Sunday, May 29, 2011

தண்டனை

பகுதி - 1

மௌனத்தின் புன்னகை என்ற நிகழ்ச்சித் தொடரில் இடம் பெற்ற மற்றொரு நாடகம் இது. இந் நாடகத்தின் தலைப்பு - தண்டனை.

பகுதி - 2

ஏனைய பதிவுகளைப் படிப்பதில் உள்ள ஆர்வத்தை நான் முதலில் வலையேற்றம் செய்த நாடகத்தைக் கேட்பதில் எனது தளத்துக்கு வரும் வாசகர்கள் காட்டவில்லை என்று உணரக்கூடியதாக இருக்கிறது. அநேகர் இந்தப் பாத்திரங்களில் தம்மைக் கண்டு நாணுகிறார்களா என்று ஒரு சந்தேகமும் எனக்குண்டு. அரை மணிநேரம் மினக்கெட்டுக் கேட்க அவர்களுக்கு அவகாசம் இல்லையோ என்றும் நினைக்கிறேன்.

பகுதி - 3

நாடகத்தில் சினிமா நடிகைகளை நடிக்கவிட்டால் ஒரு வேளை ஆர்வத்துடன் கேட்டுப் பின்னூட்டம் போடுவாய்ங்களோ.....?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

7 comments:

செல்வராஜா மதுரகன் said...

பின்னூட்டம் இட்டால் மட்டும்தான் பார்த்ததாக அர்த்தம் இல்லையே.. ஐயா... youtube வலைத்தளத்தில் சென்று உங்கள் வீடியோவை எத்தனை பேர் பார்வையிட்டனர் என்று அறியலாமே...

Shaifa Begum said...

மனசெல்லாம் பாரமாக இருக்கிறது..இப்படி அநியாயம் பண்றாங்க..?டொக்டர் மருமகன் என் கைல மாட்டினா சங்கு தான்..கதை என்பதையும் தாண்டி. அவ்வளவு கோபம் வருகிறது.
அழகு நிரந்தரம் அல்ல. அந்த அறிவுகெட்ட டொக்டருக்கு இது கூட தெரியாதா?. முதுகெலும்பு இல்லாத ஆம்பளைக்கு வாழ்கைப்பட்டா இப்படிதான்..கிழக்கு மாகாணத்தில் இன்னுமே தீராத , தீர்க்க முடியாத ஒரு தொற்று வியாதி தான் இந்த சீதனம் என்ற சீர்கேடு. பிள்ளைகளை விற்று வயிறு வளர்க்கும் பெற்றோர் ஒரு பக்கம்.. விருப்பம் இல்லாமலும் திருமண பந்தத்திற்குள் இணைக்கக்கப்படும் முதுகெலும்பு இல்லாத ஆண்மக்கள் மறுப்க்கம்..நடுவில் அல்லல் படும் அப்பாவி பெண்கள்.. இந்த விசயத்தில் ஏன் ஆண்மக்கள் தெளிவை பெறாமல் இருக்கிறார்கள்.. வாழ்க்கை வியாபாரம் இல்லை என்பதை இவர்கள் எப்போ உணரமாட்டார்களா..?

கதா பாத்திரங்களைப் பொறுத்தமடடில் எல்லோருமே கலக்கல் நடிப்பு தான்..ஸாலி காகா நடிப்பு
மகளின்ட இந்த நிலை கண்டு துடிக்கும் இடங்களில் ஒரு தந்தையின் ஞாயமான கோபம்..
ஞாயமான அவஸ்தை..இவை யாவும் இவரின் நடிப்பில்...டொக்டரின் தந்தை..ஒர கொடூரமான பேராசை மனுசன். மருமகளைக் கலட்டி விடுவதில் அவர் காட்டும் ஆர்வம் அக்கரை அப்பப்பா....மாமி கணவனுக்கும், மகனுக்கும் இடையில் ரெண்டுங்கெட்டான் நிலையில்.. அபாரமான .. அனுபவம் வாய்ந்த நடிப்பால் மனதைத் தொட்டுக் கொண்டார்..டொக்டர் பற்றி பேசவே எனக்கு இஸ்டம் இல்ல.. ” ””முகத்துல முழிச்சா 30 நாளைக்கு சோறு தண்ணி கிடைக்கா மாட்டா ..” சாதாரணமாக சொல்றார்.. கதை என்றால் கூட இந்த வார்த்ததையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..அவர் வில்லன் ரூபத்தில் வந்தாலும் அசத்தலான நடிப்பு..

ரிஹானா பாவம் ஒரு அப்பாவி டீச்சர்...சொத்தையும் தானமாக கொடுத்துவிட்டு இபபடி இருந்தா வேலைக்காவாது. நடிப்பு பிடித்துக் கொண்டது.. அதேநேரம் இன்னும் கொஞ்சம் உண்ர்ச்சிகளைக்
காட்டியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.

