Sunday, May 17, 2009

999ம் வருடம் ஆகஸ்ட்டில் எனது முதலாவது கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. அந்த வேளையில் அது ஓர் அழகான அமைப்பில் வெளிவந்துள்ளதாகப் பலரும் சொன்ன போது சந்தோஷமாகத்தான் இருந்தது. அட்டைப் படத்தைத் தேர்ந்து தந்த ஷகீபையும் அதை அச்சிட்டுத் தந்த ஜௌஸகியையும் அவ்வேளைகளில் நன்றியோடு என் மனம்; நினைத்துக் கொள்ளும். கல்யாணத் தடபுடலில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு அழைப்பு விடுக்க மறந்து விடுவது போல எனக்கும் நடந்துவிட்டது. ‘கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டு விடு’ என்று, காணுந்தோறெல்லாம் அன்புடன் நச்சாpத்துக்கொண்டிருந்த நண்பன் மேமன் கவியினதும் மணிக்கவிதை எழுதத் தொடங்கிய போது போஸ்ட் கார்டில் நட்பு வளா;த்த நண்பன் ஸ்ரீதர் பிச்சையப்பாவினதும் சந்திக்கும் போதெல்லாம் பிளேன்hpயோடு கவிதைகள் பற்றிக் கதைத்த எம்.எச்.ஷம்ஸினதும் பெயர்களை நூலில் குறிப்பிடத் தவறிவிட்டேன். உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அடுத்த கவிதை நூலை வெளியிடும் போது பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். கவிதை நூலை வெளியிடுவதென்பது ஒரு பெண்ணின் தலைப் பிரசவம் போல. கவிதைப் புத்தகம் என்றில்லை’ புத்தகம் வெளியிட்ட எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். கவிதைப் புத்தகம் என்றால் அவஸ்தை சற்று அதிகமாகத்தான் இருக்கும். தனது நூலை வெளியிடும் தினத்தன்று கவிஞர்களுக்குக் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். பிறகுதான் பாரம் அழுத்தத் தொடங்கும். 1987, 88 காலகட்டத்திலேயே ஒரு தொகுதிக்கான கவிதைகள் என்னிடமிருந்தன. நூலை வெளியிடுவது சம்பந்தமான எனது முதலாவது ஏமாற்றத்தை நான் புத்தகத்தில் எழுதவில்லை. யாரையாவது சஞ்சலப்படுத்தும் என்றால் தவிர்த்துக்கொள்வது எல்லா வகையிலும் உகந்தது. புத்தகம் என்பது ஆகக் குறைந்தது அரை நூற்றாண்டுக்காவது நின்று நிலைக்கக்கூடியது. குப்பை என்று ஒரு நூல் பலராலும் புறக்கணிக்கப்பட்டாலும்கூட ஏதாவது ஒரு மூலையில் கிடந்து யாருடையதாவது வாசிப்புக்கு உட்படவே செய்யும். நூல் வெளியிடப் போகிறேன் என்று யாராவது என்னிடம் சொன்னால் அவசரமோ பதட்டமோ இன்றி மிகுந்த நிதானத்துடன் வேலைகளில் இறங்குமாறு நான் கேட்டுக்கொள்வதுண்டு. இப்படிப் பக்கம் பக்கமாக நான் பாh;த்துப் பாh;த்து இழைத்ததுதான் எனது புத்தகம். எனக்கு சகோதாpகள் இருவர். இருவருக்கும் நான்கு ஆண் குழந்தைகள். இளைய சகோதாpக்கு மூவரும் ஆண்கள். மூத்த சகோதாpக்கு ஒருவன். இளைய சகோதரியின் மூத்த பையனான அப்ஸல் அலியும் மூத்த சகோதாpயின் பையனான அப்னாஸ் அலியும் கிட்டத்தட்ட ஒரே வயதொத்தவர்ள். விளையாடுவது, பாடசாலை செல்வது, டியூஷன் வகுப்புப் போவதெல்லாம் ஒன்றாகத்தான். இரண்டாம் ஆண்டில் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். எனது கவிதைப் புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு இருவரும் ஒருமுறை இழுபறிபட்டதாக அறிந்தேன். ‘இது மாமாவின் புத்தகம் தா...’ என்று ஒருவன் சொல்ல, ‘அவர் எனக்கும் மாமாதான்’ என்று மற்றவன் சொல்ல, கொஞ்ச நேரம் தாக்;கமும் சண்டையும் இடம்பெற்றுக் கடைசியில் அப்னாஸ் அலி வெற்றியடைந்து, அதை எடுத்துக் கொண்டு சென்று தங்கள் வீட்டுச் சமையலறைக்குள் வைத்துக் கொண்டான். அப்னாஸ் அலி - காற்று! பூமியில் அவன் நடந்து போவதைக் காண்பது அhpது. ஓட்டத்திலேயே எல்லாக் காhpயங்களையும் பாh;ப்பான். என்னை எதிர்கொள்ள மிகுந்த சங்கோஜப்படுவான். இவ்வளவு காலத்துக்கும் நேரெதிரே என்னுடன் கதைத்திருப்பது ஓரிரு வார்த்தைகள் தாம். அவற்றில் நான் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவன் தந்த விடைகளே அதிகம். ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று பெருநாளைக்கு என்று சுடப்பட்ட நான்கைந்து முறுக்குகளை அப்னாஸ் அலி கைகளில் வைத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரெனச் சமையலறைக்குள் நுழைந்தான். எதையோ அவசர அவசரமாகத் தேடினான். அவனது கண்ணில் பட்டது எனது கவிதை நூல். விhpத்து ஒரு தாளைச் ச்சர்... எனக் கிழித்துக் கைகளிலிருந்த முறுக்குகளை அதில் வைத்துச் சுற்றினான்’ காற்றாய்ப் பறந்து போனான்! இதனை அவதானித்துக்கொண்டிருந்த என் மனைவி, ஊhpலிருந்து கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த பயணத்தில் இதனை எனக்குச் சொன்ன போது முதலில் சிரிப்பு வந்தது. அப்னாஸ் அலியின் செயல் குறித்துப் பிறகு சிந்தித்துப் பாh;த்தேன். அவனுடைய வயதுக்குhpய சிந்தனையில் அவனுடைய அப்போதைய பிரச்சினை முறுக்குகளைச் சுற்றுவதற்கு ஒரு தாள் வேண்டும் என்பதே. எந்தப் புத்தகம் அவ்விடத்தில் இருந்தாலும் அவன் அதைக் கிழித்துத்தான் இருப்பான் என்ற முடிவுக்கு நான் வந்தேன். சிறுவா;கள்தானே, அப்படித்தான் நடந்து கொள்வாh;கள்’ இதையெல்லாம் எழுதுவது அவசியமா? என்று ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம். கவிதைகள் பற்றிய விமா;சனங்களைச் செய்வோர் அவ்வப்போது அப்னாஸ் அலி போன்றும் நடந்து கொள்கிறார;கள் என்பது அக்கேள்விக்கான எனது பதிலாகும். தீர்க்க வர்;ணம்
19.08.2007