Thursday, June 2, 2011

மாட்டுக்கு மாலை போடு….


சகோதரர் பொத்துவில் அஸ்மின் ஒரு சிறந்த மரபுக் கவிஞர். புதுக் கவிதையிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. இன்று எனது மின்னஞ்சலுக்கு அவர் அனுப்பியிருந்த மரபுக் கவிதை என்னை மிகவும் கவர்தது. உங்களையும் கவரும் என்பதால் அதை இங்கு தருகிறேன்.


மாட்டுக்கு மாலை போடு….



காலினைப் பிடித்தேன் என்றன்
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எழுத்திலே காணின் ஏதும்
எழுதுவீர் அதுவே போதும்!

வாலினை பிடிப்ப வர்தான்
வாழுவர் தெரியும் கெட்ட

தேளினை பிடித்தோர் கூட
தேம்புவர் எனவே உங்கள்

காலினைப் பிடித்தே னையா
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

கழுதையும் குரங்கும் மாடும்
கழுத்திலே மாலை பூண்டு…

மூலைக்கு மூலை கூடி
“முதுகினை சொறிந்து” எங்கும்

“போட்டோக்கு” பல்லைக் காட்டி
“போஸினை’’ கொடுத்து பின்னர்

எங்களை வெல்லும் கொம்பன்
எவனடா இங்கு உண்டு…?

என்றுதற் புகழ்ச்சி தன்னில்
எம்பித்தான் குதிக்கும் போது

அற்பன்நான் அவைகள் பாத
அடியிற்கு இன்னும் கீழே

ஆகையால் மாலை வாங்க
அடியேனுக் காசை யில்லை

காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

மாண்டுநாம் மடிந்த பின்தான்
மனதினால் மாலை இடுவர்

ஈண்டிவர் போடும் மாலை
இதயத்த லல்ல வேசம்..

மாலையில் மாலை போட்டு
மாலைதான் மறையுமுன்னே

கூழையன் நாங்கள் போட்ட
“கூழுக்கு” ஆடிப் போனான…

ஆளினைப் பிடித்து வைத்தால்
ஆளலாம் என்பீர் உங்கள்

காலினைப் பிடித்தேன் ‘’வாப்பா’’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எலும்புக்காய் எச்சிலைக்காய்
எங்கள்நாய் வாலை ஆட்டும்

பிணமான பின்தான் உண்மை
பிரியத்தை அதுவும் காட்டும்

ஆகையால் மாலை சூட்ட
ஆருமே வராதீர் தேடி!

எழுத்திலே ஏதும் காணின்
எழுதுவீர் அதுவே கோடி!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கவைத்த கவிதை..

வெகு நாளைக்கு பிறகு ஒரு மரபு கவிதை வாசித்திருக்கிறேன்...

பி.அமல்ராஜ் said...

உண்மை.. அழகான வரிகள். வாசிக்கும் பொழுதே அந்த 'கவிதை' உணர்வு/சுவாரஸ்யம் அலாதியாய் பொங்குகிறது.. வாழ்த்துக்கள் அஸ்மின்.

Shaifa Begum said...

”காலினைப் பிடித்தேன் ‘’வாப்பா’’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!
எழுத்திலே காணின் ஏதும்
எழுதுவீர் அதுவே போதும்!"

என்னதான சொன்னாலும்..
கோடி தான் கொடுத்தாலும்
அசையாது இவர்கள் மனம்..

அஸ்மின் உங்கள் ஒவ்வொரு வரியும் ஆணி அடிக்கிறாற் போல்
இருக்கிறது. இந்த வயதில் இப்படியொரு கவித்திறமை உங்களில் !!!
அதிசய வைக்கும் இந்த திறமையை சமூக மாற்றங்களுக்காகவும்
இணைத்து கொளளுங்கள்.. கவிதைகள் நிறைய எதிர்பார்க்கிறோம்...
எழுதுங்கள்..

வாழ்த்துக்கள்...

சேர் உங்களுக்கும் நன்றிகள்...