கதை ஆசிரியை அஸ்மியா பேகம் ஒரு கலக்கல் கதை மண்வாசனையோடு சொன்னதில் மகிழ்ச்சி..கிழக்கு மாகாண மண்வாசனை அப்படியே மூக்கை துளைக்குது.. அதுவும் பேச்சு வாக்கில் என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்துவோமா.. எல்லாமே இந்த கதைக்குள் இருந்தது போல.. ஒலகண்டம்..ச்தராதி,அட்டக்கறுப்பு,... ஞாயத்த பேச டிகிரி தேவையில்ல.
நடைமுறை வாழ்க்கையோடு இணைந்த கரு.. மிகப் பிடித்துக் கொண்டது. ஆனால் கதை முடிவில் எனக்கு திருப்பி இல்லை.. ஸாலி காகா வுக்கு ஏன் தண்டனை கொடுத்தீர்கள்..? இந்த தண்டனை மூலம் ரிஹானா இன்னும் நிர்க்கதி ஆகிறார் இல்லையா..? தண்டனை சரியாகக் கொடுப்பதேன்றால் வாப்பாவுக்கும் மகனுக்கும் தான் கொடுக்க வேண்டும்.. வயசான காலத்தில் பஸ்கு செய்தால் என்ன ..? வாப்பாவும் மகனும் ஜாலியாகத் தான் இருக்க போகிறார்கள்..இது இவர்களுக்கு தண்டனை இல்லை Award. எனக்கு இன்னொரு சந்தேகம்
சீதனச் சொத்துக்கள் என்ன ஆச்சு..? திருப்பிக் கொடு்த்தார்களா..?

நெறியமைப்பு, ஒலியமைப்பு எல்லாம் மிக துல்லியமாகவே இருந்தது.தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்..

”தண்டனை” நாடகத்தை எங்களுக்காக இணையத்தினுள் பதிவேற்றிய சேர் உங்களுக்கும் ந்ன்றிகள்...இன்னுத் எதிர்பார்க்கிறோம்
யாரையும் என் எழுத்துக்கள் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பை வேண்டியபடி....

Shaifa Begum

Shaifa Begum said...

நாடகத்தில் சினிமா நடிகைகளை நடிக்கவிட்டால் ஒரு வேளை ஆர்வத்துடன் கேட்டுப் பின்னூட்டம் போடுவாய்ங்களோ.....?"

கண்டிப்பாக பின்னூட்டம் போட மாட்டார்கள்..ஏன் என்று கேட்கிறீங்களா..?
அது வந்து சேர்.. இவங்களுக்கு Audio இல் நடிகைகள் பேசினாலும் workout ஆகாது.. Video தான். வேணும்..
ஒரு Change க்கு ஒரு குத்து டான்ஸ் போட்டு பாருங்களே. இல்லன்னனா நமீதா மூஞ்சை கொஞசம் காட்டி பாருங்களே..நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு பின்னூட்டம் போடுவார்கள்..... உங்கள் தளத்துக்கு கூட்டம் அலைமோதி,..Daily வருகிற எங்களுக்கு கூட Seat கிடைக்காது.இதுதான் உலகம்.. நம்மவர்களின் அருமை இவங்களுக்கு எப்பவும் தெரிவதில்லை. எட்டடாத விசயங்களுக்கு கொட்டாவி விட்டு நாளையும் பொழுதையும் கழிக்கிறது..

Unknown said...

அருமையான நாடகம்.நெஞ்சு தொடும் சிந்திக்க வைக்கும் உண்மைகள்.
நன்றிகள்

Shaifa Begum said...

மதுரன் செல்வராஜா... இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவேண்டும்..
நீங்கள் சொல்வது போல Youtube இல் போய் பார்க்கலாம் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று.
ஆனால்,ஒரு படைப்பாளிக்கு பார்ப்பவர் எண்ணிக்கை முக்கியம் அல்ல. பார்ப்பவர்கள் என்ன Feedback கொடுக்கிறார்கள் என்பது தான் முக்கியம்..அது நல்லதாக இருக்கலாம்,கெட்டதாக இருக்கலாம்.. ஒரு வார்த்தையில் குறிப்பை எழுதிவிட்டு போவது தானே முறை.

இவள் said...

mika arumaiyaaka irunthathu.. islaamiya samookaththil irukkum enakku therintha natpukalin vaazakiyil nadantha vishayangalai pirathipalippathaaka irunthathu.. aththudan naadakththil pesiya ellorum olivadiyil kaatchipaduthi irukindranar. en thozhi sharmiyin voisum rompa poruthamkaa irunthathu... ariya thanthamaikku mikka nandri..

Shaifa Begum said...

சகோதரி இவள்.... அடிக்கடி Visit பண்ணுங்கோ.. உங்க தோழியையும் கூட்டிட்டு வாங்கோ...