Showing posts with label சாரதா என்றொரு சஞ்சிகை. Show all posts
Showing posts with label சாரதா என்றொரு சஞ்சிகை. Show all posts

Friday, January 4, 2013

அந்த ஒரு வார்த்தை!



“சாரதா என்றொரு சஞ்சிகை” என்ற தலைப்பில் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் களம் நிகழ்வில் இன்று உரை நிகழ்த்தினேன்.

1993 மார்ச் மாதம் இச்சஞ்சிகையின் முதலாவது இதழ் வந்திருக்கிறது. 1994ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்த எட்டு இதழ்கள் என்வசம் உள்ளன. 1999ம் ஆண்டு தி. நகர் “முன்றில்” கடையில் இவற்றை வாங்கியிருந்தேன். இச்சஞ்சிகை இப்போது வருகிறதா இல்லையா என்று தெரியவில்லை.

ஆசரியர், உரிமையாளர், அச்சிட்டு வெளியிடுபவர் என்று கோ. பாஸ்கரன் என்பவர் பெயர் சஞசிகையில் உள்ளது.


20ம் நூற்றாண்டின் இணையற்ற ஒரு சிறுகதை ஆசிரியரைப் பெற்ற தமிழ் ஏன் இலக்கிய வறுமையில் கிடக்கிறது என்று வல்லிக்கண்ணன் அவர்களிடம் ஒரு கேள்வி.

ஒரு நாட்டு மக்களின் தகுதிக்கு ஏற்பத்தான் தரமான ஒரு கவிஞன் தோன்றுவான் - என்று வால்ட் விட்மன் கூறியிருக்கிறார். அதே போல் நாட்டு மக்களின் இலக்கிய தாகத்துக்கும் இலக்கிய உணர்வுக்கும் தக்கபடிதான் நல்ல இலக்கியங்களும் அவற்றைப் படைப்பவர்களும் தோன்றி வளர முடியும். தமிழ்நாட்டில் இலக்கிய உணர்வு மிகக் குறைவாகவே இருக்கிறது. நல்ல இலக்கியத்தை நாடுவோர் மிகக்குறைவு. பொழுதுபோக்குக்காகவும் கிளுகிளுப்புக்காகவும் கதை, கவிதைகளை படிக்கிற போக்கு மிக அதிகம். அதற்குத் தக்கபடிதான் எழுத்துக்களும் தோன்றி வளருகின்றன என்று பதில் சொல்லியிருந்தார்.

பி.நரேந்திர நாத் என்பவரின் கவிதையொன்று.

இப்படிச் சிந்திப்பவரோடு
ஜாக்கிரதையாகப் பழகுங்கள்
வானத்தில் உயரே ஒரு மாடமாளிகை
அதில் ஒரு பொன்னூஞ்சல்
அதில் நான், என் மனைவி, மக்கள்
நாங்கள் மட்டும்.
எங்களுக்கு ஒரு அட்சய பாத்திரம்
ரேடியோவும் டீவியும் சினிமா பார்க்கும்
சாதனங்களும் வேண்டும்
ஒலி, ஒளி நாடாக்கள் வேண்டும்
எனக்குப் பட்டு வேட்டியும்
அங்க வஸ்திரமும் வேண்டும்
என் மனைவிக்கு
காஞசிப் பட்டுப் புடவையும்
வைர மாலையும் வேண்டும்
என் குழந்தைகளுக்குப்
பகட்டான துணிமணிகள் வேண்டும்
இது ம்டும் போதாது
எங்களைப் பொறாமையோடு நோக்க
வானத்தின் கீழ் பெரும்
மக்கள் கூட்டமும் வேண்டும்.