Tuesday, May 10, 2011

ஒரு குடம் கண்ணீர்

எதிர்வரும் 28.05.2011 அன்று பி.ப. 4.30க்கு வெளியிடப்படவிருக்கும் எனது புதிய நூல்.
















நூல்பற்றி.....

ஒரு சிறு கதையோ என்று மயங்குமளவு இச்சம்பவங்களுடன் நடை பயிலும் எழுத்துக்களின் அழகு யதார்த்தத்தின் அவலங்களா கற்பனையா என்ற மருட்சிக்குள் எம்மை ஒரு கணம் இட்டுச் செல்வது உண்மை.


ஆனால் இவை கற்பனைகள் அல்ல. கற்பனையையும் தோற்கடிக்கும் இரத்தத்தை உறைய வைக்கும் உண்மைகள். துயரத்தையும் உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இலக்கியப் பதிவுகள் இவை.

இவை அனைத்தையும் தாண்டி இந்நூல் ஓர் ஆவணம் என்பதை யும் மறுப்பதற்கில்லை. இந்த நூற்றாண்டின் கொடுமைகளின் ஒரு பகுதியை இது மக்களுக்குச் சொல்கிறது. இலக்கியமாகவும் ஆவணமாக வும் தன்னை வெளிப்படுத்தும் இந்நூல் தமிழில் ஒரு முன்னோடி முயற்சி யாக இருக்கக் கூடும்.

எமது காலத்தின் உலக அரசியல், ஜனநாயகம், புதிய உலக ஒழுங்கு, மனித உரிமைகள் தொடர்பில் இந்நூல் ஏற்படுத்தும் தாக்கமும் எழுப்பும் கேள்விகளும் மனிதர்கள் என்ற ரீதியில் பதில் தருவதைக் கட்டாயப்படுத்துகின்றன.

கடந்த ஐம்பது வருட கால வரலாறும் அதற்கு முற்பட்ட வரலாறும் விட்டுச் சென்றுள்ள பிரச்சினைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எமக்கு நினைவு படுத்துவதே இந்நூலின் மிகப் பெரிய பங்களிப்பாகும்.

கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

yogesh said...

உங்களது புதிய நூல் தொடர்பான அறிமுகத்துக்கு தொடுப்பு அனுப்பியமைக்கு முதற்கண் நன்றி.
உங்களது எழுத்துக்களைப் படிக்கும் போது "Grass for my feet" என்ற ஆங்கில கட்டுரையின் ஆசிரியர் ஜே.விஜயதுங்கவின் எழுத்துத் தான் எனக்கு ஞாபகம் வரும். அவரது கட்டுரையை வாசிக்கும் போது அது கட்டுரையா அல்லது கவிதையா என சந்தேகம் வரும்படி எழுத்து நடை அமைந்திருக்கும். தமிழுக்கும் அப்படியானதொரு எழுத்தாளர் கிடைத்தது எமது அதிஷ்டம்.

நூலினை விரைவில் வாங்கிப் படித்து கருத்து சொல்கிறேன்.


அன்புடன்
யோகேஷ்

Mohamed Faaique said...

வாந்த்துக்கள்