Showing posts with label விரல்களற்றவனின் பிரார்த்தனை. Show all posts
Showing posts with label விரல்களற்றவனின் பிரார்த்தனை. Show all posts

Saturday, March 8, 2014

அறுபத்தைந்தாம் கலை



காலை ஆறு மணிக்கே அவன் வந்து நிற்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் அவர். தெளிவான சிந்த னையுடனான எழுத்துப் பணிக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் அமைதியான காலை வேளை மிகவும் பொருத்தமானது. காலைத் தேனீரோடு எழுத்தையும் வாசிப்பையும் அவர் எட்டு மணி வரை மேற்கொண்ட பிறகுதான் அடுத்த வேலை களைக் கவனிக்கப் பழகியிருந்தார்.

அவனது வருகையால் அவருக்கு மிகவும் விருப்பமான அந்த இரண்டு மணிநேரம் இழக்கப்பட்டு விட்டது என்று எண்ணிக் கொண் டார். வீட்டுக்கு வந்தவரை வாசலில் நிறுத்த முடி யுமா? அவனை உள்ளே அழைத்தார்.

000

'நம்மால் கடந்த காலங்களில் கைவிடப் பட்டவற்றை மட்டுமே அருகிவரும் கலைகள் எனக் கருதி வருகிறோம். இந்தக் கருத்தே பிழையானது. ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லப் படுகிறது. அவை என்னவென்று கூட நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை' என் றார் பேச்சாளர்.

'வசியக் கலை பற்றி நீங்கள் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறீர் கள். அது குறித்து நானும் பல விடயங்களைப் படித்திருக்கிறேன். இதற்கு மாந்திரீகம் என்றும் சொல்லப்படுகிறது. வாராந்திரிகளில் இக்கலையை அடிப்படையாகக் கொண்ட பல விளம்பரங்களை நீங்கள் பார்க்க முடியும். இந்த விடயத்தில் எனக்கும் ஓரளவு பரிச்சயம் உண்டு. இங்கேயிருக்கும் பெண்களில் யாராவது ஒருவர் முன்வருவாராக இருந்தால் நான் எனது பேச்சை முடித் துச் செல்லுகையில் அவரை என் பின்னால் வரச் செய்ய என் னால் இயலும்.'

வயதான பெண்கள் நான்கு பேர் ஆங்காங்கே உட்கார்ந்திருந் தார்கள். பேச்சாளரின் வயதொத்த முப்பது பேரளவில் ஆண்கள் அங்கி ருந்தார்கள். அவர்களில் சிலர் அப் பெண்களை ஒரு முறை சின்னச் சிரிப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். பேச்சாளரையே பார்த்தபடி இருபத்தேழு அல்லது முப்பது வயது மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் தனியே பின்னால் அமர்ந்திருந்தான்.

சவால் விட்டு அவர் பின்னால் போக வேண்டி வந்தால் மானக் குறைவாகிவிடும் என்ற பயத்தில் அல்லது தனது பேச்சுக்குச் சுவையூட்டப் பேச்சாளர் குசும்புத்தனம் பண்ணுகிறார் என்ற என்ற எண்ணத்தில் எது வுமே காதில் விழாதது போல் பெண்கள் அமர்ந்திருந்தார்கள்.

'பேச்சாளரே அறுபத்தைந்து வயது தாண்டியவர், இவர் பின்னால் போய் என்னதான் ஆகப் போகிறது' என்ற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பேச்சாளர் தொடர்ந்தார்....

