Thursday, August 4, 2011

ஒரு கோப்பைத் தேநீர்


ஜப்பானிய மெஜ்ஜி (1868 - 1912) காலப்பிரிவில் நான்இன் என்ற பேரறிஞர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவரைச் சந்தித்து ஸென் தத்துவம் பற்றி அறிந்து கொள்வதற்காக மிகத் தூரத்திலிருந்து ஒரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வருகை தந்திருந்தார்.


அவரை வரவேற்று அமர வைத்தார் நான்இன்.

பேராசிரியருக்கு முன்னாலிருந்த மேசையில் தேநீர்க் கோப்பையை வைத்து அதில் பேராசிரியர் பருகுவதற்காகத் தேநீரை ஊற்ற ஆரம்பித்தார்.

கோப்பை நிறைந்த போதும் கூட நான்இன் ஊற்றிக் கொண்டேயிருந்தார். மேலதிக தேநீர் கோப்பையிலிருந்து வழிய ஆரம்பித்தது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பேராசிரியர் நான்இன்னிடம் சொன்னார்:-

“கோப்பை நிறைந்து விட்டது. இதற்கு மேல் அதற்குள் ஊற்ற முடியாது...”

நான்இன் கேத்தலைக் கீழே வைத்து விட்டுச் சொன்னார்:-

“இந்தக் கோப்பையைப் போல்தான் நீங்களும். உங்களது சிந்தை உங்களது சொந்தக் கருத்துக்களாலும் ஊகங்களாலும் நிறைந்திருக்கிறது. நீங்கள் உங்கள் கோப்பையை வெற்றாக வைத்துக் கொள்ளவில்லையென்றால் ஸென் தத்துவத்தை எப்படி என்னால் விளக்க முடியும்?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

Lareena said...

தேடலும் கற்றலில் விழைவும் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய அருமையான படிப்பினை, மிக எளிய, அழகிய தமிழ் நடையில்... Simply superb!

Shaifa Begum said...

அருமையான ஒரு தத்துவம்...

பி.அமல்ராஜ் said...

ஆஹா.. என்ன அருமையான தத்துவம்.. தத்துவத்திற்கு நன்றி அண்ணா..