பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக நிறுவனரும் “சமநிலைச் சமுதாயம்” சஞ்சிகையின் நிறுவனரும் எழுத்தாளரும் கொடை வள்ளலும் வணிகருமான ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் அவர்களது நினைவாக அவரது வாரிசுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட “மனத்தால் செழித்த மாண்பாளர்” என்ற நினைவு மலர் வெளியீட்டு விழா பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினால் நடத்தப்பட்டது. 24.01.2015 அன்று காலை 10.00 மணிக்கு தி.நகர், ஜி.என். செட்டித் தெருவில் அமைந்துள்ள தி அக்கார்ட் மெட்ரோபோலிட்டன் ஙோட்டல் மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு முனைவர் சே.மு.மு. முகமதலி (பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் செயலாரும்) தலைமை வகித்தார்.
அழைப்பிதழ் பக்கம் - 01
அழைப்பிதழ் பக்கம் - 02
அழைப்பிதழ் பக்கம் - 03
அழைப்பிதழ் பக்கம் - 04
மிக அழகிய முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த நினைவு மலர் ஏவி.எம். ஜாபர்தீன் ஹாஜியாரின் முழுமையான வாழ்வின் சிறப்பை எடுத்துக் கூறக் கூடியதாக அமைந்துள்ளது. அதியுச்ச சிறப்புப் பதிப்பாகவும் கையில் எடுத்ததும் படிக்கத் தூண்டும் விதத்திலும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மலரை முனைவர் சேமுமு. முகமதலி, முனைவர் ஹ.மு. நத்தர்ஷா, முனைவர் அகமது மரைக்காயர், கவிஞர் சடையன் அமானுல்லாஹ், சட்டத்தரணி ஷேக்தாவூத் ஆகியோர் தொகுத்துள்ளனர்.
மலரை வெளியிட்டு வைத்துச் சிறப்புரை நிகழ்த்தினார் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்
ராஸிக் பரீத் ஜாபர்தீன், காஸிம் பரீத் ஜாபர்தீன், டாக்டர் ஷபீக்கா பானு ஆகியோர் தமது தந்தையாரின் நினைவுகளை இம்மலரில் பகிர்ந்து கொண்டுள்ளனர் அன்னாரின் சகோதரர்களான ஏவி.எம். ஹாஜா மைதீன், அகமது கபீர் ஆகியோர் சகோதரர் பற்றிய நினைவுகளை மீட்டுள்ளனர்.
கவிஞர் தமிழன்பன்
திரு. வீரபாண்டியன்
எழுத்தாளர் ஜே.எம். சாலி, டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மத் இக்பால் ஆகியோர் முறையே முன்னோடி ஏவி.எம்.ஜாபர்தீன், வர்த்தக ஆளுமைக்கு ஒரு முன்னோடி எனும் தலைப்பில் நினைவுகளை மீட்டியுள்ளனர்.
அப்துல் அஸீஸ் பாக்கவி
இதுதான் ஹாஜியார் எனும் தலைப்பில் தோப்பில் முகம்மது மீரான் அவர்களும் என் அண்ணன் ஜாபர்தீன் எனும் தலைப்பில் திரு வீரபாண்டியன் அவர்களும் மனங்களில் வாழும் மாண்பாளர் எனும் தலைப்பில் டத்தோஸ்ரீீ பரக்கத் அலி அவர்களும் நினைவு மீட்டல் செய்துள்ளார்கள்.
இலங்கையிலிருந்து டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், கவிஞர் அல் அஸூமத் மற்றும் நானும் சென்றிருந்தேன்.
டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
அஷ்ரஃப் சிஹாப்தீன்
அனைவரும் விரும்பும் மனிதர் என்ற மகுடத்தில் சடையன் அமானுல்லாஹ், கண்ணியவான் ஏவி.எம். ஜாபர்தீன் எனும் மகுடத்தில் கோவை அப்துல் அஸுஸ் பாக்கவி, ஏவி.எம். ஹாஜியார் ஒரு பல்கலைக் கழகம் எனும் மகுடத்தில் வழக்கறிஞர் கே.எம். ஷேக்தாவூத் ஆகியோர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.
மனிதம் என்ற சொல்லுக்குப் பொருளாய் வாழ்ந்தவர் என்று சாத்தான்குளம் அப்தல் ஜப்பார், அவராத்தர் வள்ளல் என்று ஓ.அ. ஹாஜா முகைதீன், என்றும் நினைவில் வாழும் நன்னெறியாளர் என்று குமரி அபூபக்கர், ஆரவாரத்தை ஏற்காத ஆழம் என்று முனைவர் ஹாஜா கனி ஆகியோர் நினைவு பகிர்ந்துள்ளனர்.
பிரதி பெறும் எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான்.
இடது புறம் வெள்ளை ஷேர்ட் அணிந்திருப்பவர் ஜாபர்தீன் ஹாஜியாரின் மூத்த புதல்வர் ராஸிக் பரீத். வலது புறம் வெள்ளை ஷேர்ட் அணிந்திருப்பவர் ஜாபர்தீன் ஹாஜியின் மைத்துனர் கவிஞர் சடையன் அமானுல்லாஹ்
கலந்து கொண்ட முக்கியஸ்தர்களில் ஒரு பகுதியினர்
(இடது புறம் கைகட்டி நிற்பவர் ஜாபர்தீ்ன் ஹாஜியின் மற்றொரு மைத்துனர் இனாயத்துல்லாஹ்)
கலந்து கொண்ட முக்கியஸ்தர்களில் இன்னொரு பகுதியினர்
(முதல் வரிசை வலமிருந்து இடமாக.. முனைவர் நத்தர்ஷா, இந்தப் புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்த கவிஞர் ஜலாலுத்தீன், இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம் மற்றும் கவிஞர் கதீம்)
ஜாபர்தீன் என்னொரு மாமனிதர் எனும் தலைப்பில் அஷ்ரஃப் சிஹாப்தீன், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் எனும் தலைப்பில் நாகூர் அப்துல் கையூம், சல்ல மனிதரை இழந்து விட்டோம் எனும் தலைப்பில் ஃபிதாவுல்லாஹ் கான் ஆகியோர் நினைந்துருகியுள்ளனர்.