'அணிமா மகிமா இலகிமா
அரிய கரிமா பிராத்திமலப்
பிணிமா சுடையோர்க் கடைவரிய
பிராகா மியமீ சத்துவமெய்
துணிமா யோகர்க் கெளியவசித்
துவமென் றெட்டா மிவையுளக்கண்
மணிமா சறுத்தோர் விளையாட்டின்
வகையா மவற்றின் வகையுரைப்போம்'

என்று திருவிளையாடற் புராணத்தில் ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடல் சொல்வது என்ன? இந்தப் பாடல் அட்டமா சித்தி களைப் பற்றிப் பேசுகிறது. இந்த எட்டுச் சித்திகளும் மாபெரும் கலைகள். 'அணிமா' என்பது பூதவுடலை அணுப் போன்று சிறியதாக்குதல். 'மகிமா' என்பது உடலை மலை போன்று பெரிய தாக்குதல். 'இலகிமா' என்பது காற்றைப் போல இலகு வாக்குதல். 'கரிமா' என்பது பளுவாக்குதல். 'பிராப்தி' என்பது அனைத் தையும் ஆளுதல். 'வசித்துவம்' என்பது யாரையும் வசியப் படுத்துதல். 'பிராகாமியம்' என்பது கூடுவிட்டுக் கூடு பாய்தல். 'ஈசத்துவம்' என்பது விரும்பிய எதையும் செய்து அனுபவித்தல்.

இதிலே வசித்துவம் என்பதைத்தான் நான் முதலில் பேச்சுக்குச் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னேன். தவிர வசியம் என்பதை நாம் இன்றும் நம்புகிறோம். இன்றைய மக்கள் சமூகம் அதைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் ஆசை. அடைய முடியாததை அல்லது சிரமப்பட்டு அடைய வேண்டியதை இலகுவாக அடைந்து விடும் பேராசை. வசியம் செய்வதாக இன்றும் பலர் பிரகடனப்படுத்திக் கொண்டு காசு பார்த்து வருகிறார்கள். அது சாத்தியப்படுகிறதா இல்லையா என்பதல்ல, எனது தலைப்புக்குரியது. இவ்வாறான அற்புதமான கலைகள் அன்று இருந்தன என்பதுதான்.'

இம்மாதிரித் தலைப்புக்களில் வெகு அபூர்வமாகவே உரைகள் இடம் பெறுகின்றன என்று அவனுக்குத் தோணியது. தன்னைத் தவிர இளைய வயதுக்காரர்கள் யாரும் இக்கூட்டத்துக்கு வருகை தராதது அவனுக்குக் கவலையாக இருந்தது.

அவர் தொடர்ந்தார்.

'பாருங்கள். எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைகள் இவை. இலகுவில் யாருக்கும் சித்திக்காதவை. இவற்றைப் பெற்றுக் கொள்ள மிகுந்த பிரயாசையும் அர்ப்பணிப்பும் தியாகமும் உழைப்பும் தேவை. சக்தி வாய்ந்த எதுவும் மிகச் சாதாரண மாக மனிதனுக்குக் கிடைத்துவிடுவதில்லை.

உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளக் கூடிய அற்புதமான சக்தியுள்ள கலைகள் இவை. பொறாமை, காழ்ப்பு ணர்வு, பேராசை மற்றும் எல்லாம் தன்வசமே இருக்க வேண் டும் என்கிற ஆதிக்கவுணர்வு ஆகியவற்றை அடியோடு அகற்றி விட்டுத்தான் இக்கலைகளைப் பெற்றுக் கொள்ளப் போராட வேண்டும். தனது புலன்களை அடக்கி ஒடுக்கி, புலன்களாலும் உணர்வுகளாலும் ஆட்டிப் படைக்கப் படாத மனதைப் பெற்றுக் கொண்டே இவற்றையடைய முயல வேண்டும்.'

அவன் கூட்டத்தின் பின்னாலிருந்து எழுந்து கையை உயர்த்தினான்.

பேச்சாளர், 'என்ன' என்பது போல் அவனைப் பார்த்தார்.

'புலன்களை அடக்கி விட்டு உலோகாயுத ஆசைகளை ஒழித்து விட்டு இக்கலைகளைப் பெற்றுக் கொள்வதில் என்ன லாபம் இருக்கிறது?' அவன் கேட்டான்.

