Sunday, May 1, 2011

சாணிக்கதை - 2

குளிர் மிகுந்த காலப் பகுதியில் ஒரு சிறு பறவை தெற்கு நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. தாங்க முடியாத குளிரில் நடுக்கமுற்றுப் பறக்க முடியாமல் ஒரு பெரிய வயல் பகுதிக்குள் விழுந்தது. குளிரில் நடுங்கியபடி அசையப் பலமின்றிக் கிடந்த அந்தச் சின்னக் குருவியின் மீது அவ்வளியே வந்த மாடு சாணமிட்டது.


தன் மேல் சூடாக விழுந்த சாணத்துக்குள் கிடப்பது குருவிக்குக் கதகதப்பாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் சற்று நேரத்தில் குருவி பாட ஆரம்பித்தது.

அவ்வழியே வந்த ஒரு பூனை சாணத்துக்குள்ளிருந்து ஒரு குருவியில் பாடல் ஒலியைக் கேட்டது. அந்தச் சாணக் கும்பலுக்குள் இருந்த குருவியைப் பிடித்து வெளியே எடுத்துச் சாப்பிட்டது.
கதையில் பெறப்படும் நீதிகள்:-

1. உன்னை விமர்சிப்பவன், திட்டுபவன் எல்லாம் உனது எதிரி அல்ல.

2.வில்லங்கம் மற்றும் பிரச்சினைகளிலிருந்து விடுவிப்போரெல்லாம் உனது நண்பர்களும் அல்லர்.

3. தப்பான இடத்துக்குள் நீ சுகமாக இருக்கிறாய் என்றால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும்.
 
Morals of the story:


(1) Not everyone who shits on you is your enemy.

(2) Not everyone who gets you out of shit is your friend.

(3) And when you’re in deep shit, it’s best to keep your mouth shut!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Shaifa Begum said...

சின்னக் கதை..நன்றாக இருக்கிறது.. சொல்லப்பட்ட
நீதியில்..”. தப்பான இடத்துக்குள் நீ சுகமாக இருக்கிறாய் என்றால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும்.” அது இந்தக் கதையில் நன்றாக புரிகிறது..
முதல் , இரண்டாம் நீதிகள் எனக்கு புரிந்து கொள்ள கஸ்டமாக இருக்கிறது.
அது என் பிழைதான் . இன்னும் கொஞ்சம் யோசித்துப்பார்க்கலாம்..
உங்கள் எழுத்துப்பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

////தப்பான இடத்துக்குள் நீ சுகமாக இருக்கிறாய் என்றால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும். ///

சூப்பர் மேட்டர்.

word worification'ஐ எடுத்து விடுங்கள். கருத்துக்கள் பதிய வசதியாய் இருக்கும்..