அங்கம் - 01
(யாவும் கற்பனை)
ஒரு பெரிய காட்டில் ஒரு கடுவன் பூனை வாழ்ந்த வந்துச்சாம். அந்தக் கடுவனுக்கு எப்போதும் அங்குள்ள பூனைகளில் தான்தான் சிறந்தவன் என்று மற்றவர்களை ஏமாற்றி நம்ப வைத்துக் கொண்டு வந்ததாம். காலம் போகப் போக புகழ் மங்கிவிடும் என்பதை உணர்ந்த அந்தக் கடுவன் பூனை உலகத்தில் எல்லாப் பூனைகளையும் தன் காலடிக்குக் கொண்டு வந்து தனது பெருமையைப் பறைசாற்றும் ஆசை வந்ததாம்.
கடுவன் பூனை காலாதிகாலமாகக் கஞ்சப் பூனை. ஊரார் கோழியறுத்து உம்மா பெயரில் கத்தமோதும் பூனை. தனது பணமும் செலவழியாமல் தன் புகழையும் பரப்ப கடுவன் ஒரு திட்டம் தீட்டியது.
ஒவ்வொரு இனத்திலுமுள்ள தலைமைப் பூனைகளை அழைத்து நாம் நமது கௌரவத்தை வளர்க்க வேண்டும். உலகத்திலுள்ள அத்தனை பூனைகளும் நம்மை வியந்து பார்க்க வேண்டும். இதன் மூலம் நமது காட்டின் பெருமை பேசப்படும் என்று சொல்லி அதற்கான திட்டத்தையும் சொன்னது.
நாம் கொஞ்சம் பெருச்சாளிகளை அடித்து எல்லா நாடுகளிலும் உள்ள முள்ளுப் பூனை, கள்ளப் பூனை, நொள்ளப் பூனை, நொண்டிப் பூனை, சண்டிப் பூனை, சாம்பல் பூனை, வெள்ளப் பூனை, வெட்டிப் பூனை எல்லாற்றையும் நமது காலடிக்கு அழைத்து சிங்கத்தையும் பிரதம அதிதியாக அழைத்து ஒரு விருந்து வைப்போம் என்று சொன்னதாம்.
தமது கோவணத்தை உருவித் தலைப்பாகை கட்ட நினைக்கும் கடுவன் பூனையின் கள்ளத்தனம் தெரியாமல் அந்தப் பூனைகள் காசாக் கொட்டிச்சிதுங்களாம்.
இந்த விருந்துக்கு வாங்கோ... பெருச்சாளியடிச்சி விருந்துவைக்கிறோம் என்று எல்லாக் காடுகளுக்கும் அழைப்புப் போய்ச்சுதாம்.
ஆற்றுக்கு அப்பால் உள்ள சின்னக் காட்டுக்குள்ள இருக்கும் பூனைகள் கூடி பத்துப் பேர் கொண்ட ஒரு குழுவைப் போட்டு பயணத்துக்கு ஏற்பாடு பண்ணிச்சுதுங்களாம். அதிகம் பேர் போய்க் கலந்துக்கிட்டா நமது காட்டுக்கும் பெருமைதானே என்று சொல்லி குழுவுல உள்ளவங்க மணியடிச்சி ஆள் சேர்த்தாங்களாம். நிறையப் பேர் சேர்ந்தால் நாமும் அந்தக் காசுக்குள்ளேயே இலவசமாய்ப் போய் வந்துடலாம் என்று பெரிய காட்டுக் கடுவனைப் போலவே திட்டம் போட்டு இயங்கினாங்களாம்.
மிச்ச நாளைக்குப் பிறகு இப்படியொரு வாய்ப்பு வந்ததில் மகிழ்ந்து வந்து வந்து தங்கள்; பெயரைப் பதிஞ்சுதுங்களாம். அதுக்குப் பிறகு ஆற்;றைக் கடக்கிறதுன்னா முப்பத்தைஞ்சு சதம் வேணும். எல்லாரும் பணத்தைத் தாங்க என்று கேட்டாங்களாம்.
விசயம் தெரிஞ்சவங்க... குறைஞ்ச விலைக்கு ஆற்றைக் கடந்து ஏற்றிக் கொண்டு போகும் எருமை மாடுகள் இருக்குதே... 20 சதத்துக்கு ஏற்றிக் கொண்டு போகும் எருமைகள் இருக்குதே... எதுக்கு இவ்வளவு காசு கேக்குறீங்க.. என்று ஆட்சேபனை தெரிவிச்சுதுங்களாம். விசயம் சிக்கலாகிடும் என்று நினைச்சு அப்புறம் நாங்க எருமை மாடுகளோட பேசிக்கிட்டிருக்கோம்... இன்னும் கொஞ்சம் குறைக்கலாம் போல தெரியுதுன்னு சொன்னாங்களாம்.
இப்பிடிச் சொல்லியே காலம் கடத்திக்கிட்டு வந்து கடைசி நேரம் 27 சதம் குடுத்திடுங்க, எல்லாரையும் கூட்டிக்கிட்டுப் போறோம் என்று சொன்னாங்களாம்.
குழுவுல உள்ள கொஞ்சப் பேர் கூடி, இதப்பாருங்க.. மொத்தமா ஓசியில போனா மாட்டிக்குவோம். ஆளுக்குப் பத்துச் சதம் நம்ம பணத்தைப் போட்டு 27 சதம் கட்டுறவங்க காசால மிச்சத்தைப் போட்டுச் சமாளிச்சுக்குவோம் என்று முடிவுக்கு வந்தாங்களாம்.
இந்தத் தகவலை குழுவுல உள்ள சிலருக்கு மறச்சிட்டாங்களாம். அதுக்குக் காரணம் அவங்க இது நேர்மையில்லாத செயல் என்று சொல்லுவாங்க என்கிற பயம்தான்.
இப்பிடியாகக் கதை போகும் வேளையில...
..... தொடரும்!

இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2 comments:
Uncle interesting story.
please sir cotinue soon!
Post a Comment