இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 09
மலேசியாவில் நடந்து முடிந்த - இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - என்ற பெயரில் நடத்தப்பட்ட - 20 வீத இலக்கியமும் 40வீத அரசியலும் 40 வீத தனிநபர் மகத்துவம் நிலைநாட்டலும் என்ற நோக்கில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அநேகமாகவூம் நாடு திரும்பி விட்டார்கள்.
இலங்கையிலிருந்து சென்றவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரைத் தவிர மற்றையோர் யார் என நாம் அறிந்திருக்கவில்லை. 50 வீதமானோர் இலக்கியம் என்றால் கால் வீசை என்ன விலை என்று கேட்பவர்கள். மற்றும் 30 வீதமானோர் வியாபாரம் மற்றும் சுற்றுலா நோக்கில் சென்றவர்கள். இலக்கிய ஆர்வமுள்ள பொதுவான நமக்கு அறிமுகமான சிலரும் சென்றிருக்கிறார்கள் என்பதை அவர்கள் நம்முடன் தொடர்பு கொண்ட பிறகுதான் அறிய வந்தோம்.
நம்மோடு தொடர்பு கொண்ட அந்தக் குறிப்பிட்ட நபர்களில் ஊடகத்துறை சம்பந்தப்பட்டோரும் உள்ளனர். மலேசியர் மிகவும் சிறப்பாக உபசரித்தனர் என்று சொன்ன இவர்கள் இலங்கைக் குழுவினர் தமது நலக் குறித்துக் கவனிக்கவில்லை என்று மிகவும் கோபப்பட்டார்கள். இணையத்தில் அல்ல பத்திரிகைகளில் எழுதினால்தான் இவர்களது முகமூடி கிழியும் என்றும் சொன்னார்கள்.
மலேசியர் தம்மைச் சிறப்பாக உபசரித்தனர் என்று சொன்ன இவர்கள் அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. தம்மைக் கவனிக்காத இலங்கைக் குழுவை கிழி கிழியெனக் கிழிக்க வேண்டுமாம். அதுவும் அவர்கள் சிக்கல் பட்டமைக்காக நாம் பத்திரிகையில் எழுத வேண்டுமாம். அதாவது அவர்களுக்காக நாம் எழுத வேண்டுமாம். எழுத முடிந்த அவர்கள் எழுதமாட்டார்கள். நாம்தான் எழுத வேண்டும்.
தமக்கு அதை எழுதத் தைரியமும் இல்லை. தம்மை அடையாளம் காட்ட விருப்பமும் இல்லை. எவ்வளவவு கேவலமான மனோ நிலை இது. எல்லோரையும் விட ஆபத்தானவர்கள் இவர்கள்தாம். இவ்வாறு சொன்னவர்களுக்கு நாம் சொன்ன பதில் ‘குழுவில் உள்ள எந்தவொரு நபருடனும் நமக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. என்ன நடக்கும் என்பதை நாம் ஏற்கனவே சொல்லி விட்டோம். சிக்கலில் மாட்டிக் கொண்து நாம் அல்ல... நீங்கள் மாட்டியிருந்தால் நீங்களே எழுதுங்கள்’ என்பதுதான்.
இவர்கள் சொன்னதற்காக விபரங்களைக் கோரி நாம் பத்திரிகைகளில் எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நமக்குத் தெரியாமலேயே இலங்கைக் குழுவில் உள்ளோரிடம் தொடர்பு கொண்டு ‘பாருங்கள்... மாநாட்டுக்கும் வராமல் இப்படி மோசமாக எழுதுகிறார்கள்’ என்று சொல்லித் தம்மைச் சுத்திகரித்துக் கொள்வார்கள். பின்னர் நம்மைத் தொடர்பு கொண்டு எழுதியமைக்காக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள்.
மலேசியா அழைத்துச் செல்வதற்கான குழுவில் கௌரவ அமைச்சரால் பெயர் குறிப்பிடப்பட்டவர்களை விடப் பின்னர் சிலர் அக்குழுவில் சேர்ந்து அல்லது சேர்த்துக் கொள்ளப்பட்டனர். எல்லோருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன. அதிலுள்ள சிலர் நாட்டில் என்ன குழுப் போட்டாலும் அதில் கௌரவ அங்கத்துவம் வகிப்பார்கள்.
எனவே இக்குழுவவுடன் செல்வதற்கு முன்னர் இவர்கள் நமது நலன்களைக் கவனிப்பார்களா...? இவர்கள் இதற்கு முன்னர் களத்தில் இறங்கிக் காரியமாற்றியவர்களா....? இவர்களில் எத்தனை பேர் முக்கியத்துவம் எதிர்பார்ப்பவர்கள்? எத்தனை பேர் பிரமுகர் அந்தஸ்துடன் இருப்பவர்கள்...? இவர்கள் எல்லோருடனும் இணைந்து செல்லக் கூடியவர்களா? என்பதைத் தெரிந்து கொண்டே சென்றிருக்க வேண்டும். ஆகக் குறைந்தது விமானச் சீட்டின் விலைகளில் குளறுபடிகள் நிகழும் போதும் தகவல்களை விசாரிக்கும் போது கிடைத்த பதில்களையும் கொண்டு தம்மைச் சுதாகரித்திருக்க வேண்டும். எது நடந்தாலும் செல்வது என்று முடிவு எடுத்து விட்டுப் பின்னர் தமக்காக வேறு யாராவது அழ வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!
குழுவில் இடம் பெற்றிருந்த சிலருக்கே கூட என்ன நடக்கிறது என்பது புரியாமலிருந்ததைத் தெரிந்து கொண்டேதான் புறப்பட்டுச் சென்றார்கள்.
இலங்கையிலிருந்து மலேசிய விழாவுக்குச் சென்றவர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் தெரியவில்லை. அது தெரிவும் வராது. காரணம் அதில் இலக்கியவாதிகள் வெகு சொற்பத் தொகையினரே. 160 பேர் செல்கிறார்கள் என்று குழுவினரால் பயணத்துக்கு முன் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போனால் போகட்டும் என்று நாம் ஒரு பத்துப் பேரைக் கூட்டி நூற்று எழுபது பேர் என்று குறிப்பிட்டிருந்தோம்.
இலங்கை சார்பில் கலந்து கொண்ட இலக்கியவாதிகள் யார் யார் என்று நாம் பார்க்கலாம். குழுவில் உள்ளவர்களில் 01.மருதூர் ஏ மஜீத் 02. தாசிம் அகமது 03. புர்கான் பீ இப்திகார் (இவர் ஊடகவியலாளர் என்ற போதும் சிறுகதைகளை அவ்வப்பொது எழுதுபவர்) கவிதை படித்த இருவர் - 04. நஜ்முல் ஹூஸைன் 05. பொத்துவில் அஸ்மின் ஏனையயோர் - 06. எஸ். முத்துமீரான் 07. மானா மக்கீன் 08. டாக்டர் ஜாபிர் 09. ஹஸன் மௌலானா 10. ரீ.எல்.ஜவ்பர்கான் 11. காத்தான்குடி பௌஸ் 12. பதியத்தலாவ பாரூக் 13. பாலமுனை பாரூக் 14. சாந்தி முகைதீன் - இவர்களோடு குழுத் தலைவர் எஸ்.எச்.எம். ஜெமீலையயும் சேர்த்துக் கொள்ளலாம். ஆக மொத்தம் 15 பேர்.
நமக்கு இதுவரை தெரியவராமல் இன்னும் சிலர் இருக்கலாம். இலக்கிய ஆர்வலர்கள் சிலரும் இருக்க இடமுண்டு. எப்படிக் கூட்டிப் பார்த்தாலும் இலக்கியத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று 30 பேருக்கு மேல் தாண்டாது. இதுதான் நாம் மலேசிய இஸ்லாமியப் பெருங்குடி மக்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டியது.
ஆனால் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழுவவுக்கு இலக்கியவாதிகள்தாம் வரவேண்டும் என்ற எந்த அவசியம் இருக்கவில்லை. பங்கு கொள்ளும் தலைகள் அதிகம் இருந்தால் போதுமானதாக இருந்தது. இங்கிருந்து நான்கு பாம்பாட்டிகளை அழைத்துச் சென்றிருந்தாலும் அவர்களுக்குச் சந்தோசம்தான். இந்த வகையில் அவர்களுக்கு மாபெரும் வெற்றி.
குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழுவின் வரைபின்படி அதிக இலக்கியவாதிகள் அவ்விழாவில் பங்கெடுத்துக் கொள்ள முடியாது. ஒரு நாட்டுக்கு இவ்வளவவுதான் என்ற வரையறையோடுதான் அவர்கள் உலாத்தினார்கள். ஆள் சேர்த்தார்கள். எனவே அவர்களது நோக்கம் பாரிய அளவிலான இலக்கிய முன்னெடுப்பு என்று ஒரு போதும் ஆகாது.
குறைந்த இலக்கியவாதிகளும் கூடிய பேராளர்கள் அல்லது பார்வையாளர்களும் கலந்து கொள்வதற்கே அவர்கள் திட்டம் தீட்டியிருந்தார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் அரசியல்வாதிகளால் ஆள் சேர்க்க முடியயும் என்பது அவர்களது முடிவு. அந்த அளவில் அவர்களுக்குப் பாரிய வெற்றி.
இலங்கையிலிருந்து 160 பேர் போகவில்லை என்று வையயுங்கள். அங்கு நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று சென்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இவ்வளவவு செலவழித்து அத்தி பூத்தாற்போல் நடத்திய ஒரு மாபெரும் நிகழ்வில் பல நூறு இலக்கியவாதிகள் கலந்து கொள்ளுமாப்போல் செய்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
கடைசியில் வருடாவருடம் நடக்கும் பேருவலைக் கந்தூரி போல் ஆள் கூட்டிச் சாப்பாடு போட்டு விழாவை நடத்திய மலேசியக் குழுவினர் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் வரலாற்றில் தமது பெயர்களைப் பொன்னெழுத்துக்களால் பொறித்து விட்டதாக இறுமாந்து போயிருக்கிறார்கள் போல் தெரிகிறது.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2 comments:
"அவர்கள் சிக்கல் பட்டமைக்காக நாம் பத்திரிகையில் எழுத வேண்டுமாம். அதாவது அவர்களுக்காக நாம் எழுத வேண்டுமாம். எழுத முடிந்த அவர்கள் எழுதமாட்டார்கள். நாம்தான் எழுத வேண்டும்."
ஹா ..ஹா.. சிரிக்கவும் முடியவில்லை.. சேர் உங்களிடம் ”தில்” இருக்கிறது அதான் உங்களத்
தேடி வராங்க.. பாவம் போனா போவுது எழுதி போடுங்க பொழச்சி போகட்டும்.. சூடு பட்டு Return ஆயிருக்காங்களா..? நல்லது.. நல்லது...
//இங்கிருந்து நான்கு பாம்பாட்டிகளை அழைத்துச் சென்றிருந்தாலும் அவர்களுக்குச் சந்தோசம்தான்//
அதுமட்டுமல்ல நான்கு பாம்புகள் (?)கலந்துகொண்ட இலக்கிய விழா என்று உலகே பெருமைப்பட்டிருக்கும்.
அப்படித்தானே!
Post a Comment