Sunday, March 17, 2013

பல சேனாவின் குறைகேள் அதிகாரி




(தொலைபேசி அழைப்பு வருகிறது)

கு. அ:- ஹலோ....

கிராமத்தான்:- ஆ.... ஹலோ... குறைகேள் அதிகாரி காரியாலயங்களா மஹத்தயா?

கு.அ:- ஆமா... சொல்லுங்க...

கிராமத்தான்:- நான் வவ்வால்பிட்டியவிலிருந்து பேசுறன்...

கு.அ:- என்னது? வவ்வால் பிட்டியவா? அது இலங்கையிலயா இருக்கு?

கிராமத்தான்:- அதுதானே சொல்லுறது.. அரசாங்க அதிகாரிகளும் இப்பிடித்தான் கேட்குறாங்க.. நீங்களும் இப்படித்தான் கேக்குறீங்க..

கு.அ:- ஆ... சரி.. சரி சொல்லுங்க.. சொல்லுங்க..

கிராமத்தான்:- இந்த ஊரு மஹத்தயா... பிஸ்ஸாகமயிலிருந்து 7 கட்;டை. என்ட சொந்த ஊரு பிஸ்ஸாகம

கு.அ: உங்க பெயரென்ன?

கிராமத்தான்:-  சானக்க ராவக்க!

கு.அ:- சரி... இப்போ வவ்வால்பிட்டியவிலிருந்து பேசுறிங்க... சரியா?

கிராமத்தான்:- அந்தா.. அது சரி.

கு.அ:- வவ்வால்பிட்டியவில் எத்தனை குடும்பங்கள் இருக்கு?

கிராமத்தான்:- ஒரு முன்னூறு மட்டு..

கு.அ:- நல்லது... இப்ப எதுக்கு எடுத்தீங்க..?

கிராமத்தான்:- என்னண்டா மஹத்தயா... நான் எந்த நாளும் காலையில எட்டு மணிக்கு பிஸ்ஸாகமயிலிருந்து வவ்வால் பிட்டிக்கு புஸ் பைசிக்கிள்லதான் போவன்..

கு.அ:- சரி..

கிராமத்தான்:- அங்கே ஒரு பேக்கரியில வேல செய்யுறன்! பத்துமணிக்கு வேலை தொடங்கி பணிஸ், ரஸ்க், பாண் எல்லாம் நான்தான் போடுறது!

கு.அ:- முதலாளி முஸ்லிம் ஆளா?

கிராமத்தான்:- இல்லை மஹத்தயா... சிங்கள ஆள்தான்!

கு.அ:- முஸ்லிம் குடும்பம் எத்தனை இருக்கு அங்கே?

கிராமத்தான்:- ஒருத்தரும் கிடையாது!

கு.அ:- தமிழ்க் குடும்பம்..

கிராமத்தான்:- கிடையவே கிடையாது....! இது தனிச் சிங்களக் கிராமம் மஹத்தயா? வறுமையான மக்கள்!

கு.அ:- மாட்டிறைச்சிக் கடை இருக்கா?

கிராமத்தான்:- அதுதானே மஹத்தயா... பாருங்க... அதுவும் இல்லை!

கு.அ:- பன்றி இறைச்சிக் கடை?

கிராமத்தான்:- இருக்கு மஹத்தயா... இரண்டு கடை!

கு.அ:- சரி.. நீங்க பேக்கரில வேல செய்யுறீங்க... இனி...?

கிராமத்தான்:- வேலை இரவு 8.00 மணி வரை போகும். காலையில் விற்க வேண்டிய பாண் போட்டுக் கொடுக்கணும். அதை இறக்கி வச்சிட்டு வீட்டுக்கு வரக்குள்ள எப்பிடியும் இரவு 9.30 ஆகிடும்...

கு.அ:- சரி... உங்கட பிரச்சினை என்ன?

கிராமத்தான்:- முழுநாளும் வேலதானே மஹத்தயா... ஒரே உடம்பு வலியாயிருக்கும்!

கு.அ:- அதை எங்களுக்கிட்ட சொல்லிச் சரிவராது.. டாக்டரைப் பார்த்து...

கிராமத்தான்:- இல்லை மஹத்தயா... ஒரு காப்போத்தல் போட்டா சரியாகிடும்..

கு.அ:- (சிரிப்பு) இனி... உங்க பிரச்சினை என்ன?

கிராமத்தான்:- வவ்வால் பிட்டியவில் சாராயக் கடை இல்லை. பிஸ்ஸாகமயில இருக்கு. ஆனா கடையை இரவு எட்டு மணிக்குப் பூட்டி விடுறாங்க... நீங்கதான் கொஞ்சம் சொல்லி பத்து மணிவரைக்குமாவது திறந்து வைக்க ஏற்பாடு பண்ணனும்...!

(போன் துண்டிக்கப்படுகிறது...)

கிராமத்தான்:- ஹலோ... ஹலோ... ச்சே... யாராலயும் ஒரு பிரயோசனமும் கிடையாது!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: