Wednesday, May 18, 2011

விவாதத்தின் பக்கங்கள்


பின்வரும் அனுவம் கலந்த சிந்தனைக்குரிய வார்த்தைகள் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனது மின்னஞ்சலுக்கு ஒர நண்பரால் அனுப்பப்பட்டவை. இணையத்திலிருந்து இவை சுடப்பட்டிருக்கலாம். வாசிக்க ரசனையைத் தருகின்றன என்பதால் உங்களுடன் இவற்றைப் பகிர்ந்து கொள்ளுகிறேன்.


வெற்றிக்கான திறப்பை நீங்கள் கண்டடைகின்ற வேளை யாரோ பூட்டை மாற்றிவிடுகிறார்கள்.

தவறு விடுவது மனிதனின் இயல்புதான். ஆனால் மன்னிப்பது கம்பனியின் நியதி இல்லை.

வெற்றியை நோக்கிய பாதை....? அது எப்போதும் திருத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

மதுபானம் எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதில்லை. ஆழ்ந்து சிந்தித்தால் பால் கூட அப்படித்தான்.

நாம் மிகவும் ஆசை கொள்ளும் விடயங்கள் ஒன்றில் அதிக பணப்பெறுமதியுடையதாக இருக்கிறது அல்லது சட்டவிரோதமானதாக இருக்கிறது.

பணம் சேர்ப்பதற்காக எல்லோரிடமும் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வெற்றி தரக்கூடியனவாக இல்லை.

நமது கரங்களிலிருந்து தவறி விழும் ஏதாகிலுமொன்று இலகுவில் அதை எடுத்துக் கொள்ள முடியாதபடியான இடத்தை நோக்கி உருண்டு போய் விடுகிறது.

வேளைக்கே பாதைக்கு வந்தால் பஸ் தாமதமாக வருகிறது. தாமதமாகப் பாதைக்கு வந்தால் பஸ் மேலும் தாமதமாக வருகிறது.

ஒரு முறை ஏதாவது ஒரு பொருளை நீங்கள் வாங்கி வந்த பிறகுதான் தெரியவருகிறது, பல இடங்களில் அதே பொரும் மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாகியிருப்பது.

இரண்டு வரிசைகளில் ஒன்றில் நீங்கள் நிற்கும் போது அடுத்த வரிசை வேகமாக நகர்கிறது.

வீட்டு அழைப்பு மணியும் உங்களது கைடயக்கத் தொலைபேசி மணியும் எப்போதும் நீங்கள் குளியலறையி;ல் இருக்கும் போதே ஒலிக்கிறது.

நாளைக்குப் பரீட்சையென்று இருக்கும் நிலையில் இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுகிறது.

காற்றின் பொறுப்பற்ற செயலால் புகைப்பவரின் சிகரட் புகை புகைப்பழக்கமற்ற ஒருவரின் முகத்தை நோக்கியே செல்கிறது.

எல்லா விவாதங்களுக்கும் மூன்று பக்கங்கள் இருக்கின்றன. உனது பக்கம். எனது பக்கம். மற்றது நியாயத்தின் பக்கம்.

மதுபானம் பல விடயங்களைப் பாதுகாக்கிறது. ஆனால் அவ்விடயங்களில் கண்ணியம் உள்ளடங்குவதில்லை.

முட்டாளுடன் வாதிட்டுக் கொண்டிருக்காதே. பொது மக்கள் இலகுவில் வித்தியாசத்தைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

நீ சரியாக இருக்கும் போதெல்லாம் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் தவறு விடும் போது அதை யாரும் மறப்பதுமில்லை.

நீ ஒரு தனித்துவமான நபர்தான். எல்லாரையும் போல.

நன்றாகச் சொல்லப்பட்டதை விடவும் நன்றாகச் செய்யப்பட்டதே சிறந்தது.

விடாமுயற்சி இருக்குமாக இருந்தால் வழியொன்று திறக்கவே செய்யும். பணம் இருக்குமாக இருந்தால் பல வழிகள் திறக்கும்.

எல்லோருக்கும் சொர்க்கத்துக்குச் செல்லும் ஆசை இருக்கிறது. ஆனால் யாருக்கும் மரணிப்பதற்கு விருப்பம் இல்லை.

















இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: