16.07.2011 அன்று சென்னை, வேப்பேரியில் பெரியார் திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் எனது “ஒரு குடம் கண்ணீர்” நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்று முடிந்தது.
சமநிலைச் சமுதாயம் சஞ்சிகையின் நிறுவனரும் அதன் கௌரவ ஆசிரியரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொருளாளருமான ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் அவர்களின் அனுசரணையுடனும் சமநிலைச் சமுதாயம் பதிப்பகத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இவ்விழா மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.00 மணி வரை நடைபெற்றது.
சமநிலைச் சமுதாயம் சஞ்சிகையின் ஆசிரியர் ஜாபர் சாதிக் பாக்கவி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நீதியரசர். சி.மு. அப்துல் வஹாப் அவர்கள் தலைமை வகித்து நூலையும் வெளியிட்டு வைத்தார். முதற்பிரதியை கலைமாமணி உமர் சாஹிப் பெற்றுக் கொண்டார். (படம் - இடமிருந்து வலமாக - பேராசிரியர் சே.மு.முகமதலி, டாக்டர் அப்துல்லாஹ் (எ) பெரியார்தாசன், நீதியரசர் அப்துல் வஹாப், பேரா. அப்துல் ரஸாக், கலைமாமணி உமர், நூலாசிரியர், ஹாஜி. ஏவி.எம்.ஜாபர்தீன், அப்துல் அஸீஸ் பாக்கவி)
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் செயலாளர் அப்துல் கபுர் சாஹிப் அவர்கள் சிறப்புப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
நூல் அறிமுக உரை நிகழ்த்தும் - ஆவணப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான ஆளுர் ஷாநவாஸ்
சென்னை புதுக்கல்லூரிப் பேராசிரியரும் எழுத்தாளருமான அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் உரையாற்றிய போது...
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் சேமு.முகமதலி அவர்களி உரையாற்றிய போது...
எழுத்தாளரும் பேச்சாளருமான கோவை. அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்கள் உரையாற்றிய போது...
பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகையில்...
எனது பதிலுரையும் நன்றியுரையும்
வருகை தந்திருந்தோரில் ஒரு பகுதியினர்
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கவிஞர் ஜலாலுத்தீன்
(இந்நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட உரைகளை ஒலிவடிவில் தருவதற்கு முயற்சிக்கிறேன்.)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2 comments:
ஒலி வடிவை எதிர்பார்கின்றேன்
சென்னையில் ஓடிய கண்ணீரை பார்த்ததில் எங்களுக்குள்ளும் ஆனந்தக்கண்ணீர்........
Post a Comment