என் நினைவு நீரோட்டத்தில் ஒரு மாமனிதர் என பாத்தி முத்து சித்தீக், சொ்னவுடன் செய்தவர் என்று சடையன் ஜபருல்லாஹ், கலந்து உறவாடிய உறவு என வர்த்தகர் எம்.ஏ. முஸ்தபா, எனது இனிமையான இளமைக்கால நினைவுகளில் ஏவி.எம். ஜாபர்தீன் என எஸ்.எம். அன்வர்தீன் ஆகியோர் நினைவு பகிர்ந்துள்ளனர்.
வருகை தந்திருந்த பெண்கள்
எல்லோரையும் மதிக்கும் பண்பாளர் என ஹாபிஸ். எஸ்.எஸ். அகமது பாக்கவி, என் இனிய உறவு என சடையன் இனாயத்துல்லாஹ், என் வகுப்புத் தோழர் என கே.ஏ.சையது அகமது, ஹாஜி ஜாபருத்தீன் ஒரு சகாப்தம் என பேராசிரியர் கே. காஸிம், தமிழ் மாமணி - இலக்கியப் புரவலர் என முனைவர் சாயபு மரைக்காயர், முத்தான மூன்று நிகழ்வுகள் என முனைவர் கம்பம் சாகுல் ஹமீது, இன்முக வேந்தர் ஏவி.எம். ஜாபருத்தீன் என பேரா. நசீமா பானு, வெகு தூரத்தில் இல்லை என கே.ஏ.முகம்மது ஆரிப், மேலோங்கும் ஏக்கம் என
எம்.ஏ.அப்துல் கதீம் ஆகியோர் நினைவு கூர்ந்துள்ளனர்.
இரண்டாவது வரிசை இடமிருந்து வலமாக
கவிஞர் அல் அஸூமத், அடுத்தவருக்கு அருகில் நான். என்னருகில் தொப்பி அணிந்திருப்பவர் கவிஞர் ஜலாலுத்தீன்
மைய நீரோட்டத்தை நோக்கி முஸ்லிம்களை உந்தித் தள்ளியவர் என ஆளுர் ஷாநவாஸ், இஸ்லாமிய இலக்கியத்துக்கு ஓர் இழப்பு என ஹாஜி எஸ்.அகமது கபீர், நெஞ்சில் நிறைந்தவர் என முனைவர் அகமது மரைக்காயர், ஜாபர்தீன் நேசித்த ஜமால் முஹம்மது கல்லூரி என எம்.ஜே.எம். அப்துல் கபூர், என் இனிய நண்பர் என கலைமாமணி எஸ்.எம். உமர், இதய முற்றத்தில் ஏவி.எம். ஜாபர்தீன் என முனைவர் நத்தர் ஷா, தீன் தமிழர் ஏவி.எம். என முனைவர் சேமுமு. முகமதலி, என் வாழ்க்கையை சிறப்ாக்கி வைத்தவர் என எ.சிராஜூத்தீன், நோன்பு காலத்தில் என்ற தலைப்பில் சடையன் இப்றாஹீம், ராஜ்பவன் பள்ளிவாசல் எனும் தலைப்பில் மௌலவி முகம்மது நாஸர் அலி, சமரசம் எனும் தலைப்பில் விராஜூல் ஹஸன், மறக்க முடியாதவர் என்று டாக்டர் ஹிமானா செய்யத் ஆகியோர் நினைவு மீட்டியுள்ளனர்.
இடமிருந்து வலமாக.. ஜாபர்தீன் ஹாஜியாரின் இரண்டாவது புதல்வர் காஸிம் பரீத், முனைவர் நத்தர்ஷா, வழக்கறிஞர் ஷேக் தாவூத்
இரண்டாம் சீதக்காதி இன்றில்லையே என்ற தலைப்பில் ஈரோடு தமிழன்பன், அவராத்தர் சீர்விளங்கப் பிறந்திட்ட அரும்பு எனும் தலைப்பில் அருட்கவி முகம்மது தாஹா, ஏவி.எம். மனித நேயம் எனும் தலைப்பில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆகியோர் கவிதையில் அன்னாரை நினைவு கூர்ந்துள்ளனர்.
இவை தவிர சில நண்பர்களது ஆங்கிலக் கட்டுரைகளும் ஹாஜியாரின் ஆக்கங்கள் சிலவும், வாழ்வின் பல்வேறு நினைவுகளைக் குறிக்கும் படங்களும் மலரில் அணி சேர்க்கின்றன.
காஸிம் பரீத் மற்றும் அன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்து நெறிப்படுத்தியவருமான புதுக்கல்லூரித் துணை முதல்வர், தமிழ்துறைத் தலைவர் முனைவர் அகமது மரையாக்காயர்.
(இப்படங்களை அனுப்பியிருந்தவர் கவிஞர் ஜலாலுத்தீன்)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment