ஹலோ....
ஹலோ.....
நான் அஷ்ரஃப் சிஹாப்தீன் பேசுறேன்...
ஆ.... சுகமா இருக்கீங்களா....
ம்... இருக்கேன்... நான் எடுத்தது என்னன்டா... நம்ம புதுப்புத்தகம் ஒன்னு வருகுது...
ஓ... தெரியுமே... பார்த்தேன்...
எங்க பார்த்தீங்க....
ஏன் ஃபேஸ் புக்குல போட்டிருந்தீங்க...
சரி... நீங்களும் வந்தா நல்லா இருக்கும்... இரண்டு மணி நேரத்துல வெளியீட்ட முடிச்சிரலாம்னு இருக்கன்.
அது நல்லது...
கட்டாயம் எதிர் பார்க்கிறேன்... வந்துருங்க....
சரி.... அது எத்தினையாம் தேதி?
28ம் திகதி... பின்னேரம்... கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில்...
ஓகே... ஓகே....
சரி ... வச்சிடவா...
கொஞ்சம் இருங்க... என்ன புத்தகம்.. அது?
கதைப் புத்தகம்.... உண்மைக்கதைகள்!
ஓஹ்.... எத்தினை பக்கம்?
25 கதைகள்... கிட்டத்தட்ட 250 பக்கம்....
அடே... பெரிய புத்தகந்தான்... தொடர்ந்து எழுதிக்கிட்டே இருக்கீங்க...
இலக்கியவாதிகளுக்கு படிக்காம எழுதாம இருக்கேலாதானே.....
எத்தினை இன்விடேசன் அடிச்சிங்க...?
இருநூறு மட்டுல... 150 போஸ்ட் பண்ணிட்டேன்... அநேகமா எல்லாரும் வாறதாச் சொல்லியிருக்காங்க...
புத்தகத்துட தலைப்பைச் சொல்லல்லியே நீங்க...
அதான் ஃபேஸ் புக்கில பார்த்திருப்பீங்களே....
பார்த்தன்தான்... மறந்து போச்சி... ஹி.... ஹி....
ஒரு குடம் கண்ணீர்.......
அந்த மாதிரித் தலைப்பு! அட்டைப்படம் நல்லா இருக்கு.... நீங்க... நல்லா எழுதுவீங்கதானே...... நீங்க அழைச்சி வராம உடுவாங்களா...
தாங்ஸ்... வச்சிரவா.....
ஆ.... ஹலோ.... ஹலோ...... ஹல.. ஹலோ...
ஓம்... ஓம்..... என்ன?
ஒரு முக்கியமான விசயம். இப்பதான் ஞாபகம் வந்துச்சி....
என்ன.......?
சனிக்கிழம பின்னேரம்தானே விழா....
ஓம்.... ஓம்....
வெரி சொறி.... மகனை டொக்டருக்கிட்ட காட்ட அப்பொயின்ட்மன் வச்சது இப்பதான் ஞாபகம் வருகுது...!
...........................................
ஹலோ.... ஹலோ.......................... ஹல... ஹல.... ஹலோ............
சலார் என்று ஒரு சத்தம்... தடார் என்று ஒரு சத்தம்.....
ஒன்று போன் விழுந்து சிதறியது... மற்றது நான் விழுந்தது!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2 comments:
ஹலோ அஷ்ரப் சேர் நான் யாழிலிருந்து யோகேஷ்.
தொலைவில் இருக்கும் எமக்கு இருக்கும் ஆர்வம் கூட அருகில் இருப்பவகளுக்கு இல்லை போலும் (புத்தக வெளியீட்டுக்கு வருகை தருவது தொடர்பாக..)
அது இருக்கட்டும் சேர் யாழ் பூபாலசிங்கத்தில் உங்களது புத்தகங்களை விசாரித்தால் கையை விரிக்கிறர்கள்...?
உங்கள் புத்தகவெளியீடு சிறப்பாக நடக்க
என்னோட பிரார்த்தனைகள்..! உங்கள் எழுத்து வளம் மேலும் மேலும் வாழ்க !
வளர்க !
Post a Comment