டாக்டர் உள்ளே வந்த தம்பதியரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தபடி தiiயை அசைத்து அமரும்படி சைகை செய்தார். டாக்டருக்கு அருகில் நோயாளி அமரும் கதிரையில் கணவர் அமர சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த கதிரையில் மனைவி அமர்ந்தார்.
டாக்டர்: என்ன பிரச்சினை?
நோயாளி: ......... .............
நோயாளியின் மனைவி:. நான் சொல்கிறேன் டாக்டர்
டாக்: சொல்லுங்கள்
நோ - ம: இரண்டு வாரங்களாக தொடர்ந்து பழைய பத்திரிகைகளைப் புரட்டி வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் டாக்டர். இரவில் படுக்ககையிலிருந்து திடீரென எழுந்தும் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
டாக்: வாசிப்பது நல்ல பழக்கம்தானே... நிறைய வாசிப்பாரோ?
நோ - ம: என்ன டொக்டர்... ஒரே பத்திரிகையை எத்தனை நாளைக்குப் படிப்பது? கடந்த இரண்டு வாரங்களாக இரண்டே இரண்டு பத்திரிகைகளைப் புரட்டிப் புரட்டி வெறித்துப் பார்க்கிறார்.