'நல்ல கேள்வி. நீங்கள் இன்னும் இன்றைய உலகத்தில் - ஆசை யும் வன்மமும் கொண்ட உலகத்தில் நின்றபடி இந்தக் கேள் வியைக் கேட்கிறீர்கள். இந்தக் கலைகளைப் பெற்றுக் கொள்வது பிறன் மனை நாடலுக்கோ, தனக்குப் பிடிக்காதவனை நோவினை செய்வதற்கோ, நாட்டை ஆள்வதற்கோ, உலகத்தின் செல்வங் களையெல்லாம் நாமே வைத்து அனுபவிப்பதற்கோ அல்ல.

தன்னலம் அறுத்து மற்றோருக்கு அன்பும் கருணையும் செய்வ தற்காக. அதுவே நித்தியமானது. உன்னதமிக்கது. சாஸ்வத மானது. மட்டற்ற சந்தோஷத்தைத் தருவது. ஆத்மாவின் அள விட முடியாப் பசியைத் தீர்க்க வல்லது.

குறுக்கு வழியில் மனிதன் இவற்றை அடைந்து விட முடியாது. அவ்வாறு உலோகாயுத சுய நன்மைகளுக்காகக் குறுகிய வழியில் இவற்றைப் பெற முடியுமாக இருந்தால் பலரும் இவற்றை அடை யப் பெற்றிருப்பார்கள். எல்லோரும் குட்டிக் கடவுள்களாக உலா வருவார்கள். அப்படியானால் இன்றை மனித குலத்தின் கதி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.'

அவன் அமர்ந்தான். பேச்சாளர் தொடர்ந்தார்.

'இந்தக் கலைகளில் வசியக் கலை பற்றி நாம் எல்லோரும் அறிந்திருப்பதால் அதைப்பற்றிப் பேசுவது ஓர் அற்ப எதிர் பார்ப்பை மனதுக்குள் ஏற்படுத்தக் கூடியது. நம்மால் செய்யச் சாத்தியப்படாததை நாம் யார் மூலமாவது பெற்றுக் கொள்ள விழைகிறோம். இதனால் இக்கலையின் பெயரால் பலர் ஏமாற்றப் படுகிறார்கள். நான் முன்னர் குறிப்பிட்ட மற்றைய கலைகளைக் கொண்டு யாரையும் ஏமாற்ற முடியாது. அவை மக்கள் கண் முன்னே நேரடியாகச் செய்துகாட்ட வேண்டிவை என்பதால் இவற்றைப் பற்றிப் பேசுவாரில்லை.

தாயுமான சுவாமிகளின் பாடல் ஒன்றை இந்த இடத்தில் நான் எடுத்தாள விரும்புகிறேன். அவர் சொல்லும் விடயங்களை அவதானியுங்கள்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையுங்
கட்டலாம் ஒருசிங்க முதுகின்மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத் தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலவலாம்
சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு
சரீரத்திலும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறன் அரிது சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே!

இங்கே குறிப்பிடப்படுகின்ற செயல்கள் எவையும் வெறுங் கற்ப னைகள் அல்ல. ஒரு காலத்தில் நடந்தவை. தற்போதும் இவற்றில் ஏதாவது ஒன்று வெகு அபூர்வமாக நடந்து கொண்டிருக்கலாம். நமது கண்காணா இடத்தில் சித்தர்களும் யோகிகளும் தமது புலன் அடக்கியாளும் வல்லமையால் இவற்றை அடைந் திருக்கலாம்.

பிராகாமியம் என்ற கூடுவிட்டுக் கூடுபாய்தல் ஒரு சுவாரஸ்யமான விடயமாக இருக்கிறது. இறந்த ஒரு உடலில் தனது ஆத்மா வையும் உயிரையும் உட்புகுத்தி நடமாடுவதைக் கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்று அழைக்கிறார்கள். திருமூல நாயனார் கூடு விட்டுக் கூடுபாய்ந்தார் என்று வரலாறு சொல்கிறது.'

Thursday, July 11, 2013

ரமளானில் ஒரு பகலுணவு


ஹிஜ்ரி 1417 - கி.பி. 1996ம் ஆண்டு.

000

நான் எதிர்பார்த்த மாதிரியே அந்தக் கடை அமைந்திருந்தது. தெருவில் வாகனத்தில் சற்றுத் தரித்து நன்றாக நோட்டம் விட்ட பின்னரே கடைக்குள் நுழைந்திருந்தேன்.

ஒரு சிறிய ஹோட்டல் அது. ஏழு அல்லது எட்டு டொபி போத்தல்களுக்கு நடுவில் கல்லாவில் அமர்ந்திருந்த உரிமையாளர் நிச்சயமாக பெரும்பான்மை இனத்தவர்தான் என்பது உறுதியானது. அந்தக் கடைக்குள் நான்கே நான்கு மேசைகள் மாத்திரம் இருந்தன. அதற்கு மேல் அங்கு இடம் இல்லை. அதில் ஒரு மேசை மூலையில் இரண்டு சுவர்களை அண்டிப் போடப்பட்டிருந்தது. தெருவுக்கு அல்லது கடை முகப்புக்கு முகம் காட்டாமல் அதில் அமர்ந்து கொண்டேன்.

கடையைச் சுற்றிப் பார்வையைச் செலுத்தினேன். சுவரில் பொருத்தப்பட்டிருந்த நீர்க் குழாயடியில் சுவரிலும் சுற்றிலும் பரவியிருந்த அழுக்கு கடை உரிமையாளரைக் கைது செய்யப் போதுமானது. ஏனைய மூன்று மேசையிலும் கொத்தாக ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. நான் அமர்ந்திருந்த மேசைக்கு மேல் சில ஈக்கள் பறந் தன. அவற்றை நான் விரட்டினேன். சுகாதாரப் பரிசோதகர்கள் அங்கு வருவதில்லையோ என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. 'வந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் இரண்டாவது தினம் மீண்டும் பொரித்த ஒரு கோழியை உரிமையாளர் சுற்றிக் கொடுத்து விடுவார். அதை அவர்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டுச் சந்தோசமாக இருந்து விடுவார்கள்' என்று எண்ணினேன்.

வெயிட்டர் பையன் வந்து 'என்ன வேண்டும்?' என்று பெரும்பான்மை மொழியில் கேட்டான்.

'சோறு' என்று நானும் பெரும்பான்மை மொழியிலேயே பதில் சொன்னேன்.

சோறு, கறிகளை வைத்து விட்டு அவன் நகர, நான் சாப்பிட ஆரம்பித்தேன்.

கடைக்குள் வேறு யாரும் கிடையாது. சாப்பிட்டு முடிப்பதற்குள் மூன்று நான்கு முறை வேறு என்ன வேண்டும் என்று கேட்டுக் கேட்டு அவன் அருகில் வந்தான். அவன் அப்படி அருகில் வருவது  எனக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கடையின் முகப்புப் பகுதியை இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.

தெருவில் கடையைத் தாண்டிச் செல்லும் யாராவது ஒரு முஸ்லிம் நபர் என்னைப் பார்த்துவிடக் கூடாது என்ற ஒரு பயம்தான் அதற்குக் காரணம். ஏனென்றால் அன்று றமளான் நோன்பின் பதின் மூன்றாவது தினம். நான் அன்று நோன்பு நோற்காத நிலையில் ஒரு பெரும்பான்மைக் கடையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு தொலைக்காட்சிச் செய்தியறிவிப்பாளன். வானொலி அறிவிப்பாளன்.  கவிதை எழுதுபவன். பலருக்கும் அறிமுகமானவன். எனக்குத் தெரியாத பலர் என்னையறிவார்கள். தெருவில் நடந்து போனால் ஆகக் குறைந்தது இருவராவது புன்னகைப்பார்கள். தாமதித்து நிற்கும் இடத்தில் யாரோ ஒருவர் 'நீங்கள் இன்னார்தானே' என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வதுமுண்டு. சிலர் அதே இடத்தில் க்ண்ணுக்குத் தெரியாத இரத்தம் ஆறாகப் பெருக 'அறுக்க' ஆரம்பித்து விடுவதுமுண்டு.

இவ்வாறான ஒரு நிலைமையில் றமளானில் பகல் சாப்பாடு உண்ணும் என்னைக் கண்டால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்.

Monday, March 18, 2013

சிறுகதை நூல் வெளியீட்டு விழா பகுதி - 2


கடந்த 03.03.2013 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் “விரல்ளற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. நிகழ்வுகளின் புகைப்படங்களின் இரண்டாம் பகுதி.


பிரதி பெறும் அஸ்ஜயன் வாஹித்


பிரதிபெறும் இலக்கிய ஆர்வலர் ஷரீப் 


பிரதிபெறும் கமலதாசன் சுப்பையா
எழுத்தாளர்


பிரதிபெறும் இர்ஷாத் ஹூஸைன்
நாடக இயக்குனர், கலைஞர்


பிரதிபெறும் ஞா.பாலச்சந்திரன்
நிர்வாக ஆசிரியர் - “ஞானம்” சஞ்சிகை


பிரதிபெறும் கவிஞர் யாழ் அஸீம்


பிரதிபெறும் “சமூகஜோதி” ரபீக்


பிரதிபெறும் முல்லை முஷ்ரிபா
கவிஞர், ஒலிபரப்பாளர்


பிரதிபெறும் புஷ்பராணி சிவலிங்கம்
(இல.ஒலி.கூட்.தாபனம்)

Saturday, March 16, 2013

சிறுகதை நூல் வெளியீட்டு விழா - பகுதி 1


கடந்த 03.03.2013 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற “விரல்களற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது எனது சிறுகதை நூல் வெளியீட்டு விழாக் காட்சிகள்


நிகழ்ச்சியை கிராஅத்துடன் ஆரம்பித்து வைத்த கொழும்பு டீ.எஸ்சேனாநாயக்க கல்லூரி மாணவன் செல்வன் ஜஹ்ஸன்


தமிழ்த்தாய் வாழ்த்து - திரு. ப.க. மகாதேவா


வரவேற்புரை - கொழும்பு டீ.எஸ்சேனாநாயக்க கல்லூரி மாணவன் அஹ்ஸன் அலி


தலைமையுரை - கவிஞர் அல் அஸூமத் அவர்கள்.


வாழ்த்துரை -எம்.எம். பீர்முகம்மத் அவர்கள்
செயலாளர்
மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவை


நூல் பற்றிய கருத்துரை
எழுத்தாளர் மு.தயாபரன் அவர்கள்


நூல் பற்றிய கருத்துரை
ஊடகவியலாளர் எஸ்.எம்.எம். முஷார்ரஃப்


முதற்பிரதி பெறும் புரவலர்
அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள்


பிரதம அதிதி உரை
முன்னாள் அமைச்சரும் இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான
சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள்.

Saturday, March 9, 2013

விரல்களற்றவனின் பிரார்த்தனை - 2


கடந்த 03.03.2013 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் வெளியிடப்படட “விரல்களற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது சிறுகதை நூல் பற்றி ஊடகவியலாளர் எஸ்.எம்.எம். முஷார்ரஃப் அவர்கள் நிகழ்த்திய கருத்துரையின் ஒலிவடிவம்.




பகுதி - 1





பகுதி - 2




பகுதி - 3

(புகைப்படம்- பொன்னுத்துரை - ஒலிப்பதிவு - முஸ்தீன்)

Tuesday, March 5, 2013

விரல்களற்றவனின் பிரார்த்தனை - 1


கடந்த 03.03.2013 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்ட “விரல்களற்றவனின் பிரார்த்தனை” சிறுகதை நூல் பற்றி எழுத்தாளர் நண்பர் மு.தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிவடிவம்.



பகுதி - 1



பகுதி - 2