Thursday, May 12, 2011

ஒசாமா நானாவும் ஒபாமா தம்பியும்!

தொலைபேசி சிணுங்குகிறது....



ஹலோ... ஒபாமா தம்பியா....

ஓஹ்... யாரு... ஒசாமா நானாவா... ஹலோ நானா... நல்ல்லா இருக்கீங்களா...

எனக்கென்னடாம்பி குறை... நான் நல்லாயிருக்கேன்... அது சரி இப்ப ரொம்பக் குளுகுளுன்னு இருக்குமே...

ஹி.... ஹி.....

அப்போ இந்த முறை எலக்ஷன்ல வெண்டுறுவியாடாம்பி.....

அப்பிடித்தான் நானா நெனக்கேன்....

அல்லாஹ் காப்பாத்தட்டும்... அதுல இருந்துதான் என்ன செய்யப் போறீங்க.. சும்மா பொம்ம மாதிரி தலையாட்டிக்கிட்டு இருக்கிறதத் தவிர..

சும்மா பகிடி பண்ணாதிங்க நானா....

அது சரி என்னப் போட்டுத்தள்ளின கேஸ்ல ஆயிரக்கணக்கான ஓட்டை இருக்குதுடாம்பி...

தெரியும் நானா....

அந்த போட்டோ ஷொப் வேலய எனக்கிட்ட பாரந் தந்திருந்தா நம்ம பயலுகளப் போட்டு இன்னும் நல்லாச் செய்து தந்திருப்பனே...

இவனுங்க ஒண்ணுங் கேக்க மாட்டேனுங்கிறாங்க நானா...

ஒங்களப் பாத்தா பாவமா இருக்கு. அது சரி என்னைப் போட்டுத்தள்ள வந்த ஹெலியில ஒண்ணு விழுந்து நொருங்கிச்சாமே... ஒருத்தனும் சாகல்லயா... ஒடஞ்ச ஹெலியிட துண்டு துணியையெல்லாம் லொறியில ஏத்திக்கிட்டுப் போறதப் பார்த்தேன்... அதப்பத்தி ஒருத்தரும் பேசல்ல பாத்தீங்களா?

ஓம் நானா... நீங்க வேற ஆளக்கீளப் போட்டு விசயத்தை வெளியே இழுத்து விடாதீங்க.. இப்பவே குடல் வெளியே வாற மாதிரி ஒவ்வொருத்தன் குடையுற குடைச்சல் தாங்க முடியல்ல...

இன்னும் ஒலகத்துல 50 வீதமான ஆட்களாவது நம்பல்ல தெரியுமா...

ம்... அத இவனுங்களுக்குச் சொன்னன். அது அப்பிடித்தான்கிறானுங்க.. கதைக்கிறவன் கதைக்கிறதுதான்... நம்ம இஷ்டத்துக்குக் கத விடுறதுதான்கிறானுங்க...

என்னைப் போட்டுத் தள்ளியாச்சு... இனி என்னடாம்பி செய்யப் போறீங்க...

ஏன்... ஒங்கட மகன் ஹம்ஸா தப்பி ஓடிட்டானே... அவனை வச்சி இன்னும் ஒரு பத்து வருஷம் படங் காட்டலாம்...

ஹம்ஸா எங்கயிருக்கான்னு தெரியுமா....

எங்கயிருந்தாலும் விடமாட்டானுங்க நானா...

கிழிச்சீங்க.... சீனாவுக்கு அனுப்பியிருக்கேன்... ஏலுமெண்டா புடிச்சுக்குங்க...

ஐயையோ....

போனீங்களோ.... புடுக்கோட அறுத்துவிடுவான் சீனாக் காரன்...! அப்போ கடாபி... பஷர்... நெஜாத் .... கதையெல்லாம்....

இனிமேல் மெகா சீரியல்தான்....

அது சரி... அந்த அசான்ஜேப் பயலுக்கிட்ட நெருங்குற மாதிரி தெரியல்லியே... ஏன் பயந்துட்டானுங்களா... ஒங்க ஆட்கள்...?

ஒங்களுக்கு இந்த விசயமெல்லாம் தெரியாமலா இரிக்கி... சும்மா என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கீங்க.... அது சரி மதினிமாரெல்லாம் சுகமா நானா....

பாக்கிஸ்தான் பத்திரமா வச்சிருக்கு... என்ன திடீருண்டு மதினிமார் ஞாபகம் வந்திருக்கு...? மிச்சேல் அங்கதானே இருக்கா...

ஹி...ஹி..... ஹி.....

அதெல்லாஞ் சரி... ரெட்டைக் கோபுரக் கேஸ்ல இன்னும் ஒங்க நாட்டிலேயே சந்தேகம் நிலவுதுல்ல... பென்டகனைத் தாக்கினது பிளைட் இல்ல... மிஸைல்தான்னு யூடியூபிலயே காட்டுறான்... பென்சில்வேனியாவுக்கு மேலால பறந்த பிளைட்டச் சுட்டதே அமெரிக்கப் படைதான்னு சொல்றானுங்க... இப்பிடியெல்லாம் இருக்கும் போது ஒங்காளுங்களுக்குக் கொஞ்சமாவது வெட்கம் வாறல்லியாடாம்பி...

பேசி வேலயில்ல நானா.... நானே இதக் கேட்டன்னு வச்சுக்குங்க... என்னைப் போட்டுத் தள்ளிருவானுங்க... ஏதோ அதிர்ஷ்டத்துல இந்த இடத்துக்கு வந்துட்டேன்... ஏற்கனவே இருந்தானே அந்தாளு.... அவனப் போல இன்னொரு லூசு எனக்குப் பதிலா வந்திருந்தான்னு வச்சுக்குங்க... மூன்றாம் ஒலக மகாயுத்தத்தை தொடங்கி... இன்னக்கி என்ன ஆகியிருக்குமோ தெரியா....

அந்தாள்ற வேலகளைப் பாரத்துச் சிரிச்சிச் சிரிச்சே நான் கனகாலமா வயித்து வலியில கஷ்டப்பட்டிருக்கேன்...

வச்சிரட்டா நானா... மன்னிச்சுங்க... ஒடம்பப் பாத்துக்குங்க...

அதெல்லாம் நாங்க பார்த்துக்குவம்... நீங்க பத்திரமா இருந்துக்குங்க...


(அமெரிக்கனுக்கு மட்டும்தான் கதை விடத் தெரியுமா... எங்களுக்குத் தெரியாதா...! எல்லாம் ஒரு கற்பனைதான்!)




இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Mohamed Faaique said...

சூப்பர் சார்... இண்ட்லி திரட்டியில் இணைக்கலாமே!!! இன்னும் நிறைய வாசகர்களை போய் சேரும்.