மின்னஞ்சல்
-----------------
ஒரு வண்ணத்துப் பூச்சி பல வண்ணத்துப் புள்ளிகளுடன் இறகு விரித்து உங்கள் முகம் நோக்கி வருகிற பாங்கில் விரிந்துள்ள உங்கள் முகப் புத்தகம் கண்டு மகிழ்ந்தேன்
முகப்பும் ஒரு படைப்புத்தான்
முகப் பூவும் ஒரு படைப் பூதான்
படைப்பை நேர்த்தியாக்கும் திறன் சிலருக்குத்தான் வரும்.
யாத்ரா வின் அதே அழகான வடிவமைப்பு பேஸ்புக் கிலும் படிந்துள்ளது
ஓய்வானத்தின் பின் ஒரு சிலரின் முகப் புக்குகளை சும்மா திறந்து பார்த்தேன் ...
அதுதான் நான் செய்த மிகப் பெரும் ..தவறு இவ் வருடத்தில்..
ஒருவரின் முகப் புக்கை திறக்கவே மனசு பக் பக் என்கிறது
இன்னொருவரின் புக்கினுள் பீ நாத்தம் சகிக்கல்ல.
மற்றுமொருவர் முக நூல் என்ற பெயரில் மூக்குப் பீ தோண்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரு பெண் எழுத்தாளர் இன்னொரு பெண்ணியல் கவிஞரோடு பின்னிக் கிடக்கிறார்.
இவையாவது பரவாய் இல்லை.. ஐயா
ஆனால் ... நேற்று ஒரு சிரேஷ்ட எழுத்தாளரின் முக நூல் திறந்தேன் .. பாருங்கள். ... அதாவது 2014 ஜூன் மாதம் எழுத ஆரம்பித்து ஜூலை மாதமே கவிதை தொகுதி போட்டுவிட்ட அந்த சிரேஸ்ட மூத்த எழுத்தாளர் தனது முக நூலில் எழுதி வருகிற சுய சரிதையில் வளரும் இளைய எழுத்தாளருக்கு சொல்லும் அறிவுரைகளை வாசித்து நமது குண்டியிலிருந்து குண்டிக்காய் வரை குலுங்கிச் சிரிக்கையில் .... போதாதென்று கீழே அவரது முதல் படைப்பாம் .....ன்னிப் ப (பு) டைப்பையும் காட்சிப் படுத்தி இருந்தார் பாருங்கள்... அடடா
என் பிறசரும் சீனியும் ஹாட்டும் எகிறிப் போய் ஆளே ஒரு சாதி ஆய்ட்டேன் ....
இனி பேஸ்புக் பக்கமே மௌஸ் வைக்கக் கூடாது என முடிவு கட்டினேன் ...
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கருத்துச் செறிவும் கனதியும் கண்ணுக்கு அழகாகவும் கண்ட உங்கள் நட்ட விழி முகநூல் ஒரு நிவாரண மாத்திரையாக இருந்தது.. அருந்திக் குணம் அடைந்தேன்.... அன்பான வாழ்த்துக்கள் ... இனி தொடர்வேன் ...
தீரன் ஆர் எம் நௌஷாத்
09.12.2014
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment