ஜேக் இரண்டு பெரிய சூட்கேஸ் பெட்டிகளைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு பஸ் நிலையத்துக்கு வந்தான். அவற்றைக் கீழே வைத்து விட்டு நிமிர்ந்த போது அவனருகே வந்த நபர் “நேரம் என்ன?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.
அவன் அலாக்காகக் கையை உயர்த்திக் கைக்டிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டு “ஆறு மணிக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன” என்றான்.
அவனிடம் நேரம் கேட்ட நபர், “அட... மிக அழகான கைக்கடிகாரமாக இருக்கிறதே!” என்றார்.
அவர் அப்படிச் சொன்னதும் ஜேக்கின் முகம் மலர்ந்தது.
“ம்... இது எனது கண்டு பிடிப்பு.... தெரியுமா.... இதற்காக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்... பார்க்கிறீர்களா....?” என்றவாறு கையை உயர்த்திக் கைக்கடிகாரத்தைக் காட்டியபடி “உலகத்தின் எல்லா நேரங்களையும் இதில் பார்க்கலாம். வெறும் கண்டங்கள் அல்ல... உலகத்தின் 86 பிராந்தியங்களின் சரியான நேரத்தை இதில் பார்க்க முடியும்” என்றான்.
பிறகு ஒரு பட்டனைத் தட்டினான்.... “த டைம் இஸ் எய்ட்டீன் டுவெல்வ்” என்றது கைக்கடிகாரம். மற்றொரு பட்டனைத் தட்டினான். அது ஜப்பான் பாஷையில் அப்போதய நேரத்தைச் சொன்னது. மிகத் தெளிவான டிஜிட்டல் நேரத்தையும் தெளிவான குரலையும் அக் கைக்கடிகாரம் வெளிப்படுத்திற்று. “எண்பத்தாறு மொழிகளில் இந்தக் கடிகாரம் நேரத்தைச் சொல்லும்” என்றான் ஜேக்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் அக்கடிகாரத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராகத் தென்பட்டார்.
“அது மட்டுமல்ல.... இதோ பாருங்கள்....” என்றவாறு ஒரு பட்டனைத் தட்டினான். நியுயோர்க் நகரத்தின் படம் திரையில் வந்தது. “இதோ... புள்ளியாக வந்து வந்து போகிறதே... இந்த இடத்தில்தான் இப்போது நாம் நிற்கிறோம்...” என்றவாறு அப்படத்தை ஸ_ம் செய்து காண்பித்தான்.
“இந்தக் கடிகாரத்தை நான் வாங்க வேண்டும்” என்றார் அந்த மனிதர்.
“ஓஹ்... இது இன்னும் விற்பனைக்குத் தயாராக இல்லை... இதை இன்னும் விரிவு படுத்தும் வேலைகள் உள்ளன” என்றான் ஜேக்.
“இதோ.... எஃப். எம். ரேடியோ கூட இருக்கிறது.... கிட்டத்தட்ட 125 மீற்றர் தூரத்தைக் கூட அளக்க முடியும். அதற்கான வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஆவணங்களையும் சேமித்துக் கணிளியுடன் இணைத்து பிரின் அவுட் எடுத்துக் கொள்ளலாம். இதில் முக்கியமாகச் சொல்ல வேண்டிய விசயம் என்னவென்றால்.... ஒலி வடிவில் 300 புத்தகங்களைச் சேமித்து வைக்க முடியும். இது வரைக்கும் 32 புத்தகங்களை மட்டும்தான் என்னால் சேமிக்க முடிந்துள்ளது...” என்றான்.
“எனக்கு இந்தக் கடிகாரம் வேண்டும்!” என்றார் அந்த மனிதர்.
“ஐயோ... உங்களுக்குப் புரியவில்லையே... இதன் வேலைகளை நான் இன்னும் முடிக்கவில்லை....!”
“அதெல்லாமில்லை... நான் ஆயிரம் டாலர்கள் தருவேன்!”
“நான் இது வரை செலவிட்ட தொகை எவ்வளவென்று தெரியுமா....”
“சரி ஐயாயிரம் டாலர்கள் தருகிறேன்....!”
“இன்னும் இதற்குரிய வேலை...
“சரி..... பேச்சை நிறுத்து... பதினையாயிரம் டாலர்கள் தருவேன்.... தருகிறாயா....?”
ஜேக் யோசித்தான். இதுவரை எட்டாயிரத்து ஐநூறு டாலர்களைச் செலவளித்திருக்கிறான்.... பதினையாயிரம் டாலர்கள் என்றால் அவன் நினைத்தவாறே முழுமையான ஒரு கைக்கடிகாரத்தை உருவாக்கி விடலாம் என்று நினைத்தான். அவன் யோசித்து முடிப்பதற்கிடையில் அந்த மனிதர் பதினையாயிரத்துக்கு ஒரு காசோலையை எழுதி அவனுக்கு முன்னால் நீட்டினார்.
ஜேக் கைக்கடிகாரத்தைக் கழற்றி அவரிடம் கொடுத்து விட்டுக் காசோலையைப் பெற்றுக் கொண்டான்.
கைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் நகர்ந்த மனிதரை ஜேக் அழைத்தான்.
வேகமாக நடந்த அவர் சுவாரசியமில்லாமல் அவனைத் திரும்பிப்பார்த்தார்.
அவன் அருகேயிருந்த இரண்டு பெரிய சூட்கேஸ் பெட்டிகளைச் சுட்டிக்காட்டிச் சொன்னான்....
“பற்றறிகளை விட்டு விட்டுப் போகிறீர்களே...!”
(நன்றி - இணையம்)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment