இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 06.02
நீங்கள் சந்தித்த கர்வமும் பெருமையும் மிக்க மனிதர் பெயரைச் சொல்லுமாறு என்னிடம் கேட்டால் கவிக்கோ அப்துல் ரகுமான் என்று தயக்கமே இல்லாமல் சொல்லுவேன். அவருடனான அனுபவங்கள் அப்படி அமைந்து விட்டது. இலங்கைக்கு வந்தால் நன்றாகப் பேசிக் கதைப்பார்.
இந்தியாவில் எந்தவொரு இடத்தில் கண்டாலும் காணாத மனிதரைப் போல் சென்று விடுவார். நீங்கள் அருகில் சென்று ஸலாம் சொல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் யோசித்து விட்டுத்தான் பதில் சொல்லுவார். அதுவும் வேண்டா வெறுப்புடன். அவர் எக்கடி நடந்து கொள்வார் என்பதை குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் அன் கோ இலங்கையில் கலந்து கொண்ட கூட்டத்திலும் பகிரங்கமாக நான் சொல்லிக் காட்டினேன்.
2007 சென்னை மாநாட்டில் பழக்கமுள்ள எங்களை மட்டும் அல்ல, யாரையும் அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இவர் சில வேளை தாயின் வயிற்றில் பிறக்காமல் வானத்திலிருந்து வந்திறங்கிய தேவதூதன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று கூட நான் அவ்வப்போது சிந்திப்பதுண்டு.
அது கிடக்கட்டும். இவர் எந்த விடயத்தில் சம்பந்தப்பட்டாலும் அங்கு ஒரு ஒழுங்கற்ற நிலை உருவாகி விடும் என்று நான் ஏற்கனவே குப்பப் பிச்சை முகம்மது இக்பால் மாநாட்டுக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் ஒரு தகவல் அதற்கு அணி சேர்த்திருக்கிறது. அதுதான்... திமுக.. தன் திண்ணையைக் காலி செய்திருப்பது! கவிக்கோ 2007 மாநாட்டை நடத்திய பின் கலைஞரைத் துதிபாடி வக்பு வாரியத் தலைமையைப் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே நடந்த மாநாடுகளில் கவிக்கோ ஒரு தமிழறிஞராகவே கலந்த கொண்டுள்ளார். 2007ம் ஆண்டு மாநாட்டில் ஒரு பதவியைப் பெறும் நோக்கத்தைக் கொண்டே புகுந்து விளையாடினார் என்று சென்னையில் அவ்வேளை நண்பர்கள் நமக்குச் சொன்னார்கள். கலைஞர் கதை நேற்று தமிழகத்தில் முடிவடைந்து விட கவிக்கோவின் சீட்டும் கிழிகிறது. இந்தப் பதவியை கவிக்கோவுக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் கலைஞர் சில வேளை தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திக்கலாம்!
இஸ்லாமிய இலக்கியக் கழகம் கவிக்கோ, இதாயத்துல்லாஹ் அன்கோவின் பிடிக்குள் இருக்கிறது என்பது நீங்கள் தெரிந்ததே. தமிழ் நாடு தேர்தல் சமயத்தில் இவர்கள் இருவரும் கெப்டனும் கலைஞரைச் சந்தித்துப் படத்துக்குப் போஸ் கொடுக்கும் அழகைப் பாருங்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இதாயத்துல்லாஹ். காஙிகரஸ_ம் தமிழ் நாட்டில் படு தோல்வி. இப்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது இவ்வளவு காலமும் மிகச் சிறப்பாக மாநாடுகளை நடத்;தி வந்த இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் கதி என்ன? மாநாடுகளின் கதி என்ன? என்பதைப் பற்றித்தான். அரசியல்வாதிகளிடம் நெடுஞ்சாண் கிடையாக மனதளவில் வீழ்ந்து தஞ்சமடைவதால் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் கதி என்னவாகும் என்பதைப் பற்றித்தான்.
ஆறாம் முறை கலைஞர் முதல்வராகத் தெரிவாவார் என்று இவர்கள் தெரிவித்தார்களாம். என்னே படிப்பு... என்னே அனுபவம்... போதாததற்கு குப்பப்பிச்சை இக்பால் குழு நடத்தும் மாநாட்டுக்கும் கலைஞரிடம் ஆசியும் வாழ்த்தும் பெற்றிருக்கிறார்களாம்! செய்தியைப் படித்துப் பாருங்கள்... கலைஞர் வாழ்த்தையும் ஆசியையும் பெற்ற மலேசியா விழா இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை எங்கேயோ கொண்டு செல்லப் போகிறது...
தமிழ்மாநில உருது அகதெமிக்குள்ளும் கவிக்கோ இருக்கிறார். அதையும் இழுத்துக் கொண்டு கலைஞர் காலடியில் போட்டிருக்கிறார். அந்த அகதெமியின் கதி இதன் பிறகு என்னவாகும்? அரசியல் ரீதியாக அதற்கு ஒரு பலம் இருக்குமா என்று சிந்தியுங்கள்.பலம் தேவையில்லை, உறுதியாகச் செய்லபட அரச ஆதரவாவது கிடைக்குமா?
இலங்கையிலும் இலக்கியவாதிகள் லேபலில் உலாத்தும் சிலரும் கூட இப்படித்தான். எலி எதை எடுத்தாலும் எலி வளைக்குள் இழுத்துக் கொண்டு ஓடும் சுய நலம் போல எல்லாவற்றையும் ஒரு குறித்த அரசியல்வாதியிடம் இழுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். அதற்குக் காரணம் தமது இலக்கியத்தால் அவர்களால் நின்று பிடிக்க முடியாத வறுமைதான். குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் சென்றால் மட்டுமே தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கும் என்கிற நிலைதான் அது.
கவிக்கோதான் உருது மொழிப் பின்னணியில் வந்தவர் என்றால் இதாயத்துல்லாஹ் இதற்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பதன் நோக்கம் என்னவோ? படத்தைப் பாருங்கள்!
வக்புவாரியத் தலைவராக இல்லாமல் வெறும் கவிக்கோவாகத்தான் கவியரங்கில் கவிக்கோ குப்பப் பிச்சை முகம்மது இக்பாலின் விழாவில் தலைமை வகிக்கப் போகிறார். இந்த ஒருவருக்காகத்தான் விழாவில் கௌரவம் உள்ள படைப்பாளிகளும் இஸ்லாமிய இலக்கியத்துக்காக இதுகாலவரை உழைத்த முக்கியஸ்ர்களும் கலந்து கொள்ள முடியாத நிலையை குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழு செய்திருக்கிறது என்பது மெய் சிலிர்க்கும் செய்தி!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment