தின் பின்னர் அவரைப் பற்றிய தகவல்களைப் படிக்கும் போது அவர் மீதான மரியாதை இன்னும் மேலோங்கியது.
இந்தியாவின் அதி உயர் விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப் பட்ட மூன்று இசைக்கலைஞர்களுள் பிஸ்மில்லாஹ் கானும் ஒருவர். மற்றையவர்கள்: ரவிஷங்கர், சுப்புலக்ஷ்மி. பிஸ்மிலாஹ் கானின் இசைப் பணிக்காக :பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமும் கல்கத்தா சாந்தி நிகேதன் பல்கலைக்கழகமும் ‘டாக்டர்’ பட்டம் வழங்கிக் கௌரவப்படுத்தியுள்ளன.
1947ம் ஆண்டு நள்ளிரவில் இந்திய சுதந்திரம் அறிவிக்கப் பட்ட பின்னர் டெல்லி செங்கோட்டையில் காஃபி ராகத்தைத் தனது ஷெனாய் இசை கொண்டு வாசித்து முழுத் தேசத்தையும் மெய் சிலிர்க்க வைத்தவர் பிஸ்மில்லாஹ்கான். இந்தியாவின் ஒவ்வொரு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போதும் அவரது ஷெனாய் இசை முக்கியமான ஒரு கலாசார நிகழ்வாக மாறியது. பின்னர் வந்த காலங்களில் தூரதர்ஷன் அன்னாரின் வாத்ய இசையை ஒலி - ஒளி பரப்பி வந்தது.
அவரது மறைவையொட்டி இந்திய அரசு ஒரு தினத்தையும் உத்தரப் பிரதேச அரசு மூன்று தினங்களையும் துக்க தினங்களாகப் பிரகடனப்படுத்தின. ‘பிஸ்மில்லாஹ் கானின் பெயரில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு சங்கீத சபை நிறுவப்பட்டு இசைத்துறையில் சிறந்த விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் அவர் பெயரில் விருதும் ஐந்து லட்சம் ரூபாய் பணப் பரிசிலும் வழங்கப்படும்’ என்று அறிவித்து உத்தரப் பிரதேச அரசு அவரைக் கௌரவப்படுத்தி யுள்ளது.
உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கானிடம் வசியம் மிக்க இசை இருந்தது. அது அவருக்குக் கொண்டு வந்து கொடுத்த சரிவே யில்லாத உச்சக்கட்டப் புகழ் அவரது மறைவு வரை இருந்தது. இவற்றுக்கெல்லாம் மேலாக அவரிடம் எளிமை நிறைந்த வாழ்க்கை இருந்ததைப் பார்க்கிறோம். வாரணாசி மாவட்ட நிர்வாகம் அவரது வீட்டுக்குக் குளிர்பதனம் செய்து தருவதற்கு அனுமதி கேட்ட போது அதை மறுத்த பிஸ்மில்லாஹ் கான், “எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்ஜான் அலி அவரது வீட்டுத் தகரக் கூரையின் சூடு தாங்க முடியாமல் தினமும் நீரை வாரி இறைத்துக் கொண்டி ருக்கும் போது நான் மட்டும் எப்படி ஏசியில் சுகமாகப் படுத்துறங்க முடியும்?” என்று கேட்டிருக்கிறார்.
‘பிஸ்மில்லாஹ் கான் மறைவால் ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. சொர்க்கத்தின் கதவுகள் அவரது இசையைக் கேட்டு மகிழ இறைவன் அவரை விண்ணுலகம் அழைத்துச் சென்று விட்டான்’ என்று :பனாரஸ் பல்கலைக் கழக இசைத் துறைப் பேராசிரியர் சித்ரஞ்சன் ஜோதியும் ‘பிஸ்மில்லாஹ் கான் யாராலும் குறை சொல்ல முடியாத இந்திய இசையின் தங்கக் கிரீடமாகத் திகழ்ந்தார். அவரைப் போன்ற மகத்தான இசைக் கலைஞர் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழித்துப் பிறப்பார்கள் என்று தெரியவில்லை’ என்று அதே பல்கலைக் கழக நிகழ்கலைத் துறை முதல்வர் ரஞ்சனா ஸ்ரீ வாத்ஸவாவும் தெரிவித்திருக்கிறார்கள். ‘பிஸ்மில்லாஹ் கான் ஒரு அபூர்வ ஆபரணம். அவரது இசை என்னுள் நுழைந்து என் இதயத்தில் கலந்து அமைதியையும் மகிழ்ச்சியையும் வாரி வழங்கியுள்ளது’ என இந்தி ஜனாதிபதி அப்துல் கலாமும் அன்னாரின் மறைவின் பின்னர் கருத்து வெளியிட்டார்.
தனது மனைவியின் மறைவுக்குப் பின்னர் ஷெனாய் வாத்தியக் கருவியே தனது மனைவி என்று சொன்னவர் இந்த மேதாவி. வாரணாசியில் அன்னாரின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட போது வாழ் நாளெல்லாம் எந்த இசைக் கருவி கொண்டு மக்களின் இதயங்களில் வாழ்ந்தாரோ அந்த இசைக் கருவியையும் அவருடன் சேர்த்து அடக்கம் செய்தார்கள். இந்திய இராணுவம் 21 மரியாதைப் பீரங்கி வேட்டுக்களைத் தீர்த்து தனது மரியாதையை அவருக்கு வழங்கியது.
பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் தனது ஷெனாய் என்ற அட்சய பாத்திரம் மூலம் ஓர் அரைமணி நேரம் எனது ஆத்மாவுக்கு உணவளித்தவரும் அதற்காக அந்த வேளையிலேயே எனத இதயத்தில் இடங் கொடுக்கப்பட்டவரும் ஒரு சாமான்யர் அல்லர் என்பதை விவாதங்களுக்கு அப்பால் நீங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்கள் என்று நம்புகின்றேன்.

இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
இசை கருவிகளை உடைத்தெரியவே நான் அனுப்பப்ப்ட்டேன் என்று சொன்ன நபி (ஸல்) அவர்களிடம், ஆல்லாஹ்விடம் இவருக்கு என்ன மரியாதை இருக்கும் என்று நினைக்கிறீர்கள். இந்திய இராணுவத்தின் மரியாதையை பெருமையாக தெரிகிறது. எல்லாம் படைத்த இறைவனின் பொருத்தம் பெருமையாக தெரிய மறுக்கிறது. மறுமை நாளில் இவருக்கு, இவர் இசைக்கு என்ன கண்ணியத்தை வழங்குவான்? என்று சிந்திக்கவும். எது பகிரங்கமாக ஹராமாக்கப் பட்டதோ, அதை பகிரங்கமாக பெருமை அடித்துக் கொள்கிரோம்.
Post a Comment