Wednesday, May 11, 2011

பிரச்சினைக்கு எந்த றானா வரும்?

புத்தக வெளியீட்டுக்கு அழைப்பதற்காக கிண்ணியா அமீர் அலியை நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

அமீர் அலி விகடமான பேர்வழி என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சில வேளைகளில் நாம் எழுதிக் கொண்டிருக்கும் போது சொற்களில் ர, ற - ல,ள,ழ பேதங்களில் சந்தேகம் ஏற்பட்டு விடுவது வழக்கம். இது படிப்பாளிகளுக்கும் அனுபவஸ்தர்களுக்கும் கூடப் பொதுவானதுதான்.

யாரோ ஒரு நண்பர் கிண்ணியா அமீர் அலியிடம் ஒரு பொழுதில் அவசரமாகத் தொடர்பு கொண்டு பிரச்சனைக்கு எந்த றானா வரும் என்று கேட்டிருக்கிறார். அவரது உச்சரிப்பு - “ர” வுக்கும் “ற”வுக்கும் இடைப்பட்டதாக இருந்திருக்கும்.

அமீர் அலி சொன்ன பதில் என்னவெனில் - பிரச்சினை பெரியது என்றால் பெரிய றானாவைப் போடு. சின்னதென்னால் சின்ன ரானாவைப் போடு!

நான் அமீர் அலியைத் தொடர்பு கொண்ட போது ஒரு கதையை எழுதுவதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்ன அவர், சுவாரஷ்யத்துக்கு எந்த சானா வரும் என்று கேட்டார்.

சுவாரஸ்யம் அதிகம் என்றால் எனது பெயரை எழுத நான் பயன்படுத்தும் வட “ஷ” வையும் சாதாரணமானது என்றால் பாம்பு “ஸ” - ஸானாலையும் போடுங்கள் என்றேன்!

கைத் தொலைபேசியை மூடிய போதும் கூட அமீர் அலி சிரித்துக் கொண்டிருப்பது கேட்டுக் கொண்டேயிருந்தது.

அது சரிதான்.... அதுக்கு எதுக்கு ஒபாமா படம் என்று கேட்பீர்கள். அவுக சிரிச்சா நாமும் சிரிக்கத்தானே வேணும்....!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: