Wednesday, May 4, 2011

பிறப்பிலேயே முடமெனில்... (மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா)

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 05.05
குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் தலைமையில் மலேசியாவில் நடைபெறும் இலக்கிய விழா பற்றி அங்கிருந்து இரண்டு முக்கிய தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

01. மாண்புமிகு மலேசியப் பிரதமர் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதாக அறியக் கிடக்கிறது. இதை விடவும் முக்கியமான ஒரு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அவருக்குப் பதிலாக ஓர் அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது.

02. பிற்காலத்தில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் மார்க்க அறிஞர் அரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெறுவதுண்டு. மலேசிய விழாவில் அப்படி ஓர் அரங்கு ஏற்பாடு செய்யப்படாத காரணத்தால் மலேசிய மார்க்க அறிஞர்கள் இவ்விழாவுக்கு வருவதில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் ஒரு செய்தி பரவலாகப் பேசப்படுகிறதாம்.

கவிக்கோ நெறியாளர் என்ற பெயரில் புகுந்து விளையாடிய சென்னை 2007ம் ஆண்டு மாநாட்டில் மார்க்க அறிஞர் அரங்கு நிகழ்ச்சி நிரற்படுத்தப்பட்டிருந்த போதும் அது நடைபெறவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

01. தமிழ்நாடு ஜமாஅத்தே உலமாவின் தலைவர் ஓ.எம்.அப்துல் காதர் பாக்கவி அவர்களுக்கு முறையான விதத்தில் அழைப்பு வழங்கப்படவில்லை என்றும் அவருக்குரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும் நாம் அறிய வந்தோம். அதனால் அவர்கள் மாநாட்டுக்கு வருகை தரவில்லை.

02. மார்க்க அறிஞர் அரங்குக்கு முன்னால் நடைபெற்ற அரங்கை மார்க்க அறிஞர் அரங்கை நடத்துவதற்குக் காலம் இடம் கொடுக்காத வகையில் திட்டமிட்டு நீட்டிக் கொண்டு சென்றார்கள். இதனால் அங்கு வந்திருந்த ஏனைய ஆலிம் பெருந்தகைகள் மன வேதனையோடு வெளியேறியதைக் கண்டோம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களுக்கும் பின்னணியில் ஒருசெய்தி இருந்தது. மாநாட்டு ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறும் போது மார்க்க அறிஞர் அரங்கு என்ற ஒன்று அவசியமே இல்லை என்று கவிக்கோ விடாப் பிடியாக இருந்துள்ளார். ஆனால் பலரின் கருத்து வேண்டும் என்று இருந்தமையால் அவரால் ஏதும் செய்ய முடியாமல் போகவே அந்த அரங்கு நடக்க விடாமல் சகல ஏற்பாடுகளையும் கச்சிதமாக நடத்தி முடித்துவிட்டார் என்றே அங்கு பலர் நமக்குச் சொன்னார்கள்.

இந்த அடிப்படையில் குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் பலரது கருத்தையும் சகட்டுமேனிக்குக் கேட்டுக் கொண்ட போதும் கவிக்கோவின் எண்ணங்களையும் ஏற்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் தனது திட்டமிடுதலை மேற்கொண்டுள்ளார் என்பதை இப்போது மேற்கண்ட செய்தி மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

கவிக்கோவை முன்னிலைப்படுத்த வேண்டும் அவர் சொல்படி நடந்து விட வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளை நடத்தி அனுபவப்பட்ட அவரது ஆப்த நண்பர்களில் ஒருவரும் எந்தத் தேசத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடந்தாலும் மலேசியாவுக்கான இணைப்பாளராக ஹாஜி முகம்மது இக்பாலைச் சிபார்சு செய்து மக்கள் முன் கொண்டு வந்தவருமான ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் போன்றவர்களை குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

பிச்சை முகம்மது இக்பால் இவ்வாறு நன்றியற்ற மனிதனாக நடந்து கொண்ட வேறு விடயங்களையும் எமது கட்டுரைத் தொடர்களில் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். மலேசிய விழாவுக்கு கட்டாயம் வருகை தரவேண்டும் என்று ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீனை மலேசியக் குழுவினர் அழைத்த போது ‘என்ன செய்வது எனது தோல் கொஞ்சம் தடிப்பாக இருக்கிறதே... அதில் சூடு சொரணை இருந்து தொலைத்துவிட்டதே...” என்று சொன்னதாகவும் அறிய வந்தோம்.

கவிக்கோ நுழைந்து விட்டார், தலையெடுத்து விட்டார் என்றால் என்னென்னவோவெல்லாம் நடக்கும் என்று நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். எங்கள் ஊரில் வழங்கப்படும் பழமொழி ஒன்று உண்டு. “பிறப்பிலேயே முடம் என்றால் பேய்க்குப் பார்த்து என்ன செய்வது?” (இந்தப் பழமொழி விளங்காதவர்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.)

பிறை கண்ட கரடி

இதற்கிடையில் கரடி பிறை கண்டது போல் ஒரு சிறப்புச் செய்தி கிடைத்துள்ளது. குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் விழாவுக்கான இலங்கை இணைப்புக் குழுவின் செயலாளர் கவிஞர் தாஸிம் அகமது தனது மூன்றாவது கவிதை நூலை அச்சில் சேர்ப்பித்திருக்கும் செய்திதான் அது.

தாஸிம் அகமது ஒரு சிறந்த மரபுக் கவிஞர். புதுக் கவிதையிலும் வல்லவர். மற்றவர்களுக்கு எழுதும் மருந்துத் துண்டுகளைப் போல் கவிதைகளையும் எழுதி எழுதிச் சேர்தது வைத்துக் கொண்டு இத்தனை நாள் அஞ்ஞாத வாசம் புரிந்து வந்தார். மலேசிய இணைப்புக் குழுவின் செயலாளரானதும் நிமிர்ந்து விட்டார் போல் தெரிகிறது. அவருக்கும் அவரது கவிதை நூலுக்கும் நமது வாழ்த்துக்கள்.

ஒரேயொரு கவலை என்னவென்றால் மலேசியப் பிரதமர் கையால் அதை வெளியிட முடியாமல் போகும் என்பதுதான்!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: