Saturday, April 27, 2013

“வாக்குமூலம்“ - மஹ்மூத் தர்வேஷ்புகழ்பெற்ற பலஸ்தீனக் கவிஞர் மறைந்த மஹ்மூத் தர்வேஷ் எழுதிய “அடையாள அட்டை” என்ற கவிதை உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது. இந்தக் கவிதையை பலஸ்தீன பெண் கல்வியியலாளர் படிப்பதை இந்த வீடியோவில் காணலாம். அரபியிலும் ஆங்கிலத்திலும் அக்கவிதை படிக்கப்படுகிறது. அரபியில் படிக்கும் போது அவர் தன் சொந்த நிலம் குறித்துக் கலங்குவதை அவதானிக்கலாம். இது கவிதைக்கும் கவிஞனுக்கும் கிடைத்த வெற்றி.


video

இக்கவிதையை “வாக்குமூலம்” என்ற தலைப்பில் கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பும் இங்கே தரப்படுகிறது. பலஸ்தீனக் கவிதைகள் என்ற எம்.நுஃமானின் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது.

வாக்குமூலம்

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
எனது அட்டையின் இலக்கம் 50,000
எட்டுக் குழந்தைகள் உள்ளனர் எனக்கு
ஒன்பதாவது அடுத்த கோடையில்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
தொழிலாளருடன்
கற்களை உடைக்கிறேன்
கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன்
எனது எட்டுக் குழந்தைகளுக்கும்
ரொட்டித் துண்டினைப் பெறுவதற்காக
ஆயினும்
கருணை கேட்டு நான் இரந்திட மாட்டேன்
உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ்
முழந்தாழ் இட்டு நான் பணிந்திட மாட்டேன்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
பேர்புகழ் அற்ற ஒருவனே நான்
மூர்க்க உலகில் நிலைபேறுடையவன்
யுகங்களுக்கப்பால்
காலத்துக்கப்பால்
எனது வேர்கள் ஆழச்செல்வன

உழவர் குலத்தின் எளிய மகன் நான்
வைக்கோல் குடிசையில் வாழ்பவன் நான்
எனது தலைமுடி மிகவும் கறுப்பு
எனது கண்கள் மண் நிறமானவை
எனது அரபுத் தலைஅணி
ஆக்கிரமிப்பாளரின் கைகளைப் பிறாண்டும்

அனைத்துக்கும் மேலே
தயவு செய்து இதனையும் எழுது
யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல
ஆயினும்
பட்டினி வருத்தும் போதிலோ என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்

கவனம்!
எனது பசியை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்!
எனது சினத்தை அஞ்சிக்
கவனமாயிருங்கள்!


video

மஹ்மூத் தர்வேஷ் குரலில் அவரது கவிதை

video

இக்கவிதை George Qurmuz குரலில் இனிமையான ஒரு பாடலாக...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

பி.அமல்ராஜ் said...

எனக்குள்ளேயும் வெளியேயும் இருக்கிற கவிதைகள் பற்றிய பல கோண விவாதங்களுக்கு இந்த கவிதை பதில் சொல்கிறது.. இது கவிதை! பகிர்ந்தமைக்கு நன்றி.

Live LK said...

தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

அன்புடன் மலிக்கா said...

மிக அருமையான கவிதையும் அதற்கான கருவும்.

அறியத்தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

News Center 2 said...

සාක්කිය - මහ්මූද් දර්වේෂ්

මෙය ලියගනු
මම අරාබි කාරයෙක්
මාගේ හැදුනුම්පත් අංකය 50,000
මාහට ළමයි අටදෙනක්...
ලබන උෂ්ණයේ
ලැබෙයි මට අනිත් උප්පත්තිය
ඔබ තරහද?

ලියාගනු මෙය
මම අරාබි කාරයෙක්
කම්කරු සමග
ගල් කඩන්නෙමි මා...
ගල් පර මිරිකන්නෙමි මා...
මාගේ දරුවන් අටදෙනෙක්ම
රොට්ටි කෑල්ලක් ගන්නට...
නමුත්,
දයාව ඉල්ලා හිගා කන්නේ නෑ...
ඔබගේ බලය තුළ
දණ හිස ගසා මා ඉන්නේ නෑ...
ඔබ තරහද?

ලියාගනු මෙය
මා අරාබි කාරයෙක්
මාහට ගවුරවණිය නම් නැත..
වල් පොළව තුළ මා ස්ථීරවන්තයා
යුගයෙන් පසු
කාලයෙන් පසු
මාගේ මුල ගැඹුරට යයි...

ගැමි පියාගේ අපොහසත් පුතා මම...
පිදුරු නිවසේ ජීවත්‍ වෙමි
මාගේ හිස කෙස් කළුපාටයි
මාගේ ඇස් වැලි පාටයි
මාගේ අරාබි හිස් ආවරණය
ආක්රමණය කරන්නාගේ
අත් සූරනු ඇත...


සියල්ලටම වඩා
කරුණාකර මෙය ලියනු...
මා කිසිවෙකුට අප්රි.ය කරන්නේ නැත..
කිසිවෙකුගෙන් මංකොල්ල කෑවේ නැත...
නමුත්,
මා බඩගින්නෙන් සිටින වේලේ
මාව මංකොල්ලා කාපු එකාගේ
මස් කමි මා....

සැලකිල්ලට ගනු....!
මාගේ බඩගින්නට
බියවී
අවධානයෙන් සිටිනු!
මාගේ කෝපයට බියවී
අවධානයෙන් සිටිනු!!

දෙමළ පරිවර්ථනය - ඉස්මායිල් එම්. පයිරූස් (කලෛමහන්)